உயிர்ப்பான செக்ஸ் வாழ்க்கைக்கு மூலிகை வழி!
Page 1 of 1
உயிர்ப்பான செக்ஸ் வாழ்க்கைக்கு மூலிகை வழி!
FILE
ஆண்குறி செயலிழப்பு, மற்றும் ஆண்மைக் குறைபாடு உடையவர்கள் மூலிகை வைத்தியம் மூலம் செயலூக்கமுள்ள செக்ஸ் வாழ்க்கைக்குத் திரும்பியுள்ளதாக கொரியாவைச் சேர்ந்த ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
'ஜின்செங்' வேரிலிருந்து தயாரிக்கப்பட்ட ஒரு மாத்திரை ஆண்மைக்குறைபாடு, ஆண்குறி மலட்டுத் தன்மை ஆகியவற்றிற்கு சிறந்த நிவாரணியாக இருப்பது சோதனை மூலம் தற்போது ஆதார பூர்வமாக நிரூபிக்கப்பட்டதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
சில வாரங்களுக்கு இந்த ஜின்செங் மாத்திரைகளை எடுத்துக் கொண்ட ஆண்மையிழந்த பல ஆண்கள் அதன் பிறகு செக்ஸை உத்வேகத்துடன் அனுபவித்ததாகக் கூறியுள்ளனர்.
மலட்டுத் தன்மை, ஆண்குறி உயிர்ப்பின்மை, செயலிழந்த ஆண்குறி ஆகிய குறைபாடுகள் உள்ள 100 பேர் தேர்வு செய்யப்பட்டு சிலவாரங்களுக்கு ஜின்செங் மாத்திரைகள் கொடுக்கப்பட்டன.
சிகிச்சை முடிந்து அவர்கள் செக்ஸ் வாழ்க்கை உற்சாகமாக மீண்டும் உயிர்ப்படைந்ததாக அவர்கள் தெரிவித்ததை இந்த ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
ஜின்செங் எடுத்துக் கொண்டால் பலன் இருக்கும் என்பது ஒரு வதந்தி வடிவமாகவே இருந்து வந்தது, ஆதாரமற்றுத்தான் அந்த ஜின்செங் பலரால் எடுத்துக் கொள்ளப்பட்டது. இனி என்ன அதான் ஆதாரம் வந்து விட்டதே, ஜின்செங் இனி சந்தையில் சக்கை போடு போடப்போடுகிறது.
ஜின்செங்கில் உள்ள ஜின்செனாசைட் அல்லது பேனாக்சாசைட் என்ற ஒரு மூலப்பொருளே 'அது' உயிர்ப்படைய மூலக் காரணமாம்.
தென் கொரிய தலைநகர் சியோஇல் உள்ள யோன்சீ மருத்துவப் பல்கலைக் கழகத்தில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது ஆண் மலட்டுத் தன்மை உள்ள ஒரு 119 ஆண்கள் இதற்காகத் தேர்வு செய்யப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இவர்களில் பாதிப்பேருக்கு கொரிய ஜின்செங் வேர் அடங்கிய மாத்திரைகள் ஒரு நாளைக்கு 4 கொடுக்கப்பட்டது. சில வாரங்களுக்குப் பிறகு அவர்களது செக்ஸ் வாழ்க்கையில் மாற்றம் இருப்பது தெரியவந்தது.
இந்த ஆய்வு மலடு பற்றிய சர்வதேச ஆய்வு இதழில் வெளியாகியுள்ளது.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» உயிர்ப்பான செக்ஸ் வாழ்க்கைக்கு மூலிகை வழி
» வாழ்க்கைக்கு அறம்
» வாழ்க்கைக்கு விஞ்ஞானம்
» வாழ்க்கைக்கு அறம்
» ஆரோக்கிய வாழ்க்கைக்கு..
» வாழ்க்கைக்கு அறம்
» வாழ்க்கைக்கு விஞ்ஞானம்
» வாழ்க்கைக்கு அறம்
» ஆரோக்கிய வாழ்க்கைக்கு..
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum