தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வேத காலமும், மாமிச உணவும்

Go down

வேத காலமும், மாமிச உணவும்  Empty வேத காலமும், மாமிச உணவும்

Post  meenu Mon Feb 04, 2013 1:10 pm


வேத காலமும், மாமிச உணவும், மக்களும்!

மாட்டு கறியை முதன்முதலில் சாப்பிட்டவர்கள், இந்தியாவுக்கு அறிமுகப் படுத்தியவர்கள், பிராமணர்கள் தான்! பிராமணர்கள் என்று இப்போது சொல்லப் படுகின்ற இவர்களின் மூதாதையர்கள், ஆன ஆரியர்களே! இது முக்காலும் நானறிந்த உண்மையாகும்! நான் மட்டும் என்றில்லை, வரலாற்று ஆய்வாளர்கள், நூலாசிரியர்கள், இந்துமத ஆசாரியர்கள், வேத விற்பனர்கள் பலரும் அறிந்த உண்மையாகும்! இந்த உண்மையை மறந்து விட்டதும் கூட... மாட்டுக்கறி செய்தியை நக்கீரன் வெளியிடுவதற்கும், அதை தொடர்ந்து நிகழ்ந்த சர்ச்சைகளுக்கும் காரணம் என்பேன்!!

பிராமணர்கள் மாட்டு கறியை எப்போது வரை உணவாக சாப்பிட்டார்கள்,? எந்தெந்த பிராணிகளை எந்தெந்த கடவுளின் பெயரை சொல்லி பலியிட்டு உண்டார்கள்? அவர்களது வேத நூல்களில் மாமிச உணவு பற்றி சொல்லாப் பட்டுள்ளவைகள் என்னென்ன? இராமாயணத்தில் பதினான்கு வருடங்கள் காட்டுக்கு சென்ற, ராமனும் லட்சுமணனும் வில் அம்பை வைத்து வேட்டையாடிய மிருகங்கள் என்ன? சாப்பிட்ட மாமிச வகைகள் என்ன? மகாபாரதத்தில் கிருஷ்ணனும், பாண்டவர்கள், கவுரவர்கள் முதலானோர் பசு இறைச்சியை புசித்தும்,ருசித்தும் செய்த வேலைகள் என்ன? வேதங்களில் மாமிசம் பற்றிய மகத்துவத்தை சொல்லுபவை எவை? அர்த்த சாஸ்திரம், மனு தர்மம் ஆகியவைகள் மாட்டு கரியைப் பற்றி சொல்வது என்ன? போன்ற ஏராளமான தகவல்களை இதுபோன்ற சர்சைகள் எதிர் காலத்தில் தொடரக் கூடாது என்பதற்காக தொடர்ந்து இரண்டு,மூன்று பதிவுகளாக எழுத உள்ளேன்!
நான் எழுதும் பதிவுகளுக்கு முன்னுரை இது!

பசுவைக் கொல்லும் பொது, 'ஹோதா' என்ற புரோகிதன் 'அத்ரிகோ சமீத்வம் ஹுசமீ சமீத்வம்;சமீத்வமத்ரிகா அத்ரிகா உர் இதித்ரிப் ரூயாத்' (ஐதரேய பிராமணம் பஞ்சிகா 2 ,கண்டம் 7 } என்று சொல்லவேண்டும்> அதாவது, நன்றாக அடித்துக் கொல், கொல், கொல். அடிப்பதை நிறுத்தாதே என்று கூறியவாறு பசுவைக் கொலை செய்து அடுத்து அதன் சதையை முப்பத்தி ஆறு பங்குகளாக பிரித்து வழங்க வேண்டும் என்றும் இதனை முறைப்படி உணர்ந்தவன் சுவர்க்கத்தை அடைகிறான் என்றும், இந்த யாகம் ரிஷிகளால் கண்டுபிடிக்கப் பட்டது என்றும் நம்பியவர்கள் வேதகால ஆரியர்கள்! யாகத்தில் பசு கொள்ளப் பட்ட பின் அதன் சதையை அறுதெடுக்க வேண்டிய முறைப் பற்றி (ஐதரேய பிராமணம் பஞ்சிகா 2 ,கண்டம் 6 }கூறுவதாவது:

"மார்பில் இருந்து பருந்தின் வடிவத்தில் சதையை அறுதெடுக்க வேண்டும். பின் கால்களில் இருந்து இரண்டு துண்டுகளை அறுதெடுக்க வேண்டும், முன் கால்களில் இருந்து நம்பு வடிவமாக இரண்டு துண்டுகளை அறுதெடுக்க வேண்டும்,தோளில் இருந்து ஆமையின் வடிவாக இரண்டு துண்டுகளை அறுதெடுக்க வேண்டும் . இவ்வாறு அந்த அந்த அவயங்களில் இருந்து இருபத்தி ஆறு துண்டுகளை அறுத்தெடுத்த பின் எல்லாவற்றையும் அறுத்து எடுக்க வேண்டும்! " இப்படி பசுவைக் கொன்று யாகம் நடத்தி, அதனைப் பக்குவமாக சமைத்து ஆரியர்கள் அந்த நாட்களில் உண்டார்கள்!

ஆடு,மாடுகளுடன் வந்த ஆரியர்களின் பிரமாதமான,பிடித்த,முக்கிய உணவே மாட்டு கறி உணவுதான்! புத்தரின் கொல்லாமைத் தத்துவத்தை ஜீரணிக்க, புத்த மத வீழ்ச்சிக்கு பிறகு ஆரியர்களான பிராமணர்கள், மாட்டு கறியை சாப்பிடுவதை விட்டு ,பால்,நெய்,வெண்ணை,என பின்னாளில் உருமாறினார்கள்!
வேள்விகளில் இன்றும் பலியிடப்படும் உயிர்களில் மாடு முக்கியமானது! மாட்டை எப்படி பலியிட வேண்டும்,எப்படி அறுக்க வேண்டும், எப்படி எதனுடன் சேர்த்துச் சமைகவேண்டும்என்பதை இன்றுள்ள திராவிடர்களுக்கு சொன்னவர்களே ஆரியர்கள்தான்!
வேதங்கள் நான்கில் இரண்டாவதாக சொல்லப்படும் யஜுர் வேதம் தத்வமஸி என்னும் தத்துவங்களை அறிந்து கொள்ள உதவுவது என்று வேதாந்திகள் கூறுவர். கிருஷ்ண யஜுர்,சுக்ல யஜுர் என்று இரண்டு யஜுர் வேதங்கள் உள்ளன. இதில் கிருஷ்ண யஜுர் வேதம் ஆறாவது காண்டத்தில் பலிவிசயம்,தட்சணை சோம யாக விளக்கம் ஆகியவைகள் கூறப்பட்டுள்ளது!

யஜுர் வேதத்துக்கு முக்கியமாக,ஆதாரமாகவும் திகழ்வது சதபத பிரமாணம். உபநிஷமாக விளங்குவது பிரஹதாரணம் (Brihadaranya Kopanised ) இதனையே பிரம்ம ஞானம்,தத்துவ ஞானம் என்று என்று சங்கரர் கூறுகிறார். உபநிஷங்களுக்கு அந்தரங்கம், ரகசியம்,ஞானம்,பிராத்தனை என்று பலபொருள் உள்ளது!

இவைகளின் எண்ணிக்கையில் வேறுபாடுகள் உள்ளது .இ. சம்பந்தாசாரியார் 108 என்று ஜே.பி.ரோட்டலர் மேலும் 17 -சேர்த்தும் எ.வேபர் என்கிற சம்ஸ்கிருத அறிஞர் 235 - என்றும்,சுவாமி சின்மயானந்தர் 238 - உபநிஷங்கள் இருப்பதாகவும் கூறுகின்றனர்!

இவைகளில் பிரஹதாரண உபநிஷம் சிறந்த பொருள்களை கூறுவதாகவும்,அளவில் பெரியதாகவும் அதனாலேயே
"பிரஹதாரன்யகம்" எனபடுகிறது . (வீர ராகவாச்சாரியார்,உபநிஷத்சாரம்,சென்னை,1965 , பக்கம்-131 ) கூறுகிறார்!
இந்த உபநிஷத்தில், ஆறாம் அத்தியாயத்தில் (நான்காம் பிராமணம்,பதினெட்டாவது வசனம்) யாக்ஞ்வல்கியாரின் குருவான ஆருணி குறு பிரவாஹன் ஆரோக்கியமான குழந்தையைப் பெறவேண்டுமானால் என்ன செய்ய வேண்டும் என்று கர்பிணிப் பெண்களுக்கு யோசனை கூறுவதாக வருவதே கீழே தரப்பட்டு உள்ளது !
தன் மகன் புலவனாகவும்,புகழ் பெற்றவனாகவும்,நல்ல பெசாலனகவும்,சபைகளிலே திறமை உள்ளவனாகவும் எல்லா வேதங்களையும் படித்தவனாகவும், முழு ஆயுளைக் கொண்டவனாகவும் இருக்க வேண்டுமென விரும்பினால், தாயானவள்,நெய்யுடன் கலந்த பொலி எருது அல்லது எருதுவின் மாமிசம் சேர்ந்த சாதம் சாப்பிட வேண்டும் என்று கூறுகிறது!
He who desires a son reputed,eloquent and speaking words pleasant to hear, to be born to him, to be versed in aal the vedas and to live to a full age of hundred years, should have rice boiled with the meat of a bull able to breed and with his wife should eat the same mixed with ghee. Then they would be able to give birth to a son as desired. ( BRIHADARANYAKOPANISAD, Upanisad series 10, sri Ramakirushna math,mylapore,1945,p. 573.)
பசுவை வைத்து(வதைத்து கொல்லும்) யாகத்தின் பெயர்களும் நோக்கங்களும்:

கோசவம் - பசுமாடு,காளை மாடுகளை கொல்லும் யாகத்தின் பெயர்!
வாயவீயஸ் வேதபசு - வாயு தேவதைக்காக வெள்ளைப் பசுவைக் கொல்வது.
காம்யபசு - தனது எண்ணங்களை ஈடேற்றிக் கொள்வதற்கு உரிய பசு யாகம்.
வத்சொபகரணம்- கன்றுக் குட்டியைக் கொலை செய்து நடத்தும் யாகம்.
அஷ்டதச பசுவிதானம் - பதினெட்டு பசுக்களைக் கொலை செய்து நடத்தும் யாகம்.
ஏகாதசீன பசுவிதானம் - பதினோரு பசுக்களைக் கொல்லும் யாகம்.
கிறாமாரண்யா பசு பிரசம்ஷா - நாட்டிலும் காட்டிலும் உள்ள பசுகளைக் கொன்று யாகம் செய்வது!
ஆதித்ய வேதாகபசு- சூரிய தேவதைக்கு பசு யாகம்.
காம்யபசு விதானம்-பசுமாட்டைக் கொன்று நடத்தும் யாகம்.
ரிஷபாலம்பன விதானம்- எருதைக் கொன்று நடத்தும் யாகத்தின் விதி.

இவைகளை அதாவது யாகம் பற்றி எம்.கே.கேலுண்ணி நாயர் என்னும் சுவாமி சிவானந்த சரஸ்வதி அவர்கள் (கோலோளன்பு அம்சம்,பொன்னானி,மதவிசாரணை, பக்கம்-78 ,79 , 80 )விரிவாக தெரிவித்து உள்ளார்!

தெய்வங்களின் பெயரைச் சொல்லியும், பல்வேறு காரியங்களைச் சொல்லியும், பசுகளும் எருதுகளும் தேவைக்கு தகுந்தபடி, பலியிடப் பட்டு, உணவாக உண்ணப்பட்டு வந்தது, இவைகளை மட்டுமே தனியாக சாப்பிட்டால் என்ன " கிக்கு" இருக்கும்? அதனால் " கிக்கு" மற்றும் "கில்மா " வேலைகளுக்கு மதுவும் கட்டாயமாக சேர்த்துக் கொள்ளப்பட்டது!
ஆணும் பெண்ணும் எல்லோரும் ஒன்று கூடி உண்டும்,கூடியும், ஆடியும்,பாடியும்,சேர்ந்தும் களித்தும், கலந்தும் உறங்கினார்கள்!

மது பார்க்கம் என்பது மதுவுடன் கூடிய மாமிச உணவை விருந்தாக உண்பதும் வழங்குவதுமாகும்! அதுகுறித்து அடுத்து பார்ப்போம்!
மது பார்க்கம் விருந்து!

ஆரியர்கள் வருகையும்,முஸ்லிம்களின் படையெடுப்பும், என்றோ,ஆரியர்கள் நாகரீகம் என்றோ, ஆரியவர்த்தம் குறித்தோ படித்திருப்பீர்கள்! ஆரியர்கள் 'சோம பானம்', 'சுறா பானம்', ஆகியவற்றைப் பருகினார்கள்(?) என்றும் கூடநீங்கள் படித்து இருக்கலாம்! ஆரியர்கள் பருகியதாக கூறப்படும் சோம பானமும் சுராபானமும் தான் இன்றைய உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் வெளிநாட்டு மது வகைகளுக்கும், கிராமங்களில் தயாராகும் உள்ளூர் கைத்தொழில் உற்பத்தியான சாராயம் ஆகியவைகளுக்கு எல்லாம் முன்னோடியும் மூத்ததும் ஆகும்!

இந்த சோம பானம்,சுராபானம் ஆரியர்களான பிராமணர்கள் ஆண், பெண் பேதமின்றியும், வயது,உறவு வித்தியாசம் இன்றியும் பருகி வந்தார்கள்! ( அது என்ன நம்ம அரசாங்கம் விற்பனை செய்யும் டாஸ்மாக் மதுவா? குடித்தார்கள் என்று சொல்ல?) அதுவும் ஆடு, மாடு என்று கண்டதையும் கொன்று... கறியாக்கி,விதவிதமாக சமைத்து அவற்றை சாப்பிட்டும் அதீத, "ஆரிய தயாரிப்பான" சோமபானம்,சுராபானத்தை பருகினார்கள்!

மதுபர்க்கம் விருந்தைப் பாப்போம்

பதினெட்டு சூத்திரங்களில் ஒன்றான ஆஸ்வலாயண சூத்திரத்தின் பிரிவான கிருஹஜ்ய சூத்திரம் முதல் அத்தியாயம், 24 -வது கண்டிகையில் மது பார்க்கம் கொடுக்கும் முறைகள் சொல்லப்பட்டு இருக்கிறது.

" யாகம் செய்வதற்கு ரித்விக் வீட்டிற்கு வந்தால் அவனுக்கு மது பார்க்கம் கொடுக்க வேண்டும்! "( 1 - 24 - 1 )


" மணமகன் வீட்டிற்கு வந்தபோதும் மது பார்க்கம் கொடுக்க வேண்டும்! " ( மணமகனுக்கு மதுபர்க்கம் கொடுத்தால் பொண்ணு நிலைமை என்னாவது? என்று கேட்க கூடாது)

"அரசனுக்கும் மது பார்க்கம் கொடுக்க வேண்டும்! "(1 - 3 )

" குரு, பெண்கொடுத்த மாமனார், சிற்றபபன் வீட்டிற்கு வந்த காலத்துக்கும் பத்து பார்க்கம் கொடுக்க வேண்டும்! "

சரி உறவு முறையில் உள்ளவர்களுக்கு சாராயம் வாங்கி கொடுப்பதில் என்ன தப்பு ? என்று கேட்கலாம்! தமிழர்களின் நாகரீகம் கலாச்சாரம், உறவைப் பேணுதல், மதிப்பு தருதல் ஆகிய அனைத்துக்கும் எதிரானது, கட்டுப்பாடு அற்ற, காட்டு மிராண்டித்தனம் கோடானது, ஆரியர்களான பிராமணர்களின் வாழ்க்கையும், உறவு முறைகளும் என்பதை குறிப்பிடவே இதனை கூறுகிறேன்!

போகட்டும் மதுபர்க்கம் எப்படி கொடுக்க வேண்டும் என்பதைப் பார்க்கலாம்.

குரு முதலானவர்கள் முதலில் நீரை கொடுத்து முகம் கழுவ செய்து விட்டு, பிறகு மது பார்க்கம் கொடுக்கப் பட இருக்கும் பசுமாட்டை அவர்களுக்கு நிவேதனமாக( ஒப்புவித்தல்,கொடுத்தல்) பண்ணவேண்டும்! அவர்களுக்கு முன்னால் நிறுத்த வேண்டும் (23 ) பிறகு, "ஹதோம பாப்மா மேஹத" என்ற மந்திரத்தை சொல்லி அந்த பசுவை வீட்டிற்கு உரியவன் கொல்ல வேண்டும்!

இப்படி மாமிசமாக்கிய பசுவை கொண்டு, மது பார்க்கம் கொடுக்கப் படுகிறது! காரணம், "மாமிசம் இல்லாமல் மது பார்க்கம் முடியாது" என்று கிருஹஜ்ய சூத்திரம் இருபத்தியாறு சொல்லுகிறது! இப்படி கொல்லப்பட்ட பசுமாடு, அல்லது எருது இவைகளின் இறைச்சியை நெய்யில் வருது, தேன் விட்டு பிசைந்து, உருண்டை செய்து விருந்தினருக்கு படைப்பதே மது பர்க்கமாகும்!
மதுபர்க்கம் விருந்தை பற்றி தெரிந்து கொண்ட உங்களுக்கு.... அதன் சுவைஎப்படி இருக்கும்? என்று கற்பனை வருவதும்,சாப்பிடும் ஆசை வருவதும் இயற்கைதான்! ஆனால் அந்த கொடுப்பினை எல்லாம் நமக்கு வாய்க்குமா என்று தெரியவில்லை!

ராமனும், லட்சுமணனும் மது பார்க்கம் கொடுத்து இருகிறார்கள்! முனிவர்களைக் கண்டதும் விரைந்து எழுந்து வணங்கி,பாத்யம்,அர்க்கியம் முதலியவைகளால் பூஜித்து, விதிப்படி பசுமாட்டை நிவேதித்து, கொடுத்ததை அத்யாத்ம ராமாயணம்,உத்தர காண்டம் சொல்கிறது!

" எந்த பசு கொல்லப் பட்டதோ அதன் இறைச்சியை சமைத்து பிராமணர்களுக்கு படைக்க வேண்டும் "(2 .5 . 2 )என்று "அஷ்டகா விதானம்" சொல்லுகிறது! இந்த அஷ்டகா விதானம் குறித்து, அதாங்க ...பசுவை எப்படி கொல்ல வேண்டும் ?எந்த மந்திரத்தைச் சொல்லி கொள்ளவேண்டும்? என்கிற வழிமுறையை, கிருஹஜ்ய சூத்திரம் இரண்டாவது அத்தியாயம் நான்காவது கண்டிகையில் சொல்லப் பட்டு உள்ளது!

மது பார்க்கம் இருக்கட்டும், மற்ற வேதங்கள், அர்த்த சாஸ்திரம், மனுதர்ம நூல்கள் சொல்லவதை அடுத்து பார்க்கலாம்!
அர்த்த சாஸ்திரம் குறித்து ஒரு அறிமுகம்!
அர்த்த சாஸ்திரத்தை எழுதியவராக சொல்லப்படும் சாணக்கியருக்கு வேறு கௌடில்யர்,விஷ்ணு குப்தர் ஆகிய பெயர்களும் உண்டு! அர்த்த சாஸ்திரம் பதினைந்து பகுதி உடைய உரைநடை நூலாகும்! ஒவ்வொரு சுலோகமும் முப்பத்தி இரண்டு ஆசைகளுடன் ஆறாயிரம் சுலோகங்களைக் கொண்டது! அர்த்தா என்பதற்கு மனிதர்களின் தன்மை? என்று பொருள். சாஸ்திரம் என்பதற்கு ஒழுக்கத்தின் மேல் எல்லைச் சட்டம் என்று பொருள்? மனிதர்கள் வாழும் நிலப் பகுதியை சேர்த்துக் கொள்வதும் அதைக் காப்பதும் என்பவற்றை அருத்தசாஸ்திரம் எனபது குறிக்கும் என்பர் கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி.
இதில் பெண்களைப் பற்றியும் வஞ்சனையான யாகங்களை செய்வது ஏன் அவசியம் என்பது பற்றி பலவித விமர்சனமான தகவல்கள் உள்ளது!

மாமிசம் பற்றிய செய்திகளைப் பார்க்கலாம்:

அர்த்த சாஸ்திரம் இரண்டாம் அதிகாரம்,அத்தியாயம் நாற்பத்து ஏழில் மாமிசம் தயாரிப்பது விற்பனை செய்வது குறித்து சட்டமாக குறிப்பிடுவதில் இருந்து சிலவற்றைப் பார்ப்போம்!

மிருகம் பசு இவற்றின் இறைசிகளை கொன்றவுடன் விற்பனை செய்துவிட வேண்டும்!
(எலும்பு உடையதாக இருப்பின் அதனுள் கலந்து இருக்கும் எலும்புக்கு தகுந்த படி இறைச்சியை ஈடு கொடுக்க வேண்டும்!)
இவற்றுள் கன்று,ஆனேறு,பசு இவைகளைக் கொல்ல தகாதன. ( கொல்ல அனுமதிக் பட்ட பசு இனத்தில், கன்றீனும் பசுவும்,பொலி எருதும் கொல்லக் கூடாது! ( காரணம் விருத்திக்கு பதிப்பு ஏற்படும் என்பதால்)

நோயுற்ற விலங்குகள்,தானே இறந்த விலங்குகள், காட்டில் கொன்று உண்டது போக எஞ்சிய இறைச்சியை,தீ நாற்றமுடைய இறைச்சியை விற்பனை செய்யக் கூடாது! அப்படி விற்பனை செய்தால் பன்னெண்டு பணம் தண்டமாக தரவேண்டியது இருக்கும்!

எனபது போன்ற சட்டங்களும் நடைமுறைகளும் இருந்து உள்ளத்தில் இருந்து யாகத்தில் மட்டுமே பசுகளும், ஏனைய உயிகளும் பலியிட்டு கொள்ளப்படவில்லை, மாமிசம் புசிக்கப் படவில்லை எப்போதும் எல்லா நேரத்திலும் மாமிசம் உணவாக பயன்படுத்த பட்டு வந்தது என்பதும், விற்பனை செய்யப்பட்டு வந்ததும் அறியா முடியும்!

ராமனும் லட்சுமணனும் உண்ட மாமிசங்கள்:

" ஸ்ரீராமர் சதா வேட்டையாடிக் கொண்டிருப்பார்.பெரும்பாலும் மான் வேட்டை அவருக்கு பிரியமானது! அவரின் ஆயுதம் வில்லும் அம்புமாக இருந்தது!" ( ஆரிய முசாபிர் பக்கம் 116 .)

"ராமரும் லட்சுமணரும் பட்சியை அடித்து கொண்டு வந்தார்கள். மாலையில் அதன் இறைச்சியை புசித்து,ஒரு விருஷத்தின் (மரத்தின்)கீழ் தங்கியிருக்க சென்று விட்டார்கள்! " ( அயோத்தியா காண்டம்,சருக்கம் 52 ,சுலோகம் 102 )

" ராமர் லட்சுமனரைப் பார்த்து விரைவாக ஒரு மானை வதைத்துக் கொண்டு வா! ஏனெனில்,சாஸ்திரத்தில் எழுதப் பட்டு இருக்கிறபடி நாம் செய்ய வேண்டும் என்றார்! லட்சுமணர் இவ்வுத்தரவைப் பெற்று மானை வதைத்துக் கொண்டு வந்தார். அதைக் கொண்டு, "ஹோண்" செய்து புசித்தார்கள்!" ( அயோத்தியா காண்டம்,சருக்கம் 56 ,சுலோகம் 24 -26 )

ராமர் பரத்வாஜர் ஆசிரமத்துக்கு சென்றபோது அவருக்கு மது பர்க்கம் வழங்கப் பட்டது!

புதிய இறைச்சியையும் காய்ந்த இறைச்சியையும் குகன் பரதனுக்கு வழங்கினான்!

" பாம்பைப் பொய்கையில் ரோஹிதம்,சக்ரதுண்டம்,நலமீன்கள் ஆகிய பெரிய முள் உள்ள மீன்கள் நிறையக் கிடைக்கும் அவை நல்ல ருசியானவை, அவைகளை வேகவைத்து சாப்பிடுங்கள்" என்று ராமர்க்கு கபந்தன் சிபாரிசு செய்தார்!! (செளரி,இந்தியாவின்களையும்,கலாச்சாரமும், பக்கம், 105 -107 )

சீதை தனது குடிலுக்கு வந்த ராவணனிடம், "அந்தண சீலரே ! அதற்குள் எனது கணவர் பலன்களையும், கிழங்குகளையும் , இறைச்சியையும் எடுத்துக் கொண்டு இங்கே திரும்பி விடுவார்! தாங்கள் அதுவரை இளைப்பாறுங்கள் " என்று உபசரித்தாள்! (அ.லே. நடராஜன்,வால்மீகி ராமாயணம்,)

இப்படி பல நிகழ்சிகள் ராமாயணத்தில் ராமனும் லட்சுமணனும் இதர கதாபாத்திரங்களும் மாட்டு கறியும்,மற்ற இறைச்சியும் உண்டது குறித்து உள்ளான. இன்று ராமர் மட்டு மல்ல, அவரை வழிபடுவதாக கூறும் விஷ்ணு தாசர்கள் பசுதோல் போர்த்திய புலிகளாக மாறி, பசுவேசம் போடுகின்றனர்! அதாவது, சாது வேடம் போடுகின்றனர்!

அதுமட்டும் இன்றி, பசுவை கொல்லக் கூடாது, பசுவதை தடை சட்டத்தைக் கொண்டுவர வேண்டும் என்று ஆளுக்கு தகுந்த படியும், இடத்துக்கு தகுந்தபடியும் பேசியும் வருகின்றனர்! இவர்களது உண்மையான நோக்கம், பசுக்கள் மேல் இவர்களுக்கு வந்த பசுபாசமோ, பிரியமோ நிச்சயம் இல்லை என்பதை புரிந்து கொல்ல வேண்டும், தாங்கள் ஆச்சார, பவித்திரமான, ஒழுக்க சீலர்கள், எந்த உயிரையும் கொல்லக் கூடாது என்ற அஷிம்ஷா வாதிகள் என்று இப்போது காட்டிக் கொள்ளவும், இன்று மாமிசம் சாப்பிடும், குறிப்பாக மாட்டுக் கறி சாப்பிடும் ஆதி திராவிட மக்கள் மீதும், இந்து மதத்தை வெறுத்து ஒதுங்கி இஸ்லாம் மார்க்கத்தை புதிதாக ஏற்றுக்கொண்டுள்ள இஸ்லாமியர், கிருஸ்தவர்கள் மீது கொண்டுள்ள வெறுப்பு உணர்வும் தான் காரணமாகும்!

இந்து மதத்தை இந்தியாவின் மதமாகவும், இந்திய நாட்டை இந்துகள் என்று சொல்லும் இவர்களின் தனி உரிமை சொத்தாகவும் எண்ணிக்கொண்டு ஆட்டம் போடும் இந்த ஆரியர்களின் வழித் தோன்றல்களுக்கு தலைவராக இருந்த டாக்டர் மூஞ்சே 1927 ஆண்டு, அம்பாலாவில் நடைபெற்ற இந்து மகாசபையிலும், பம்பாயில் நடைபெற்ற சபைக் கூட்டத்திலும் சொல்லி இருப்பதைப் பாருங்கள்!

"தர்ம சாஸ்திரத்தின் மூலமாக புலால் உண்ணல குற்றம் அல்லது அதர்மம் என்று கூற முடியாது! மேலும் மாமிசம் புசித்து வருவதால், அவர்களின் அனேக சமூகக் கஷ்டங்கள் நிவர்தியாகக் கூடியதாக இருக்கிறது!" என்று குறிப்பிட்டு உள்ளார்!

இன்று விவேகானந்தரின் பிறந்த தினம்.

"வீரத் துறவி" என்று அழைக்கப்படும் விவேகானந்தரை இந்துமத சனாதானிகள் எப்படி எல்லாம் துன்புறுத்தி, துரத்தி அடித்தார்கள் எனபது மறைக்கப் பட்டு வருகிறது! இன்று கன்னியாகுமரி விவேகானதா பாறை அவர் தவம் செய்த இடமாக காட்டப் படுகிறது! புரட்சிகரமாக பேசிய வங்காளத்திலே பிறந்த நரேந்திரரை, கடலில் கல்லைக் கட்டி தூக்கிப் போட்டு கொல்லமுயன்ற கொடூரங்கள் மறைக்கப் பட்டுவிட்டது!

நமது கவலை அவர் பற்றியது அல்ல..! பசு பாதுகாப்பு சங்கம் என்ற ஒன்றை வைத்துக் கொண்டு அவரிடம் உதவி கேட்டு வந்தவருக்கு அவர் சொன்ன பதில் குறித்த பகிர்வு இந்த தொடர் பதிவுக்கு தேவையானது! எனவே விவேகானந்தரின், பசுபாதுகாப்பு சங்கப் பிரதிநிதி உடனான புரட்சிகர உரையாடலை அடுத்தப் பதிவில் பார்க்கலாம்!
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum