தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

திருமண தடை நீங்க திருமணஞ்சேரி சென்று இறைவனை தரிசித்தால் திருமணம் கைகூடுமா?

Go down

திருமண தடை நீங்க திருமணஞ்சேரி சென்று இறைவனை தரிசித்தால் திருமணம் கைகூடுமா?  Empty திருமண தடை நீங்க திருமணஞ்சேரி சென்று இறைவனை தரிசித்தால் திருமணம் கைகூடுமா?

Post  meenu Mon Feb 04, 2013 12:06 pm

திருமண தடை நீங்க திருமணஞ்சேரி சென்று இறைவனை தரிசித்தால் திருமணம் கைகூடுமா?
திருமண தடை நீக்கும் திருமணஞ்சேரி

வாசித்து கொண்டு இருக்கும் பக்கம் மாறும் பொழுது மாறும் பக்கத்தின் மேல் பகுதியில் இருக்கும் SKIP AD என்ற வார்த்தையை கிளிக் செய்யவும்.

ஒருவருக்கு திருமணம் தடை படுவதற்கு ஜோதிட ரீதியான காரணம் என்னவென்றால் அவருடைய ஜெனன ஜாதகத்தில் ஆண் ஜாதகமானால் லக்னத்துக்கு ஏழாம் வீட்டுக்கு அதிபதியும் சுக்ரனும், பெண் ஜாதகமானால் ஏழாம் வீட்டுக்கு அதிபதியும் செவ்வாயும் பாதிக்கபட்டிருந்தாலும் அவர்களுக்கு திருமண விஷயத்தில் தடை ஏற்பட்டு கொண்டே இருக்கும். இது ஜோதிட ரீதியான காரணம் என்றாலும் என்னுடைய ஜோதிட அனுபவத்தில் பிறந்த தேதி பிறந்த, தேதியின் கூட்டு எண், பிறந்த தேதியின் பிரமிடு கூட்டு எண், இவைகள் ராகு (எண் 4) கேதுவின் (எண் 7) ஆதிக்கத்தில் அமைந்து விட்டால் திருமண விஷயம் என்பது அவர்களுக்கு பல சோதனைகளை கொடுக்கும் .அதே போல் ஒருவரின் பெயர் கூட்டு எண் ராகு, கேது, புதனின் ஆதிக்கத்தில் அமைந்து விட்டால் அவருக்கு திருமண யோகம் என்பது முப்பது வயதுக்கு மேல் அமையலாம் அல்லது நாற்பது வயது நெருக்கத்தில் கூட அமையலாம்.
இத்தகைய திருமண தடையை நீக்கும் ஒரு திருத்தலம்தான் திருமணஞ்சேரி .
பூலோகத்தில் சிவபெருமான் உமையவளை திருமணம் செய்து கொண்ட திருத்தலங்கள் நிறைய உண்டு. அதாவது கைலாயத்தில் உமா தேவியும் சிவபெருமானும் ஒன்றாக எழுந்தருளி இருப்பார்கள். இருவருக்கும் ஊடல் எழும் . முடிவில் சிவபெருமான் கோபம் கொண்டு பார்வதியை பூலோகத்தில் பெண்ணாக அவதரிக்க செய்து தன்னை விரும்பி தவம் செய்ய வைத்து தவத்தின் பயனாக அன்னையை மணம் புரிந்து கொள்வார் . இப்படி பல முறை நிகழ்ந்து அதன் விளைவாக பார்வதியும் பூமியில் பல முறை அவதரித்து எம்பெருமானை பல முறை மணம் முடித்து இருக்கிறார்.
இப்படி இருக்கையில் ஈசனும் உமையவளும் வழக்கம்போல் கைலாயத்தில் அமர்ந்திருந்த வேளையில் சிவனின் கோபத்திற்கு ஆளாகி பிறகு அவரை மணந்து கொள்வதை காட்டிலும் தாமேமுன் வந்து என்னை மீண்டும் ஒரு முறை மணந்து கொள்ளுங்கள் என்று அவரிடம் கேட்டு அவர் விருப்பத்துடன் மணம் செய்து கொள்ளவேண்டும் என்று உமா தேவிக்கு விருப்பம் ஏற்பட்டது.உமா தேவியும் இந்த விருப்பத்தை சிவனிடம் சொல்ல அவர் மகிழ்ந்து வரும் பிரும்ம கற்பத்தில் உன் விருப்பபடியே உன்னை இன்னொருமுறை உன்னை மணம் புரிந்து உன் ஆசையை நிறைவேற்றுவேன் என்று வாக்களித்தார்.
தன் விருப்பத்திற்கு ஈசன் உடனே உடன்பட்டாலும் அவர் குறிப்பிட்ட காலம் வருவதற்கு இன்னும் வெகு காலம் இருக்கிறதே என்று எண்ணி அதன் காரணமாக ஈசனிடம் அலட்சியமாக நடந்துகொள்ளவே கோபமுற்ற இறைவன் பூலோகத்தில் நீ பசுவாக அவதரித்து வாழ கடவாய் என சாபமிட பூவுலகில் அம்பிகை பசு உருவமெடுத்து ஒரு காட்டிலே வாழ்ந்து வந்தாள் .
காலம் கடந்து திருமணம் செய்தாலும் அதுவரையில் ஈசனுடன் இருந்திருக்கலாமே அவ்வாறில்லாமல் இப்படி சாபம் ஏற்று பசுவாக வாழும்படி ஆகிவிட்டதை எண்ணி கண்ணீர் விட்டு வருந்தினார்.
அம்பிகையின் நிலை கண்டு மனம் இறங்கிய ஈசன அவளுக்கு உதவ விரும்பினார் . பிறகு ஈசனும் திருமணஞ்சேரியை அடுத்த கோமல் என்ற ஊரில் பசு மேய்ப்பவராக உருவெடுத்து பசுவாக இருக்கும் உமா தேவிக்கு பாதுகாப்பாக இருந்தார்.
இந்நிலையில் பரத மகரிஷி ஒரு யாகம் வளர்த்தார். இதுதான் உமையவளை உய்விக்க தகுந்த தருணம் என்று உணர்ந்த சிவபெருமான் யாக குண்டத்தில் உமையவளை தோற்றுவித்தார். யாக குண்டத்தில் அவதரித்த பெண் ஒரு தெய்வீக பெண் என்பதை அறிந்த பரத மகரிஷி அவளை அன்புடன் வளர்த்து வந்தார்.
அவள் வளர்ந்து பருவ வயதை அடைந்ததும் அவளுக்கு மணம் முடிக்க எண்ணினார்.
ஒரு நாள் பரத மகரிஷியின் கனவில் சிவபெருமான் தோன்றி முனிவரே உமது யாகம் கண்டு மகிழ்ந்தோம் .உமது யாககுண்டத்தில் ஒரு பெண்ணை அவதரிக்க செய்தது நான்தான் .அவளது திருமணத்தை பற்றி நீர் கவலைப்பட வேண்டாம். அவளை மனம் முடிக்க யாமே எதிர் கொண்டு வருவோம் . திருமணத்தை நீரே முன்னின்று செய்வீராக என்று அருளி மறைந்தார் .
உமையவளின் திருகல்யாணத்தை முன்னின்று நடத்த முழு மூச்சுடன் இறங்கினார்.
பிறகு உமாதேவியுடன் இறைவனை காண புறப்பட்டார். அப்பொழுது இறைவனே ஓரிடத்தில் அவரை எதிர் கொண்டார். அவரை மகரிஷி மாப்பிளையாக ஏற்று திருமணத்தை நடத்த அழைத்து சென்றார். இதனிடையில் இறைவன் இறைவி திருமணத்தை காண வானவர் அனைவரும் பூலோகத்தில் குவிந்து விட்டனர்.
பல்லோரும் வாழ்த்த ஈசனின் திருமணம் நடந்த இத்திருத்தலத்திற்கு திருமணஞ்சேரி என்று பெயர் அமைந்தது.
திருமண கோலத்தில் ஈசன் கல்யாண சுந்தரர் ஆக காட்சி தருகிறார். இறைவிக்கு இங்கே கோகிலாம்பாள் என்று பெயர்.
தங்கள் திருமணம் கைகூடுவதில் தடைகள் இருப்போர் திருமணஞ்சேரி வந்து வழிபட்டால் விரைவில் தடைகள் தகர்ந்து அவர்கள் திருமணம் இனிதே நடைபெறும் . இந்த திருமணஞ்சேரி மயிலாடுதுறையிலிருந்து சுமார் பத்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum