செவ்வாய் பரிகாரம்
Page 1 of 1
செவ்வாய் பரிகாரம்
நாம் ஆறாம் வீட்டு தசாவின் பரிகாரத்தை பற்றி பார்த்துவருகிறோம் அந்த வரிசையில் இன்று செவ்வாய்க்கு உண்டான பரிகாரத்தை பார்க்கலாம்.
செவ்வாய் ஆறாம் வீட்டில் இருப்பது நல்ல தைரியத்தை தரும். இவரால் நல்ல நன்மைகள் உண்டு. ஆறாம் வீடு என்பது சத்ரு ஸ்தானம். சத்ரு என்றாலே கண்டிப்பாக சண்டை தான் போர்க்கு உரிய கிரகம் செவ்வாய் அவருக்கு பரிகாரம் நாம் செய்வது என்றால் சாதாரணமான காரியமா.
ஏன் என்றால் நீங்கள் எந்த கிரகத்திற்க்கும் பரிகாரம் செய்தாலும் அதன் நன்மை தீமைகள் எளிதில் உங்களுக்கு கிடைக்காது. ஆனால் செவ்வாய்க்கு மட்டும் பரிகாரம் செய்யும் போது எச்சரிக்கையுடன் செய்ய வேண்டும் கொஞ்சம் தவறினாலும் உங்களுக்கு உடனடியாக காட்டிக்கொடுத்துவிடுவார்.
இந்த பரிகாரம் செவ்வாய்கிழமையில் மட்டும் செய்ய வேண்டும். செவ்வாய்கிழமை வீடு சுத்தம் செய்து விட்டு நீங்கள் அன்று ஒரு நாள் மட்டும் விரதம் இருக்க வேண்டும். ஒரு வேல் வைத்து அதற்கு நீங்கள் அபிஷேகம் செய்ய வேண்டும். குங்கும அபிஷேகம் (குங்குமத்தை தண்ணீரில் கலந்து) செய்ய வேண்டும் மற்ற அபிஷேக பொருட்கள் கொண்டும் செய்யலாம். குங்குமம் அபிஷேகம் மிக உகந்தது இது இல்லாமல் செய்ய கூடாது.
அபிஷேகம் செய்யும் போது முருகனின் மந்திரங்களை சொல்லலாம் அல்லது கந்த ஷஷ்டி கவசத்தை சொல்லலாம். அபிஷேகம் செய்துவிட்டு நீங்கள் விரத உணவை சாப்பிடலாம். இது ஒரு நாள் மட்டும் செய்தாலே போதுமானது உங்களுக்கு இருக்கும் பிரச்சினை அதிகமாக இருந்தால் ஒன்பது வாரங்களுக்கு செய்யலாம்.
இந்த பரிகாரத்தை செய்யும் போது தீமையான எண்ணங்களை மனதில் வைத்துக்கொண்டு செய்யாதீர்கள் அது அடுத்தவரை பாதிக்க செய்யும். நான் இந்த பரிகாரத்தை சொல்லுவது உங்களை காப்பாற்றிக்கொள்ள தான். நல்ல எண்ணங்களோடு இதை செய்தால் நல்ல பலனை செவ்வாய் உங்களுக்கு உடனே தரும்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» செவ்வாய் :வழிபாடு,பரிகாரம்
» செவ்வாய் தோஷம் பரிகாரம்
» செவ்வாய் :வழிபாடு,பரிகாரம்
» செவ்வாய் தோஷம் என்றால் என்ன? விதிவிலக்குகள் உண்டா? பரிகாரம் என்ன?
» செவ்வாய் தோஷம் நீங்க பரிகாரம்
» செவ்வாய் தோஷம் பரிகாரம்
» செவ்வாய் :வழிபாடு,பரிகாரம்
» செவ்வாய் தோஷம் என்றால் என்ன? விதிவிலக்குகள் உண்டா? பரிகாரம் என்ன?
» செவ்வாய் தோஷம் நீங்க பரிகாரம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum