பதிணெண் புராணங்கள்
Page 1 of 1
பதிணெண் புராணங்கள்
1. பிரம்ம புராணம்
பிரம்மாவைப் பற்றியும், அவருடைய உலகப் படைப்புகளைப் பற்றியும் கூறுவது. கலியுகத்தில் ஏற்படும் கெடுதல்களும், மக்கள் மேற்கொள்ள வேண்டிய கடமைகளும், பக்தியின் அவசியமும் இதில் விரிவாகச் சொல்லப்பட்டுள்ளன.
2. பத்ம புராணம்
காயத்ரி சிறப்புகளையும், கற்பின் சிறப்பும் இதில் விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
3. பிரம்ம வைவர்த்த புராணம்
கிருஷ்ண பரமாத்வையே பிரம்மாவாக, பரப்பிரம்ம ஸ்வரூபமாகப் போற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது.
4. இலிங்கப் புராணம்
பரமசிவனுடைய வரலாறுகளையும், திருநீறு முதலியவற்றின் சிறப்புகளையும் இது எடுத்துச் சொல்கிறது.
5. விஷ்ணுப் புராணம்
விஷ்ணுவின் பெருமைகளை விளக்குகிறது.
6. கருட புராணம்
கருடன் கஷ்யப மகரிஷிக்குச் சொல்லியது. பிராணன் உடலை விட்டு நீங்கிய பின், அனுபவிக்கின்ற பலவிதமான நிலைகளைக் கூறுகிறது.
7. அக்கினி புராணம்
அக்கினியைப் பற்றிய புராணம் அக்னி, வசிஷ்டருக்கு உபதேசித்தது. மனிதன் செய்ய வேண்டிய செயல்கள், கடைப்பிடிக்க வேண்டிய நன்னெறிகள் முதலியவைகளைக் குறிக்கிறது.
8. மத்ஸ்ய (மச்ச) புராணம்
பலவகை விரதங்களின் பெருமைகளைப் பற்றியும், தானங்கள் செய்வது பற்றியும் இதில் சொல்லப்பட்டுள்ளன. சிரார்த்தத்தின் அவசியம், பிதுர் காரியங்கள் இவைகளைப் பற்றியும் இது விளக்குகிறது.
9. நாரத புராணம்
நாராதருடைய வரலாறும், மனித வாழ்க்கைக்குத் தேவையான நீதிகளும் விரிவாகச் சொல்லப்பட்டிருக்கின்றன.
10. வராஹ புராணம்
திருமாலின் அவதார மகிமை, அன்னதானம் முதலிய தர்மங்களின் சிறப்புகளைச் சொல்கிறது.
11. வாமன புராணம்
வாமன அவதார நிகழ்ச்சியை எடுத்துரைக்கின்றது.
12. கூர்ம புராணம்
கூர்ம அவதார நிகழ்ச்சி, மாயையால் வரும் துன்பங்கள் அவற்றை நீக்கும் முறைகள் பற்றிச் சொல்கிறது.
13. பாகவத புராணம்
விஷ்ணுவைப் பற்றியும், தேவியைப் பற்றியும், அன்னை பராசக்தியின் பெருமைகள் பற்றியும் தெளிவாகச் சொல்கிறது.
14. ஸ்கந்த புராணம்
முருகப் பெருமானின் வரலாறு சொல்லப்படுகிறது.
15. சிவ புராணம்
சிவபெருமானின் பெருமைகளை எடுத்துச் சொல்கிறது. இலிங்கோத்பவ நிகழ்வுகள் இதில் இடம் பெற்றிருக்கின்றன.
16. மார்க்கண்டேய புராணம்
மார்க்கண்டேயரால், ஜைமினிக்குச் சொல்லப்பட்ட புராணம். அத்ரி, அனுசூயை முதலியோர் வரலாறுகள் இதில் இடம் பெற்றிருக்கின்றன.
17. பிரும்மாண்ட புராணம்
பிரம்மாவால் படைக்கப்பட்ட பிரும்மாண்டங்கள் குறித்த பல்வேறு செய்திகள் இதில் இடம் பெற்றிருக்கின்றன.
18. பவிஷ்ய புராணம்
பவிஷ்ய என்றால் வரப்போகும் என்று பொருள். கலியுகத்தில் நடைபெறவிருக்கின்ற செய்திகளையும், இறைவன் கல்கி அவதாரம் எடுக்கவுள்ள செய்தியையும் வேத வியாசர் தன் முன்னறிவால் எடுத்துச் சொல்லியவை இதில் இடம் பெற்றிருக்கின்ற
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» வைணவ புராணங்கள்
» பதினெண் புராணங்கள்
» அஷ்டா தச புராணமெனும்பதினெண் புராணங்கள்
» வைணவ புராணங்கள்
» பதினெண் புராணங்கள்
» பதினெண் புராணங்கள்
» அஷ்டா தச புராணமெனும்பதினெண் புராணங்கள்
» வைணவ புராணங்கள்
» பதினெண் புராணங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum