தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வட மொழி வேதங்கள்,சைவ நூற்களா ??

Go down

வட மொழி வேதங்கள்,சைவ நூற்களா ?? Empty வட மொழி வேதங்கள்,சைவ நூற்களா ??

Post  ishwarya Mon Feb 04, 2013 4:29 pm

சைவ சித்தாந்த சாத்திரங்கள் 14இல்,ஒன்றான சிவஞான சித்தியார் கூறுகிறது :

ஆரண மாக மங்க ளருளினா லுருவு கொண்டு
காரண னருளா னாகிற் கதிப்பவ ரில்லை யாகு
நாரணன் முதலா யுள்ள சுரர்நரர் நாகர்க் கெல்லாஞ்
சீரணி குருசந் தானச் செய்தியுஞ் சென்றி டாவே - ( சிவஞான சித்தியார் 1.46)



"ஆரணம் ஆகமங்கள் அருளினால் உருவுகொண்டு காரணன் அருளான் ஆகில் கதிப்பவர் இல்லை "

இதன் பொருள்,"வேதத்தையும் சிவாகமத்தையும் சிவ பெருமான் அருளவில்லையென்றால்,கதியடைபவர் இல்லை"

அதாவது,சிவ பெருமான்,அருளை திருமேனியாகக் கொண்டு,மாயாகாரிய மேனி கொள்ளாமல்,இவ்வேத சிவாகமங்களை அருளவில்லையென்றால்,முக்தியடைபவர் இல்லை என்று இப்பாடல் கூறுகிறது..கதியடைந்தவர்கள் இல்லையென்றால்,நம்முடைய மற்ற நூற்களான,திருமுறைகள்,சித்தாந்த சாத்திரங்கள் எல்லாம் கிடைத்திருக்கா...நம்முடைய சமயாச்சாரியர்கள் சந்தானாச்சாரியர்கள் கதியடைந்தவர்கள்...கதியடைந்த சிவஞானிகள் வழி கிடைத்தவை தான் திருமுறைகளும் சித்தாந்த சாத்திரங்களும்..ஆதலால் சிவ பெருமான் வேத சிவாகமங்களை அருளவில்லையென்றால் கதியடைந்த ஆன்மாக்கள் என்றே இருக்க மாட்டார்கள்..எல்லா ஆன்மாக்களும் பெத்த ஆன்மாக்களாகத் தான் இருப்பார்கள்...நிலை இப்படியிருந்திருந்தால்,மற்ற சைவ நூற்கள் நமக்கு எப்படிகிடைத்திருக்கும் ??வேத சிவாகமத்தின் பெருமையை இப்பாடல் வலியுறுத்துகிறது...இதற்க்உமேல்,வேத சிவாகமத்தின் பெருமையை யாராலும் கூறயியலாது..ஆதலால்,சைவ சமயத்தின் பிரமாண நூற்களான திரும்உறைகள்,சித்தாந்த சாட்ஹ்திரங்கள் தோன்றுவடஹ்ற்கு அடிப்ப்டையாக இர்உக்கக்கூடியவை,இவ்வேட்ஹ சிவாகமனக்ளும் ஆகும்...அப்பெருமானால்,வேத சிவாகமங்கள் அருளப்படவில்லையென்றால்,முக்த ஆன்மாக்களென்று எவரும் இல்லை.முக்த ஆன்மாக்கள் இல்லையென்றால்,ஞானிகள் என்று எவரும் இல்லை..ஞானிகள் இல்லையெனில்,குருபரம்பரையே கிடையாது...இக்கூற்று இவ்வுலகுக்கு மட்டுமா ??? இல்லை,நாகலோகமாகிய பாதாள லோகத்திற்கு,திருமால் போன்ற மேலுலகத்தவர்களுக்கு புலோகத்திலுள்ளவர்களுக்கு என்று யாருக்குமே குரு பரம்பரையிருக்காது ...இதனை அப்பாடலின் அடுத்த அடி கூறுகிறது :

"நாரணன் முதலா யுள்ள சுரர்நரர் நாகர்க் கெல்லாஞ்சீரணி குருசந் தானச் செய்தியுஞ் சென்றி டாவே. "


"வேத சிவாகமத்தை எந்தைப்பெருமான் அருளியிருக்கவில்லையென்றால்,ஞானிகளேயிருக்க மாட்டார்கள்..ஞானிகள் இல்லையென்றால்,குருபரம்பரையென்பது மூவுலகத்திலும் இருக்காது" என்பது அவ்டியின் பொருள்...


இவ்வாறு வேத சிவாகமத்தின் பெருமையை யார் கூறுகிறார் ?? நமது சந்தான முதற் குரவரான ஸ்ரீ மெய்கண்ட தேவரின் நேரடி சீடரான அருணந்தி சிவாச்சாரியார் சுவாமிகள் கூறுகிறார்...இந்த முழுப் பாடலில் நமக்கு மற்றொரு விஷயத்தையும் வலியுத்துகிறார்,அருணந்தி சிவாச்சாரிய சுவாமிகள்...சிவபிரான் திருமேனி தாங்கி நமக்கு வேத சிவாகமங்களை அருளிச் செய்தார்...அதாவது அவர் திருவுருவம் கொண்டதே,இவ்வேத சிவாகமங்களை அருளிச் செய்வதற்கே என்பது இதன் கருத்து...இதைத்தான் ,"ஆரணம் ஆகமங்கள் அருளினால் உருவுகொண்டு " என்றார் ..இவ்வேத சிவாகமங்கள் ,சைவர்களது நூல் அல்ல என்றால்,அவர் திருமேனியை நாம் நிராகரிக்கின்றோம் என்று அர்த்தமாகிவிடும்....சிவாலயத்தில் போய் தரிசனம் செய்து என்ன பயன் ,அவர் எதற்காக திருமேனியை எடுத்தார் எனும் கருத்தை நாம் ஏற்கவில்லையென்றால்..சிவ பெருமானின்,திருமேனி,திருமுறைகளில் வெகுவாக புகழப்படுகிறது..
ஆதலால்,வேதத்தை,சைவ நூல் என்று நாம் ஏற்கவில்லையென்றால்,அவர் திருமேனியை வணங்கி என்ன பயன் ?? அவர் திருமேனி எடுத்தது ஐந்தொழில் செய்யவே என்று கூறினாலும்,நமக்கு இன்பத்தையும் துன்பத்தையும் ஏன் ஊட்டுகிறார் ??நாம் வேத சிவாகம நெறியின்படி நடக்கவே..வேத சிவாகம நெறியின்படி நடப்பவர்களுக்கு இன்பமும்,நடக்காதவர்களுக்கு துன்பமும் ஊட்டுகிறார் ?? ஏன் துன்பத்தை ஊட்ட வேண்டும் ???? வேத சிவாகம நெறிப்படி நாம் நடக்கவே..ஆதலால்,சிவ பெருமான் திருமேனி கொண்டதே,இவ்விரண்டு நூற்கள்வழி உலகத்தை நடத்தவே....

ஆக,வேதமும் சிவாகமும்,சைவ சமயத்தால் ஆதி நூற்களாக கொள்ளப்படுகின்றன என்று பார்த்தோம்..இனி நமக்கு ஓர் ஐயம் வருகிறது...சிவ பெருமான் ஏன் இரண்டு நூற்களை அருளி செய்ய வேண்டும் ?? எதோ ஒரு நூல் போதாதா என்று நமக்கு ஐயம் வருகிறது.
சிவாகமம்,சைவ சித்தாந்ததுக்கே உரிய பிரமாண நூல்,ஆதலால்,அதைனைப் பற்றி ஆராயத்தேவையில்லை..இனி,வேதத்தைப் பார்ப்போம்..வேதம்,சைவர்களுக்கு மட்டுமே பிரமாண நூலாக இருக்கிறதா என்றால்,இல்லை..வைணவர்கள்,ஏகன்மவாதிகள்,மாத்வ மதத்தினர் என்று இவர்களுக்கும் அது பிரமாண நூலாகத் தான் இருக்கிறது..சிவாகமம் சிறப்பு நூல் என்றும்,வேதம் பொது நூல் என்று கூறப்படும்..ஏனெனில்,வேதத்தில் ஞானச் செய்திகள் விளக்கமாகச் சொல்லப்பட்டிருக்க மாட்டா..சுருக்கமாகத் தான் சொல்லப்பட்டிருக்கும்..
ஆதலால்,அவரவருக்கு எப்படி பொருள் புரிகின்றதோ,அந்தளவில் புரிந்துக்கொண்டு,தமக்கு உகந்ததாக தோன்றுகின்ற நெறிகளிலே ஒழுகலாம்,என்று சிவ பெருமான் ஒவ்வொரு உயிர்க்கும் அவ்வாய்ப்பை கொடுத்துவிட்டார்..இன்னுமொரு ஐயம் ஏற்படுகிறது,சிவ பெருமான்,இது தான் மெய் நெறி என்று சொல்லி,இதனை பின்பற்றுங்கள் என்று கூறியிருக்கலாமே,எதற்காக பல கொள்கைகள் எழும் அளவிலே வேதத்தை பொது நூலாக அருளி செய்திருக்கிறார் ??ஏன்,பல சமயங்கள் எழும்படி செய்தார் ?? இதற்கான பதில்,வேதத்தின் உண்மையான பொருள்,சைவ சித்தாந்தம் கொடுக்கும் பொருள் தான்..எனினும்,வெவேறு சமயங்கள் விளக்கம் கொடுக்கும்படியும் வேதம் இடம் தருகிறது ஏனென்றால்,இங்குத்தான் சைவ சித்தாந்தத்தின் அடிப்படை கருத்தே இருக்கிறது...முப்பொருளான பதி,பசு,பாசத்திலே,பசு எனும் பொருள் அறிவுடையது தான்...ஆனால்,தானே அறியும் அறிவுடையது அல்ல...சிவ பெருமான்,மாணிக்கவாசகப் பெருமானுக்கு,குறுந்தமரத்தடியிலே,ஞானத்தை அறிவித்தார்,அவர் அறிந்துக் கொண்டார்..ஆனால்,எல்லா உயிருக்கும்,அதே மாதிரி சிவ பெருமான் ஞானத்தை உபதேசித்தாலும்,அவர்கள் அறிந்துவிடுவார்களா ??இங்கு தான் சைவ சித்தாந்தத்தின் இரண்டாவது கொள்கையை நாம் நோக்க வேண்டும்....உயிர்கள்,அறிவிக்க அறிவன என்றாலும்,படிமுறையில் தான் அறிவிக்க அறிவன...எந்த ஒரு விஷயத்தையும் ஆன்மாக்களுக்கு உணர்த்தினாலும்,எல்லா ஆன்மாக்களும் அவற்றை உணர்ந்துவிடாது...அறிவு வளர்ச்சி பெறத் தக்கவையாகத்தான் எல்லா உயிர்களும் இருக்கின்றன..ஆகையினால்,ஆன்மாக்கள்,படிமுறையில் அறிவிக்க அறிவன..இப்படிமுறையை சோபான முறை என்றும் கூறுவர்...ஆகையினால்,மெய்பொருளை முதலிலேயே அறிவித்தால்,எல்லா உயிர்களாலும் அறிய முடியாது...திருக்குறளை எடுத்துக் கொள்வோம்...அவற்றை,சைவர்கள்,ஜைனர்கள்,பௌத்தர்கள்,சமயமே இல்லா நாத்திகர்கள் என்று எல்லோரும் போற்றுகின்றனர்...திருக்குறளில்,வரும் ஆதிபகவன்,வாலறிவன் போன்ற சொற்களுக்கு ஏதேதோ அர்த்தங்களை கற்பித்துக்கொண்டு,நாத்திகர்களும் ஏற்றுக் கொள்கின்றனர்...ஆனால்,திருக்குறளில் உண்மை பொருள் ஒன்றாகத்தானே இருக்க முடியும்,அது சைவ சமய நூலே என்று பல சைவ அறிஞர்கள் நிருபித்துள்ளார்களே..திருக்குறள்,பல் வேறு நிலையிலுள்ளவர்களுக்கும்,அதில் விளக்கம் காண இடம் தருகிறது....ஆனால்,அது கூற வரும் பொருள்,சைவ சித்தாந்த கருத்து தான்..இதனை உறுதி செய்வது தான்,திருக்குறளின் மிகச்சிறந்த உரையான பரிமேலழகர் உரை..ஆனால்,அவ்வுண்மையான விளக்கத்தை எல்லோராலும் உள்வாங்கிக்கொள்ள முடியாது...அதே போல் தான் வேதமும்...எல்லா அறிவு நிலையிலுள்ளவர்களுக்கும் பரம்பொருள் கொள்கைகளை அறிந்துக் கொள்ள வேதத்தைவிட்டால் வேறு நூல் இல்லை..


அடுத்த ஐயம் எழுகிறது.வேதம்,இந்திரன்,கோள்கள்,பஞ்சபூதங்கள் என்று பலவற்றை போற்றுகிறதே,ஆனால் சைவ சமயத்தின் கொள்கையோ சிவ பெருமானே பரம்பொருள் என்பது..ஆகையினால்,சைவத்துடன் வேதம் பொறுந்தவில்லையே ? ஏன் வேதத்தில் பலர் போற்றப்படுகின்றனர் ??இதற்கான பதிலப் பார்ப்போம்.வேதம் படிமுறையில் நமக்கு பரம்பொருளை உணர்த்துகிறது...சிவனே பரம்பொருள் என்று கூறினால்,எல்லோராலும் உணரமுடியாது. ஆகையினால்,"அன்னம் பிரஹ்மம்" என்று உணவை கூட வேதம் பிரம்மம் என்று சொல்கிறது...ஏனெனில்,எந்த பொருள் இல்லாமல் நாம் உயிர் வாழ முடியாதோ,அந்தப் பொருளே பரம்பொருள்...ஆகையினால்,உணவு இல்லாமல் நாம் உயிர் வாழ முடியாது எனும் அடிப்படியிலிருந்தே வேதம் தொடங்குகிறது...இப்படி,அடிப்படை நிலையிலுள்ளவர்களை கூட வேதம்,அரவணைத்து அவர்களை வளர்க்கிறது...உணவே பரம்பொருள் என்று கேட்டு சென்றவன்,சிந்திக்க ஆரம்பிப்பான்....உணவோ,நிலத்திலிருன்து வருகிறது,ஆகையினால் நிலமே பரம்பொருள்...ஆநால் நிலமான பூமியோ,மழை பெய்தால்,விளையும்,ஆகையினால் நீர் பரம்பொருள்...இவ்வாறு,காற்று,நெருப்பு,ஆகாயம் என்று சிந்திப்பான்..ஆகையினால்,பஞ்சபூதமே பரம்பொருள் என்றும் வேதம் கூறுகிறது...இதை கேட்டு சென்றவன்,மேலும் சிந்திப்பான்...பஞ்சபூதங்களோ ஜடப் பொருட்கள்,அவற்றுக்கு அறிவில்லை..ஆனபடியால்,அறிவுள்ள எனக்கு எப்படி அறிவற்ற அச்சடப் பொருட்கள் தலைவர்களாக இருக்க முடியும் என்று எண்ணுவான்...அதனால்,தான் வேதம்,நீர்,நெருப்பு போன்றவற்றுக்கு அதி தெய்வங்களான வருணன்,அக்னி,மருத்து போன்றவற்றை பரம்பொருளாக கூறியது...ஆனால்,எப்படி இப்படி பல பேர் பரம்பொருளாக இருக்க முடியும்,ஒருவன தலைமையின் கீழ் இருந்தால் தானே அந்த காரியமும் நன்றாக நடக்கும்...பல பேர் எப்படி தலைவர்களாக இருக்கமுடியும் என்று சிந்திக்கும்போது,இந்திரனே பரம்பொருள் என்று வேதம் கூறியது...ஆனால்,ஒருவன் மேலும் சிந்திக்கும்போது,அந்த இந்திரனையே படைத்தவர் பிரம்மா,ஆகையினால் அவர் தானே பரம்பொருளாக இருக்க முடியும் என்று தோன்றும்...ஆகையினால்,பிரம்மாவே பரம்பொருள் என்றது வேதம்...ஆனால்,அந்த நான்முகனோ,திருமாலின் உந்தியிலிருந்தல்லவா வெளிப்பட்டான்,ஆகையினால் திருமாலே பரமொருள் என்றது வேதம்...இப்படி உணவு என்று ஆரம்பித்து,திருமால் வரை, படிமுறையில்,ஒருவனை சிந்திக்க வைக்கிறது வேதம்...பிறகு,எல்லா உலகங்களும் ஒரு காலத்தில் ஒடுங்கும் என்று அவனுக்கு தெளிவு வரும்போது,யார் பரம்பொருள் என்று சிந்திக்க ஆரம்பிப்பான்...எல்லா உலகங்களையும் ஒடுக்கி,தான் மட்டும் ஒடுங்காமல் நிலைத்து நிற்கும் பொருள் எதுவோ,அதுவே பரம்பொருளாக இருக்க முடியும் என்று தெளிவு பெறுவான்...அப்பொருள் எது என்று தேடும்போது தான்,எல்லாவற்றையும் ஒடுக்கி,தான் மட்டுமே நிலைத்து நிற்கும் சிவனே பரம்பொருள் என்று வேதம் .கடைசியாகக் கூறுகிறது...மேலும்,ஏன் பல தெய்வங்களை,வேதம் பரம்பொருள் என்று கூறுகிறதென்றால்,அவனின் அருளானது மற்ற பொருள்களில் கலந்து இருந்து ஆன்மாக்களுக்கு பயன் தருகிறதால்...பஞ்சபூதங்கள் வாயிலாகவும்,தேவர்கள் வாயிலாகவும் பரம்பொருளான சிவனின் அருள் தங்கியிருந்து,ஆன்மாக்களுக்கு பயன் தருகிறது...ஆகையினால்,சிவபெருமானின் அருள் கலப்பு பற்றி,பலரை பரம்பொருள் என்று வேதம் சொல்லிற்று...



வேதத்தில் ஒரு சுலோகம் இவ்வாறு வருகிறது.பெரிய பொருள் என்று கூறப்படுபவற்றிலெல்லாம் பெரிய பொருள் பிரம்மா...அந்த பிரம்மாவினும் பரம்பொருளாக இருப்பவன் ஹரி.ஆனால்,அந்த ஹரியைவிட பெரியவன்(பரம்பொருள்) ஈசன்...

அந்த சுலோகம் :



"பராத்பரதரோ ப்ரஹ்மா தத்பராத் பரதோ ஹரி : தத்பராத் பரதோ ஈஸ தஸ்மாத்
துல்யோதீ கோநஹி " - சரபோபநிஷத்

பொருள் : (பிற தேவருக்கு மேலானவன் பிரம்மா,அவனுக்கு மேலானவன் விஷ்ணு,அவனுக்கு மேலானவன் சிவன்,அவனுக்கு சமமானவனும் மேலானவனும் இல்லை )



ஆகையினால்,அவரவர் படி நிலைக்கேற்ப,பலரை பரம்பொருள் என்று வேதம் கூறியது...ஆனால்,அவற்றின் அந்தரியாமியாக(உள்ளிலிருந்து செலுத்தும் பொருள்) சிவனே ஆகையினால்,அவர்களுக்கு செலுத்தும் வணக்கமும் சிவனுக்கு சென்றடைகிறது...
ஒரு விஷயத்தை நாம் கவனிக்க வேண்டும்...வேதம் மற்ற தேவர்களையும் சிவனையும் போற்றினாலும்,மற்ற தேவர்களை வேதம் போற்றுவதற்கும் சிவனை வேதம் போற்றுவதற்கும் ஒரு பெரிய வித்தியாசமுண்டு..இவ்வித்தியாசம் தான்,வேதம் சைவ சமயத்துக்கே உரிய நூல் என்று நமக்கு காட்டுகிறது....அதாவது,பிற தெய்வங்களை போற்றும்போது,வேதம் ,அவர்களை வெறுமனே போற்றுகிறது,அவ்வளவே...ஆனால்,சிவ பெருமானை போற்றும்போது மட்டும்,சிவ பெருமானை பிற தெய்வங்களுடன் ஒப்பிட்டு,அவர்களைவிடவும் சிவ பெருமானே உயர்ந்தவன் என்று வேதம் போற்றுகிறது...மற்ற தேவர்களை,அவ்வாறு ஒப்பிட்டு வேதம் போற்றவில்லை....சிவனை போற்றும்போது மட்டும் அவ்வாறு செய்கிறது...


ஆகையினால்,வேதம் சைவ நூலே என்று நாம் தெரிந்துக்கொள்ளலாம்





[இக்கடுரைக்கு ,திருவாவடுதுறை ஆதீனப் புலவர்,திரு.குஞ்சிதபாதம் அவர்களின் உரை உதவி புரிந்தது... ]

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum