வெளிநாடுகளில் யோக வாழ்க்கை யாருக்கு சிறப்பாக அமையும் ?
Page 1 of 1
வெளிநாடுகளில் யோக வாழ்க்கை யாருக்கு சிறப்பாக அமையும் ?
வெளிநாடுகளில் யோக வாழ்க்கை யாருக்கு சிறப்பாக அமையும் ?
வெளிநாடுகளில் யோக வாழ்க்கை யாருக்கு சிறப்பாக அமையும் ?
அயல் நாடுகளில் ஒருவருக்கு மிக சிறப்பான வேலை அமைந்து ,கைநிரைவாக வருமானம் பெற்று தனது தாய் நாட்டில் வாழும் , தனதுஉறவுகளின் சந்தோசம் மட்டுமே முக்கியம் என்று தனதுவாழ்க்கையை பணயம் வைத்து கடும் உழைப்பால், முன்னேற்றம்அடைந்து தானும் நன்றாக வாழ்ந்து, தன்னை சார்ந்தவர்களையும்நன்றாக வாழ வைக்கும் ஜாதக நிலைகளை பற்றி கொஞ்சம் ஆய்வுசெய்வோம் !
6 ம் வீடு
முதலில் வெளி நாடு செல்வதற்கு ஒரு ஜாதகத்தில் ஆறாம் வீடு சரராசியாகவோ( மேஷம், கடகம், துலாம், மகரம் ஆகியவை சர ராசிகளாகும்) , ஸ்திர ராசியாகவோ( ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ஆகியவை ஸ்திர ராசிகளாகும்) அமைந்து, ஆறாம் பாவகம் 100 சதவிகிதம் நன்றாக அமைந்து அந்த ராசி மண் தத்துவம் (ரிஷபம்,கன்னி, மகரம்) அல்லது நீர்தத்துவம் (கடகம், விருச்சிகம். மீனம்) அமைப்பை பெற்று இருக்குமாயின் ஜாதகருக்கு வெளிநாடுசெல்வதற்கு , எந்தவித தடைகளும் ஏற்ப்படாமல் பயணம்மேற்கொள்ள வசதி வாய்ப்புகளை நிச்சயம் வழங்கும் , பயணங்களில்எந்தவிதமான உடல் தொந்தரவுகளோ அல்லது சட்ட சிக்கல்களோஏற்ப்படாமல், இனிமை நிரந்த பயணமாக அமையும் .
மேலும் மற்ற நாடுகளில் உள்ள உணவு வகைகளை ஏற்றுகொள்ளும்உடல் அமைப்பு , சீதோசன நிலையை ஏற்றுகொள்ளும் உடல்அமைப்பு , வெளிநாடுகளில் வாழும் மக்களின் முழு ஆதரவுஅவர்களின் ஒத்துழைப்பு என, பல விஷயங்களை நல்ல முறையில்அமைய நிச்சயம் இந்த 6 ம் வீடு 100 சதவிகிதம் நன்றாக இருக்கும் .
8 ம் வீடு
இரண்டாவது ஜாதகர் வெளிநாடு வந்தாகிவிட்டது, தான் வேலைசெய்யும் இடத்தில் உள்ளவர்களின் முழு ஒத்துழைப்பும் , தனது மேல்அதிகாரியின் உதவியும் , தான் தங்கும் இடத்தின் தன்மையும் , அங்கேஅமையும் சிறப்பான வசதிகளும்.
பணியில் விரைவான முன்னேற்றமும், பயணம் செய்ய நல்ல வாகனவசதியும் , பயணம் செய்யும் காலங்களில் எவ்வித பாதிப்பையும்தராத நிலையும் ஜாதகருக்கு அமைய வேண்டுமெனில், ஜாதகத்தில் 8 ம் வீடு சர ராசியாகவோ( மேஷம், கடகம், துலாம், மகரம் ஆகியவை சர ராசிகளாகும்) , ஸ்திர ராசியாகவோரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ஆகியவை ஸ்திர ராசிகளாகும்) இருந்து 100 சதவிகிதம்நன்றாக
அமைந்து .
8 ம் வீடு மண் தத்துவம்(ரிஷபம்,கன்னி, மகரம்) அல்லது நீர் தத்துவம்(கடகம், விருச்சிகம். மீனம்) அமைப்பை பெற்றுஇருக்க வேண்டும் . மேலும் ஜாதகருக்கு கேளிக்கைகள் , விளையாட்டு, நல்ல பொழுது போக்கு அமைய வேண்டும் எனில் இந்த 8 ம் வீடு 100சதவிகிதம் நன்றாக இருப்பது நலம் தரும் .
12 ம் வீடு
முன்றாவதாக ஜாதகர் வெளிநாடு சென்று ஒரு நல்ல வேளையில்அமர்ந்து , அனைத்து வசதிகளையும், அனுபவிக்கும் யோகத்தைபெற்றாகி விட்டது , சரி இனி ஜாதகர் சம்பாதிக்கும் அனைத்தும் தனதுசந்ததியினருக்கும் சேமித்து பாதுகாக்கும் தன்மை , அந்தநாட்டு குடிஉரிமையை பெறுவதில் எவ்வித சிக்கல்களும் அற்ற நிலை .
வெளிநாடு செல்லும் பொழுதும் , வரும்பொழுதும் பாதுகாப்பானபயணம் , வெளிநாடுகளில் இருக்கும் பொழுது ஜாதகருக்குநிம்மதியான வாழ்க்கை , அங்கேயே ஒரு நல்ல வாழ்க்கைதுணையை அமைத்து கொள்ளும் தன்மை , நல்ல உணவு , தாய்நாட்டில் இருப்பவர்களால் எவ்வித தொல்லையும் அற்ற நிலை ,நிரந்தர வேலை , அந்த வேலையில் ஜாதகரின் ஈடுபாடு அதனால்ஜாதகருக்கு ஏற்ப்படும் முன்னேற்றம் , நல்ல ஆடை ஆபரணசேர்க்கை , நல்ல சுக போகங்களை அனுபவிக்கும் யோகம்அனைத்தையும் ஜாதகருக்கு அளிப்பது 12 ம் பாவகமே , அதற்க்குஇந்த 12 ம் வீடு சர ( மேஷம், கடகம், துலாம், மகரம் ஆகியவை சர ராசிகளாகும்)அல்லது ஸ்திர( ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ஆகியவை ஸ்திர ராசிகளாகும்)
ராசியாக வந்து , மண் (ரிஷபம்,கன்னி, மகரம்)அல்லது நீர்தத்துவத்தை(கடகம், விருச்சிகம். மீனம்) பெற்று 100 சதவிகிதம் நன்றாக இருப்பது அவசியம் .
மேற்கண்ட அமைப்பை பெற்று ஜாதகருக்கு லக்கினம் நன்றாகஇருந்து நடக்கும் திசை, புத்தி, அந்தரம், சூட்சமம் 6 8 12 வீடுகளின்பலனை நடத்துமாயின் ஜாதகர் நிச்சயம் வெளிநாடுகளில் சகலயோகத்தையும் அனுபவிக்கும் தன்மையை தடையில்லாமல்நிச்சயம் தரும் என்பதில் சந்தேகமே இல்லை .
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» 7ல் சனி இருந்தால் மண வாழ்க்கை சிறப்பாக இருக்காது என்று கூறப்படுகிறதே?
» என் படங்கள் தமிழர்களைப் பெருமைப்படுத்தும் விதமாகவே அமையும் – ரஜினி
» எந்த ராசிக்காரருக்கு,அழகான மனைவி அமையும் ?
» ஸ்ரீனிவாசர் திருக்கல்யாணம் சிறப்பாக நடந்தது
» ஸ்ரீனிவாசர் திருக்கல்யாணம் சிறப்பாக நடந்தது
» என் படங்கள் தமிழர்களைப் பெருமைப்படுத்தும் விதமாகவே அமையும் – ரஜினி
» எந்த ராசிக்காரருக்கு,அழகான மனைவி அமையும் ?
» ஸ்ரீனிவாசர் திருக்கல்யாணம் சிறப்பாக நடந்தது
» ஸ்ரீனிவாசர் திருக்கல்யாணம் சிறப்பாக நடந்தது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum