அய்யப்பன் அவதரித்த வரலாறு
Page 1 of 1
அய்யப்பன் அவதரித்த வரலாறு
காலவ மகிஷியின் மகளான லீலாவதி ஒரு சாபத்தின் விளைவாக மகிஷியாக பிறந்தாள். தனது சகோதரன் மகிஷாசுரணை ஆதிபராசக்தி அழித்ததால் பிரம்மனை நோக்கி கடும் தவம் இருந்தாள். வரம்பெற்ற அவள் தேவர்களையும், முனிவர்களையும் துன்புறுத்தினாள். பிரம்மாசரனை அழிக்க மோகினி அவதாரம் எடுத்த விஷ்ணுவை கண்டு சிவபெருமாள் மோகம் கொண்டார்.
இதன் விளைவாக அய்யப்பன் அவதாரம் நிகழ்ந்தது. அரிகர புத்திரனாக மணிகண்டன் அவதரித்தார். குழந்தையின் கழுத்தில் மணிமாலை இட்டுவிட்டு அவர்கள் இருவரும் மறைந்தனர். காட்டுக்கு வேட்டையாட வந்த பந்தளநாட்டு மன்னன் ராஜசேகரன் குழந்தையை கண்டெடுத்து அதற்கு மணிகண்டன் என்று பெயரிட்டு சீரும் சிறப்புமாக வளர்த்தான்.
இந்த நிலையில் ராணி, ராஜராஜன் என்ற மகனை பெற்றெடுத்தாள்.
மந்திரியின் துர்போதனையால் அவள் மதிமயங்கினாள். சதி திட்டம் தீட்டப்பட்டது. ராணி தலைவலியால் துடித்தாள். குணப்படுத்த வைத்தியர் புலிப்பால் வேண்டும் என்றார். மன்னன் அதிர்ச்சி அடைந்தான். புலிப்பாலை கொண்டுவர 12 வயது ஆன மணிகண்டன் புறப்பட்டார்.
பம்பை ஆற்றங்கரையில் மணிகண்டனுக்கும், மகிஷிக்கும் இடையே கடும் யுத்தம் நடந்தது. முடிவில் மகிஷி வீழ்ந்தாள். லீலாவதியாக அவள் சாப விமோசனம் பெற்றாள். அய்யனை தன்னை ஏற்றுக்கொள்ளுமாறு திருவடி பணிந்து நின்றாள். அய்யன் நித்ய பிரம்மச்சாரி என்றைக்கு தன்னைத்தேடி கன்னி அய்யப்பன்மார்கள் வராமல் இருக்கிறார்களோ அன்று அவளை மணந்து கொள்வதாக கூறி தமது இடப்பக்கத்தில் மாளிகைபுறத்து மஞ்சள் மாதாவாக வீற்றிருக்க அருள்பாலித்தார்.
இந்திரன் புலி வடிவம் தாங்கிட அய்யப்பன் அதன்மீதேறி நாடு திரும்பினார். அதைக் கண்டு மிரண்ட ராணி, தன்னை மன்னிக்குமாறு வேண்டினாள். அய்யப்பன் தமது அவதார நோக்கினை எடுத்துக்கூறி தர்மசாஸ்தாவான தனக்கு விடை கொடுக்குமாறு வேண்டினார். இதைக்கேட்டதும் ராஜசேகர மன்னன் மனம் உடைந்தார்.
அவர் திருப்திக்காக அய்யப்பன் சபரிமலையில் தங்கி இருக்க சம்மதித்தார். சபரி என்ற யோகியின் நினைவாக அந்த இடம் சபரிமலை என்றழைக்கப்படுகிறது. இருமுடி கட்டி தம்மை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு ஆண்டு தோறும் மகரசங்கராந்தி அன்று அய்யப்பன் ஜோதி வடிவில் இன்றும் அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார்.
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» அய்யப்பன் அவதரித்த வரலாறு
» அய்யப்பன் வரலாறு
» அய்யப்பன் வரலாறு
» அய்யப்பன் சிலை வரலாறு
» அய்யப்பன் உபதேசம்
» அய்யப்பன் வரலாறு
» அய்யப்பன் வரலாறு
» அய்யப்பன் சிலை வரலாறு
» அய்யப்பன் உபதேசம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum