நா...ஊறும் சுவையான... மட்டன் கபாப்!!!
Page 1 of 1
நா...ஊறும் சுவையான... மட்டன் கபாப்!!!
மட்டன் உடலுக்கு குளிர்ச்சியை தரும். அந்த மட்டனை வைத்து இதுவரை மட்டன் குழம்பு, மட்டன் சுக்கா என்று தான் செய்து கொடுத்திருப்போம். ஆனால் இப்போது அந்த மட்டனை வைத்து குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் ஒரு ஸ்நாக்ஸ் போல மட்டன் கபாப் செய்து தரலாம். மேலும் இந்த மட்டன் கபாபை ஸ்லைசாக நறுக்கி ப்ரெட்டுடன் சாஸ் வைத்து சாண்விட்ச் போலவும் செய்து கொடுக்கலாம். அது எப்படியென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள் :
மட்டன் கொத்துக்கறி - 1 கிலோ
இஞ்சிபூண்டு விழுது - 3 டேபிள் ஸ்பூன்
வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
பப்பாளிக் காய் பேஸ்ட் - 3 டேபிள் ஸ்பூன்
மிளகாய்த் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலாத் தூள் - 1/4 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் - 2
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
முதலில் வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பிறகு மட்டனை நன்கு சுத்தமாக கழுவி, தண்ணீரில்லாமல் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
பிறகு ஒரு பாத்திரத்தை எடுத்துக் கொண்டு அதில் மட்டன், வெங்காயம், இஞ்சிபூண்டு விழுது, வெண்ணெய், பப்பாளிக் காய் பேஸ்ட், மிளகாய்த் தூள், கரம் மசாலாத் தூள் மற்றும் உப்பு சேர்த்துப் பிசைந்து வைத்துக் கொள்ளவும்.
பின் அந்த கலவையை இரண்டு மணிநேரம் ஃப்ரிட்ஜில் வைத்து நன்கு ஊற வைக்கவும்.
பிறகு அதனை எடுத்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றிக் கொள்ளவும். பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு எண்ணெய் ஊற்றி சூடேற்றவும்.
எண்ணெயானது காய்ந்ததும், அந்த கலவையை கட்லட் போல் வட்டமாக தட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
இப்போது சுவையான மட்டன் கபாப் ரெடி!!! இதன் மேல் கொத்தமல்லி மற்றும் புதினாவைத் தூவி அலங்கரித்து பரிமாறலாம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» 'நா' ஊறும் ஆலு-65!!!
» நா...ஊறும்... முட்டை சாப்ஸ்!!!
» நா ஊறும் அக்கார அடிசல்
» நா...ஊறும்... முட்டை ஸ்பாஞ்ச் ரெசிபி!!!
» ஹராபரா கபாப்
» நா...ஊறும்... முட்டை சாப்ஸ்!!!
» நா ஊறும் அக்கார அடிசல்
» நா...ஊறும்... முட்டை ஸ்பாஞ்ச் ரெசிபி!!!
» ஹராபரா கபாப்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum