தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

காபா முன்பு சிவாலயமாக இருந்ததா?

Go down

காபா முன்பு சிவாலயமாக இருந்ததா? Empty காபா முன்பு சிவாலயமாக இருந்ததா?

Post  meenu Mon Feb 04, 2013 5:24 pm


[சீதா ராம் கோயல் எழுதிய Islam vis-à-vis Hindu Temples (1993, Voice of India publication) என்ற நூலின் கடைசி அத்தியாயத்தின் மொழியாக்கம் இது. இந்த விஷயம் பற்றி இந்துத் தரப்பிலிருந்து தெளிவான, கூர்மையான வரலாற்றுக் கண்ணோட்ட்த்துடன் எழுதப் பட்ட கட்டுரை இது.
இணையமும் தகவல் தொழில் நுட்பமும் பெரிதாக வளராத 1990களில் சீதாராம் கோயல் இதை எழுதியிருக்கிறார் என்பதை எண்ணிப் பார்க்கையில் பிரமிப்பும் அவர் மீது பெரும் மரியாதையும் ஏற்படுகிற்து. அவரது புனித நினைவுக்கு இந்த மொழியாக்கம் சமர்ப்பணம்].

காபா முன்பு ஒரு சிவாலயமாக இருந்து பிறகு முகமது நபியால் மசூதியாக மாற்றப் பட்டது என்ற கருத்தை முன்வைக்கும் ஒரு கட்டுரையை சில வருடங்கள் முன்பு படித்தேன். அந்தக் கட்டுரையின்படி அப்போது காபாவின் பிரதான தெய்வமாக இருந்த மகாதேவரைக் குறித்த ஒரு நீளமான பழைய அரபி மொழிப் பாடலும் அதில் கொடுக்கப் பட்டிருந்தது. பொ.மு. முதல் நூற்றாண்டில் உஜ்ஜயினியை ஆண்ட விக்கிரமாதித்தன் காலத்தில் இயற்றப் பட்ட பாடல் அது என்றும் அந்தக் கட்டுரை சொன்னது.
[பொ.மு: பொதுயுகத்திற்கு முன், Before Common Era, BCE. பொ.பி: பொதுயுகத்திற்குப் பின், Common Era, CE]
அந்தக் கட்டுரையைப் படித்த எனது நண்பர் ஒருவர் ஆர்வ மேலீட்டால் ஒரு காரியத்தில் இறங்கினார். இப்போது நமக்குக் கிடைத்துள்ள இஸ்லாமுக்கு முந்தைய காலகட்டத்திய அரபு இலக்கியத் தொகுப்புகள் எல்லாவற்றையும் அலசி அதில் இந்தப் பாடல் இருக்கிறதா என்று தேட முயன்றார். இதற்காக வெளிநாடுகளில் உள்ள பல நூலகங்களையும் தொடர்பு கொண்டார். ஆனால் எதுவும் கிடைக்கவில்லை. எனவே, ”உலகின் எல்லா இடங்களிலும் உள்ள பல பழைய கட்டிடங்களும் ஏதோ ஒரு காலத்தில் ஹிந்து சின்ன்ங்களாக இருந்தவையே” என்பதான அரிய கருத்துக்களைக் கூறும் மரபைச் சேர்ந்த “ஹிந்து வரலாற்றாசிரியர்களின்” இன்னொரு தயாரிப்பாக இருக்கக் கூடும் என்று கருதி நானும் அவரும் அந்தக் கட்டுரையை முழுவதுமாக நிராகரித்து விட்டோம்.
ஆனால் தற்போதைய ஆய்வின் போது நான் கண்டறிந்த சில தகவல்கள் எனது தீர்ப்பை மாற்றிக் கொள்ள என்னைத் தூண்டுகின்றன. காபா ஒரு சிவாலயமாகத் தான் இருந்தது என்று அறுதியிட்டு இப்போதும் என்னால் கூறமுடியாது தான். ஆனால் சான்றுகளின் அடிப்படையில் பார்த்தால், காபா ஒரு புகழ்பெற்ற ஹிந்து புனிதத் தலமாக இருந்தது என்ற முடிபை ஒரேயடியாகத் தள்ளி விடமுடியாது. இந்த ஆய்வுத் தகவல்கள் எப்படி வேண்டுமானாலும் மதிப்பிடப் படட்டும். இந்தக் கட்டுரையில் அவற்றை முன்வைக்கிறேன்.
காபா வரைபடம்
பண்டைய அரேபியாவில் இந்துக்கள்
பண்டைய இந்தியாவில் தமிழகம், கேரளம், மகாராஷ்டிரம், குஜராத், சிந்த், பலுசிஸ்தான், மக்ரான் ஆகிய பிரதேசங்களின் கடற்கரைகளில் பல துறைமுகங்கள் இருந்தன. (மக்ரான் – Makran – இன்றைய ஈரான், பாகிஸ்தானின் சில பகுதிகளை உள்ளடக்கிய கடற்கரைப் பிரதேசம், ஒரு காலத்தில் இந்தியாவின் அங்கமாக இருந்தது). இத் துறைமுகங்கள் ஹரப்பா நாகரிகத்திற்கு முந்தைய காலகட்டத்திலிருந்தே பணப் புழக்கம் மிகுந்த, தொடர்ச்சியான கடல் வணிகத்தில் ஈடுபட்டு வந்தன எனபதற்கு இப்போது ஏராளமான அகழ்வுச் சான்றுகளும், இலக்கியச் சான்றுகளும் உள்ளன. மேலதிக சான்றுகளும் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கின்றன1.
சீனா, மலேசியா, இந்தோனேசியா, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகள் ஒரு பக்கத்திலிருந்தும், ஈரான், அரேபியா, எதியோப்பியா, எகிப்து, மேற்கு ஆசியா, ஐரோப்பா மறு பக்கத்திலிருந்தும் இந்த வணிகத்தில் பங்கேற்றன. இந்தியாவிலிருந்து உணவுப் பொருட்களும், உலோகங்களும், பல்வேறு தொழில்சார்ந்த தயாரிப்புகளும் ஏற்றுமதி செய்யப் பட்டது இந்த வணிகத்தின் முக்கிய அம்சமாக இருந்தது. அரபிக் கடல், பாரசீக வளைகுடா, செங்கடல், மத்திய தரைக்கடல் ஆகியவற்றின் கரைகளை ஒட்டிய நாடுகளின் கடற்கரைப் பிரதேசங்களிலெல்லாம் இந்திய வணிகர்களின் குடியிருப்புக்கள் இருந்தன. மேற்குறிப்பிட்ட இந்தியத் துறைமுகப் பகுதிகளிலும் அரேபிய, ஈரானிய, எதியோப்பிய, எகிப்திய, சிரிய, ஐரோப்பிய வணிகர்களின் குடியிருப்புக்கள் இருந்தன. மற்ற அனைவரையும் விட எதியோப்பிய, அரேபிய வணிகர்களே அதிகமாக இருந்தனர்.
இஸ்லாம் தோன்றிய காலகட்டத்தில் அரேபியாவில் இந்துக்கள் கணிசமான அளவில் இருந்தனர் என்பதற்கு இப்னு இஷாக் (Ibn Ishaq) சான்று பகர்கிறார். அபிசீனியர்கள் ஏமன் நாட்டின் மீது படையெடுத்தபோது அரபிகளில் சக்தி வாய்ந்த ஹிமாய (Himayrite) பழங்குடியின் தலைவர் ஸாயிஃப் தூ யஜான் (Sayf b. Dhû Yazan) ஈரானிய அரசர் குஸ்ருவிடம் (Chosroes) உதவி கேட்கப் போகிறார். அவர் சொல்கிறார் “அரசே, கருங்காக்கைகள் (ravens) எங்கள் நாட்டை ஆக்கிரமித்து விட்டன”. குஸ்ரு கேட்கிறார், “எந்தக் காக்கைகள்? அபிசினீயர்களா, சிந்தியர்களா?”2
காக்கைகள் என்பது கறுப்பின மக்களைக் குறிக்கும் சொல். அந்தக் காலகட்ட்த்தில் அரேபியர்களும், ஈரானியர்களும் இந்தச் சொல்லால் இந்தியர்களையும், அபிசீனியர்களையும் அடையாளப் படுத்தினர்.
இன்னொரு சான்று. முகமது நபியைப் பார்ப்பதற்காக பி அல் ஹாரித் (B. al-Hãrith) குழு வந்திருந்தது. “அவர்கள் நபியிடம் வந்தபோது, இந்தியர்களைப் போன்று தோற்றமளிக்கும் இவர்கள் யார்?” என்று நபி கேட்டார். அவர்கள் பி அல் ஹாரித் பி காப் (B. al-Hãrith b. Ka’b.) குழுவினர் என்று சொன்னார்கள்”3. இதன்மூலம் முகமது நபியவர்களுக்கு இந்தியர்களைப் பற்றி நன்கு பரிச்சயம் இருந்தது என்றே தோன்றுகிறது.
இஸ்லாமுக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்த “வத்” (Wadd) என்ற அரேபிய தெய்வத்தின் உருவம் குறித்து அறிஞர் Ch.முகமது இஸ்மாயில் இவ்வாறு எழுதுகிறார் (‘An Image of Wadd: A Pre-Islamic Arabian God’ என்ற கட்டுரை) -
“பழைய அரபுப் பதிவுகளின் படி, வத் நெடிய உருவம் கொண்டவர்; இடையில் குறுக்காகக் கட்டப் பட்ட துணியும், அதன் மீது வேறொரு துணியும் கொண்ட ஆடையணிந்தவர்; வாள், வில், அம்பறாத்துணி ஆகிய ஆயுதங்களைத் தாங்கியவர். அவரது உருவத்திற்கு முன்பாக, ஒரு உலக்கையும் அதனுடன் இணைந்த ஒரு கொடியும் சித்தரிக்கப் படும்.
இது இங்கு கொடுக்கப் பட்டுள்ள அகழாய்வில் கிடைத்த ’வத்’ சிற்ப உருவத்துடன் பொருந்துவதில்லை என்று பார்த்தவுடன் தெரிகிறது. இந்தப் படத்தில் ஒரு குள்ள உருவம், ஸ்காட்லாந்து படைவீரர்கள் போன்று மடிப்புகளுடன் கூடிய, பாவாடை போன்ற உடையணிந்திருப்பதாகக் காட்டப் படுகிறது. தலையில் உள்ள தொப்பியில் ஆரம் போன்று தொங்கும் இழைகள் நீண்ட மயிர்க்கற்றைகளைக் குறிப்பதாகக் கொள்ளலாம்.
இன்றைய காலகட்டத்தில் கூட, கிராமப்புறங்களில் இருந்து ஏமன் நாட்டின் ஏடன் (Aden) துறைமுக நகருக்கு வரும் பதூனிகள் (Beduins – ஒட்டகம் வளர்க்கும் அரபு பழங்குடியினர்) தங்கள் தலையின் கீழ்ப்பகுதியை சிரைத்துக் கொள்வதையும், உச்சியில் சிறு குடுமி வைத்துக் கொள்வதையும், சில சமயம் இந்துக்களைப் போன்று நீண்ட கூந்தலை குடுமியாக அள்ளி முடிவதையும் காண முடியும். இதன் அடிப்படையில், அரேபிய மக்களுக்கும் சிந்து சமவெளி மக்களுக்கும் தொடர்பு இருந்திருக்குமோ என்ற எண்ணம் எனக்குத் தோன்றியது. இந்தப் படத்தை சர் ஜான் மார்ஷல் (Sir John Marshall) அவர்களுக்கு அனுப்பினேன். அவர் எனக்கு அனுப்பிய பதிலில், இந்த பாவாடை அணிந்த அரபிய தெய்வ உருவத்திற்கும் சிந்து சமவெளிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தாம் கருதுவதாகக் குறிப்பிட்டிருந்தார். பாவாடைகள் எல்லாக் காலகட்டங்களிலும் அணியப் பட்டன; ஆனால் இந்த உருவம் சிந்துசமவெளி நாகரீகத்திற்கு 2500 ஆண்டுகள் பிந்தைய காலத்தியது என்றும் கூறினார். அதாவது, இந்த உருவத்தை பொ.மு 800 காலத்தியதாக அவர் மதிப்பிட்டார்.”4
ஆனால் சர் ஜான் மார்ஷலின் காலத்திற்குப் பிறகு செய்யப் பட்ட பல அகழ்வாராய்ச்சிகள் அரேபியாவுக்கும் சிந்து பிரதேசத்திற்குமிடையே இடையறாத தொடர்புகள் இருந்தன என்று சந்தேகமின்றி நிரூபிக்கின்றன. இந்தத் தொடர்புகள் சிந்துவெளி நாகரீக காலத்திலேயே தொடங்கி விட்டன. சிந்து, பலுசிஸ்தான், மக்ரான், ஈரானின் தெற்குப் பகுதியிலுள்ள ஃபார்ஸ் மாகாணம் (Fars Province) , பாரசீக வளைகுடா தீவுப் பிரதேசங்கள், தெற்கு அரேபியா ஆகிய பகுதிகள் பெரிதும் ஒத்த கலாசார, பண்பாட்டு அம்சங்களைக் கொண்டிருந்தன என்பதில் ஐயமில்லை.
பாகனிய அரபு தெய்வங்கள்
பயணங்களாலும், வணிகத்தாலும் ஏற்பட்ட நீண்டகாலத் தொடர்புகள், செழுமையான கலாசாரத் தொடர்புகளுக்கும் வழிவகுத்தன. குறிப்பாக, ஹிந்துக்களும் சரி, பாகனிய வழிபாட்டாளர்களாக இருந்த அரபிக்களும் சரி, தீர்க்கதரிசி மதங்களுக்கே உரியதான பிறரை விலக்கும் தன்மையை (exclusivism) கொண்டிருக்கவில்லை. இஸ்லாமுக்கு முந்தைய பழைய அரபு தெய்வ வடிவங்களில் சில இந்து தெய்வங்களைப் போன்றவையே என்பதை முன்பு பார்த்தோம். இயற்கை வழிபாட்டு பாகனிய மனநிலை (the pagan psyche) எல்லா தேசங்களிலும், எல்லா காலங்களிலும் தெய்வங்கள் குறித்து ஒரே விதமான படிமங்களையும், உருவகங்களையும், புராணங்களையுமே வெளிப்படுத்துகிறது என்பதை மதங்களை ஒப்பீடு செய்து பயிலும் ஆய்வாளர்களூம், மாணவர்களும் நன்கு அறிவார்கள்.
குறிப்பாக, தெற்கு அரேபியாவின் மிகப் பழைய குடிகளான ஸபையூன்கள் (Sabaeans) இந்தியாவுடன் மிகச் செழிப்பான வணிகம் செய்து வந்தனர். இந்தியாவின் மேற்குக் கடற்கரை முழுவதும் அவர்கள் குடியிருப்புகளை நிறுவியிருந்தனர். அவர்கள் சூரிய வழிபாட்டாளர்கள் என்பதால் தங்கள் பகுதிகளில் பிரசித்தி பெற்ற சூரிய ஆலயங்களையும் அமைத்திருந்தனர். அவர்கள் மறுபிறவிக் கொள்கையிலும், யுகங்கள் குறித்த காலச் சுழற்சி முறை பற்றிய கொள்கையிலும் நம்பிக்கை கொண்டிருந்தனர். முக்கியமான இன்னொரு விஷயம் – ஸபையூன்களின் மத ஸ்தாபகராக பூதாஸ்ப் (Bûdasp) என்பவரை அரபிகள் குறிப்பிடுகின்றனர்.5 இந்த பூதாஸ்ப் போதிசத்துவரே அன்றி வேறொருவர் இல்லை.
பண்டைய அரேபிய விக்கிர ஆராதனைகளில், பால் (Baal) என்ற தெய்வத்தின் வழிபாடு மிகப் பரவலாக இருந்த்து. இந்த தெய்வத்தைக் குறித்து பைபிளிலும், குரானிலும் நிறைய வசைபாடல் உள்ளது. குரானின் 37.123 வசனத்திற்கு விரிவுரை எழுதுகையில் அப்துல்லா யூசுப் அலி கூறுகிறார் – ”சிரியாவின் பால் என்ற சூரியக் கடவுள் வழிபாடு பெருவளர்ச்சியடைந்த போது, அஹப், அசரியா (Ahab, Azariah) ஆகிய கடவுளர்களின் வழிபாடு தேய்ந்து மங்கியது. பால் கடவுள் வழிபாட்டில் இயற்கை சக்திகளை வணங்குதல், இந்தியாவின் லிங்க வழிபாடு போல உயிர் பிறப்பிக்கும் சக்திகளை வணங்குதல் ஆகிய அம்சங்களும் இருந்தன.”6.
இந்தக் கருத்து W.ராபர்ட்சன் ஸ்மித் எழுதியிருக்கும் Religion of the Ancient Semites நூலின் மூலம் மேலும் உறுதியாகிறது. பால் கடவுள் பற்றி, “இந்துக்களின் லிங்க வடிவத்தைப் போன்றே, கூம்பு வடிவமான, செங்குத்தாக நிற்கும் உருண்டைக் கற்கள் அந்த தெய்வத்தின் சின்னமாக இருந்தன” என்றும் “இனப்பெருக்கத்திற்கான ஆண் தத்துவத்தைக் குறித்தன” என்றும் அவர் குறிப்பிடுகிறார்7. அரேபியாவில் அக்கால கட்ட்த்தில் வசித்த இந்துக்கள் பால் கடவுளை சிவலிங்கமாகவே கருதி வழிபட்டிருந்தால் அது ஆச்சரியமே இல்லை. இது போன்ற பல சிவலிங்க உருவங்கள் காபாவிலும், அதைச் சுற்றிய பகுதிகளிலும், அரேபியாவின் பற்ற இடங்களிலும் கட்டாயம் இருந்திருக்க வேண்டும்.
காபா என்னும் புனிதத் தலம்:
வரலாற்று ரீதியாக, உண்மையில் காபா பல்வேறு விதமான தெய்வ உருவங்களால் நிரம்பிய பாகனிய கோயிலாகத் தான் இருந்தது. இறைத் தூதர் ஆபிரகாமால் அது இறை இல்லமாக நிறுவப் பட்டது என்று கூறும் இஸ்லாமிய கருத்தாக்கம் ஒரு முழு கற்பனையே அன்றி வேறில்லை. எனவே, அரேபியாவில் அப்போது வசித்த இந்துக்கள் காபாவில் வழிபட்டு வந்திருக்க்க் கூடும் என்பது விசித்திரமான விஷயமே அல்ல. பாகனிய மனம் எல்லா இடங்களிலும் உள்ள எல்லா தெய்வ உருவங்களையும் இயல்பாக வழிபாட்டுணர்வுடனேயே நோக்கும். இக்கருத்துக்கு வலுசேர்க்கும் வகையில் பொ.பி. 1560 -1620 காலகட்ட்த்தில் வாழ்ந்த புகழ்பெற்ற முஸ்லிம் வரலாற்றாசிரியர் ஃபிரிஷ்டா (Firishta) எழுதுகிறார் – “இஸ்லாமின் தோற்றத்திற்கு முன், காபாவிலுள்ள விக்கிரகங்களை வழிபடுவதற்காக இந்தியாவின் பிராமணர்கள் தொடர்ந்து அங்கு புனித யாத்திரை செய்து கொண்டிருந்தனர்”8. தனக்கு முன்னிருந்த வரலாற்றாசிரியர்களையும் இந்த விஷயத்தில் ஆதாரமாக அவர் குறிப்பிடுகிறார்.
லாத், மனாத் (Lãt, Manãt) என்கிற இரண்டு பிரதான பெண் தெய்வங்கள் முகமது நபி அவர்களை அழிக்க வரும்போது அரேபியாவில் இருந்து ஓடிவிட்டன என்றும் அவை சோமநாதர் கோயிலில் தஞ்சம் புகுந்து விட்டன என்றும் முஸ்லிம்கள் பல காலம் நம்பி வந்தனர். முஸ்லிம் படையெடுப்பாளர்கள் மீண்டும் மீண்டும் இந்தக் கோயிலின் மீது படையெடுத்து வந்ததற்கு அரேபியாவில் உருவான இந்த ஐதிகமும் ஒரு முக்கிய காரணம்.
ஏன் சோமநாதர் கோயில்? ஏனென்றால், இந்தியாவின் மேற்குக் கடற்கரைப் பகுதியான சௌராஷ்டிரத்தில் பிரசித்தி பெற்று விளங்கிய அந்தக் கோயில்தான், அங்கிருந்த அரேபிய பாகனியர்களுக்கு முக்கியமான ஒரு புனிதத் தலமாக விளங்கியது, அரேபியாவில் இருந்த ஹிந்துக்களுக்கு காபா விளங்கியது போல. இது ஒன்றும் அதிஊகம் அல்ல. ஏனென்றால் இதே கடற்கரையில் உள்ள பிரபாச பட்டணம் (Prabhas Patan) இந்திய-அரபு வணிகத்தின் முக்கிய துறைமுகமாக இருந்தது. இஸ்லாமுக்கு முந்தைய காலகட்டங்களிலேயே அங்கு பெருவாரியாக அரபிக்கள் வசித்து வந்ததற்கு வரலாற்று ஆதாரம் உள்ளது. இஸ்லாமுக்குப் பின்வந்த காலங்களிலும், வாகேலா (Vãghelãs) அரசர்களின் காலம் வரை கூட, அரேபியர்கள் இத்துறைமுகத்தில் வசித்து வந்தது குறித்து இந்த நூலின் 3வது அத்தியாயத்தில் ஏற்கனவே பார்த்திருக்கிறோம்.
இந்து நினைவில்..
காபா ஒரு சிவாலயம் என்ற இந்து மரபு குரு நானக்கின் காலத்தில் (பொ.பி. 1469 –1539) பரவலாக புழக்கத்தில் இருந்தது. அதைப் பற்றிய குறிப்பு ஜனம் ஸாகி (Janam Sãkhîs) என்ற சீக்கிய புனித நூலில், மக்கே மதினே தீ கோஷாடீ (Makkê-Madinê dî Goshatî) என்ற அத்தியாயத்தில் பதிவு செய்யப் பட்டுள்ளது. இந்த மரபு இந்தக் காலகட்டத்தை விட எவ்வளவு பழமையானது என்பது ஆராயப் படவேண்டும். ஆனால் குரு நானக் கட்டாயம் இந்த மரபைக் கண்டுபிடிக்கவில்லை, அவருக்கு முன்பே அது இருந்தது.
மத்தியக் கிழக்கு நாடுகளில் குரு நானக்கின் பயணங்கள் பற்றிய கட்டுரையில் (Guru Nanak’s Travels in the Middle East) பேராசிரியர் சுரீந்தர் சிங் கோஹ்லி எழுதுகிறார் –
“அரேபியாவில் குரு அரபிகள் போன்றே உடையணிந்து கொண்டார். ஒரு கையில் ஒரு தடி, தோளில் தொழுகையின் போது போடும் விரிப்பு, இன்னொரு கையில் குரான் புத்தகம், பாதம் வரை தவழும் நீளமான நீலநிற அங்கி.. இந்த உடையில் ஒரு சூஃபி ஞானி போன்றே அவர் தோற்றமளித்தார். சென்ற இடமெல்லாம் அவரை ஒரு உண்மையான ஃபகீர் என்றே மக்கள் கருதினார்கள். ஜெட்டாவிலிருந்து மெக்காவை நோக்கி குரு கால்நடையாகவே பயணமானார். மாலை மங்கும் நேரத்தில் மெக்காவை அடைந்தார். அங்கு காபாவிற்குப் பின்புறத்தில் உள்ள இறைதூதர் ஆபிரகாமின் நினைவிடத்திற்கு அருகிலேயே படுத்து உறங்கி விட்டார். காலையில் காபா தலத்தின் மேற்பார்வையாளன் ஜிவன் கான் வந்து பார்த்து அதிர்ச்சியடைந்தான். இறை இல்லத்தை நோக்கிக் காலை நீட்டிப் ப்டுத்துக் கொண்டிருக்கிறீர்கள், அது தகாத்து என்று குருவை எச்சரித்தான்.
அப்போது மெக்காவில் இருந்த முதன்மையான இஸ்லாமிய மத அறிஞர்கள் மௌல்வி முகமது ஹசன், காஜி ருக்ன் தீன், இமாம் ஜஃபார், பீர் அப்துல் பஹாவ் ஆகியோர். அவர்கள் குருவுடன் பல ஆன்மிக விஷயங்கள் குறித்து உரையாடினர். அந்த உரையாடல்களின் விவரங்கள் ஸையத் முகமது கவுஸ் ஸலஸ் ஃபகீர் என்பவரால் பாரசீக மொழியில் அவர் எழுதிய நூலில் பதிவு செய்யப் பட்டன. கியானி கியான் சிங் கூற்றுப்படி, அந்த விவரங்களைத் தான் பாயி பானா (bhãî Bhãnã) பஞ்சாபியில் மொழியாக்கம் செய்தார்”9.
குரு நானக் பின்வருமாறு கூறினார் – “மெக்கா ஒரு பழமையான புனிதத் தலம்10. மகாதேவரின் லிங்கம் இங்கு இருக்கிறது. முன்பு பிராமணர்களால் சிறப்பாக வழிபடப் பட்டு வந்த்து. அவர்களில் ஒரு பிராமணர் முசல்மானாகி விட்டார். அதர்வ வேதத்தைத் திரித்து அதற்கு ஃபுர்கான் (Furqãn) என்று பெயரிட்டு விட்டார். அவர் பெயர் முகமது. அந்தப் பெயரும் மகாதேவரையே குறிக்கும்11.
ஆனால் அவர் மற்ற எல்லா பெயர்களும் பழுதுபட்டவை என்று கூறி விடவே, ஹிந்துப் பெயர்கள் எல்லாம் மறைந்து எங்கும் முஸ்லிம் பெயர்களே புழக்கத்துக்கு வந்து விட்டன12. அவர் கடவுளின் பெயரால் பேசினார். ஆனால் பசுக்களை அறுத்துக் கொல்வதை ஆதரித்தார். எல்லா பிராமணர்களும் தர்ம நெறியிலிருந்து தவறும் நிர்ப்பந்தம் ஏற்பட்ட்து, ஆயினும் அவர்கள் தொடர்ந்து கடவுளிடம் முறையிட்டுக் கொண்டிருந்தனர். கடவுள் ஒருவரே என்று கலீமா கூறுகிறது, ஆனால் முகமது தனது பெயரையும் கடவுளது பெயருடன் சேர்த்துக் குழப்பிக் கலந்து விட்டார். அனைவரும் முசல்மான்களாக வேண்டும் என்று உலகம் முழுவதற்கும் அவர் ஆணை பிறப்பித்தார். மன உறுதியுள்ள பலர் அவரது ஆணையை ஏற்றுக் கொள்ளவில்லை, ஆனால் ஆசையின் வசப்பட்டவர்கள் பலர் அவரைப் பின்பற்றத் தொடங்கினர். ஒரு விதமான மதக் கொள்கையை அவர் உருவாக்கி அவர்களுக்குக் கற்பித்தார். மக்களைக் கொள்ளையடிப்பதற்காகவே அவர்கள் அவருடன் சேர்ந்தனர். வேறு எந்த நோக்கத்திற்காகவும் அவர்கள் அவருடன் சேரவில்லை”.13
இது குரு நானக் கூறியதாக மேற்குறிப்பிட்ட நூலில் வருவது.
இஸ்லாமுக்கு முந்தைய காலத்திய அரபிக்களில் இந்துக்கள் இருந்தார்கள் என்பதற்கோ, அவர்களுக்கு ஹிந்துப் பெயர்கள் இருந்தன என்பதற்கோ, பிராமணர்கள் வழிபட்டார்கள் என்பதற்கோ, அதர்வ வேதத்தை அறிந்திருந்தார்கள் என்பதற்கோ, இதுவரை மிக உறுதியான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை14. ஆனால் இஸ்லாமின் வருகைக்குப் பின் அரேபியாவில் என்ன நிகழ்ந்தது என்பது பற்றிய இந்து அகதிகளின் நினைவுகள் ஜனம் ஸாகி நூலில் பதிவாகியிருப்பதாகக் கருத இடமிருக்கிறது. இஸ்லாம் படையெடுத்த இடங்களில் எல்லாம், அங்கு வசித்த இந்துக்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓடவேண்டிய நிலை எற்பட்டது என்பதை முஸ்லிம் வரலாற்றாசிரியர்களே ஆவணப் படுத்தியுள்ளனர். ரோமப் பேரரசு கிறிஸ்தவர்களால் கையகப் படுத்தப் பட்டபோதும் இதுவே நிகழ்ந்தது.
உலகில் எல்லா இடங்களிலும் பொது மக்கள் வரலாற்று நிகழ்வுகளை தங்கள் கலாசாரத்தின் மொழியிலேயே நினைவுறுத்திப் புரிந்து கொள்ளும் பழக்கத்தால் பீடிக்கப் பட்டிருக்கிறார்கள். குரு நானக்கிடம் இந்தக் கதை வந்து சேர்ந்த காலத்திலோ, அல்லது அதற்கும் முந்தைய காலகட்டத்திலோ, இந்துக்களின் நினைவில் காபா ஒரு சிவாலயமாகவும், அங்குள்ள பிரதான தெய்வம் சிவலிங்கமாகவும் பதிந்து போயிருக்கலாம். காபாவில் வழிபாடு நடத்திய பாகனிய பூசாரிகளை பிராமணர்களாகவும், குரானை அதர்வ வேதத்தின் பொய்யான திரிபாகவும் அவர்கள் அர்த்தப் படுத்திக் கொண்டிருக்கக் கூடும். தெளிவாக விளங்கும் விஷயம் என்னவென்றால், இஸ்லாம் உருவான அந்த தருணத்தில் அரேபியாவில் குடியிருந்த அல்லது அங்கு சென்றிருந்த இந்துக்கள், அரேபியாவின் பழம்பெரும் மத்த்தைப் புரட்டிப் போட்டு புதிய நம்பிக்கை முறைகளை பலாத்காரமாகப் புகுத்திய அந்தப் “புரட்சி”யை சுத்தமாக விரும்பவில்லை; அதைப் பற்றிய நல்லெண்ணம் எதுவும் அவர்களுக்கு இல்லை.
நபியைப் பற்றியும், அவரைப் பின்பற்றுபவர்களைப் பற்றியும் இந்துக்கள் மனதில் அப்போது உருவான பிம்பம் மிகச் சரியானதே என்று பிற்காலத்தில் அவர்களது தாயகத்தில் இஸ்லாம் விளைவித்த அனுபவங்கள் தெள்ளத் தெளிவாக நிரூபித்து விட்டன. ஒரு மாபெரும் மத உபதேசகராக நபியை நிலைநிறுத்தி, ஒரு அமைதி மார்க்கமாக இஸ்லாமுக்கு வெள்ளையடித்துக் கற்பிக்க இந்திய அரசு இயந்திரம் முழுவதும் சேர்ந்து இமாலய முயற்சிகள் செய்து வருகிறது. ஆனாலும் கூட, இன்று வரை தொடர்ந்து வரும் இந்தக் கதையை மாற்ற வேண்டிய எந்த அவசியமும் இந்துக்களுக்கு இல்லாமல் போய்விட்டது என்பது தான் நிஜம்.
எப்படியானாலும், காபாவை முன்வைத்து நான் எழுதிய இந்த விஷயங்கள் இத்துறையில் உள்ள வரலாற்றாசிரியர்களால் மேலும் தீவிர ஆய்வுகளுக்கு உட்படுத்தப் படவேண்டும் என்பதில் ஐயமில்லை.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum