பெண்களுக்கு சிறந்தது ஜனன ஜாதகமா அல்லது ருதுவான ஜாதகமா?
Page 1 of 1
பெண்களுக்கு சிறந்தது ஜனன ஜாதகமா அல்லது ருதுவான ஜாதகமா?
பெண்களுக்கு சிறந்தது ஜனன ஜாதகமா அல்லது ருதுவான ஜாதகமா?
பொதுவாக பெண்களுக்குப் பார்க்கும்போது பிறந்த ஜாதகமே சிறந்தது. ருதுவான ஜாதகம் என்பது பாதியில் துவங்கி பாதியில் நிற்கும் ஒரு விஷயம்.
பிறந்த ஜாதகத்தில் நடக்கக் கூடிய தசாபுத்தியில் தான் ஒரு பெண் ருதுவாகிறாள். அதாவது பிறந்த ஜாதகப்படி குரு திசையில் புதன் புத்தி நடக்கிறது என்றால் அதே மாதிரி ஏதோ ஒரு திசையில் புதன் புத்தி நடக்கும்போதுதான் ருதுவாகிறாள்.
அதாவது பிறந்த ஜாதகத்தின் அடிப்படையிலேயே ருதுவாகும் காலம் அல்லது உடலியல் மாற்றம் நிர்ணயிக்கப்படுகிறது. எனவே பிறந்த ஜாதகத்தை வைத்து எப்போது அவர்கள் ருதுவடைவார்கள் என்பதை கணிக்கலாம்.
சில மாதவிலக்குப் பிரச்சினை உள்ள பெண்களைப் பார்க்கலாம். சிலருக்கு அதிக ரத்தப்போக்கு, ஒரு நாளில் நிற்பதையும் பிறந்த ஜாதகத்தில் பார்த்துவிடலாம். மாதவிலக்கு நிற்பதையும் ஜாதகத்தில் கணித்துவிடலாம்.
செவ்வாய் ரத்தத்திற்குரிய கிரகம். செவ்வாய் பகை கிரகங்களுடன் சேர்ந்திருந்தாலோ, பகை கிரகங்களின் பார்வை பெற்றிருந்தாலோ பகை நட்சத்திரங்கள் அமர்ந்திருந்தாலோ மாதவிலக்கு கேள்விக்குரியாகும்.பூப்பெய்தாமலே போகும்படியான ஜாதகங்களும் உண்டு. அதற்கு அவர்கள் ஜாதகத்தில் லக்னாதிபதி, செவ்வாய், உடலாதிபதி சந்திரன், சந்திரன் முன்னும் பின்னும் பாவ கிரகங்களால் சூழப்பட்டால் அதுதான் காரணம்.
மாதவிலக்கு ஒழுங்கின்மை காரணமாகத்தான் முரட்டுத்தனமான குழந்தைகள் பிறக்கின்றன. மாதவிலக்கு என்பது சீராக அமைய வேண்டும்.
நாளமில்லா சுரப்பிகளில் ஏற்படும் மாற்றங்களே மாதவிலக்கு எனப்படும். அந்த நாட்களில் இரும்பு சத்து மிக்க எள் உருண்டை, ஒழுக்கங்கஞ்சி போன்ற உணவுகளை அளிப்பார்கள். ஆனால் இப்போது அவ்வாறு அளிப்பதில்லை. அதனால்தான் பல கன்னிப் பெண்கள் பலவீனமாக இருக்கிறார்கள். அவர்களது மகப்பேறு காலத்தில் பல சிக்கல்களையும் சந்திக்கிறார்கள். சிசேரியன் அளவிற்குப் போவதற்கும் இதுவே காரணம்.
பூப்பெய்தல், முன்கூட்டியே பூப்பெய்தல், பூப்பெய்தாமலே போவது எல்லாமே கிரகங்களின் அடிப்படையில்தான். இப்போது பெண்கள் மிகச் சிறிய வயதிலேயே பூப்பெய்தும் நிலை ஏற்படுகிறது. அதுவும் செவ்வாயின் மாற்றம் தான். அதுவும் ஜனன ஜாதகத்தின் அடிப்படையில்தான் பூப்பெய்தல் நிகழ்கிறது.
பூப்பெய்தல் என்பது பூ மலரும் நேரமாகும். அதாவது தாமரை மலரும் நேரம் அல்லது அல்லி மலரும் நேரம். தாமரை காலை வைகறையில் இருந்து 7 மணிக்குள் மலரும். அதற்குள் அல்லது அல்லி மலரும் நேரம் 5.30 மணிக்கு மேல் 7.30 மணிக்குள்ளாகத்ததான் பெண்களின் உடலில் மாற்றம் ஏற்படும். அதை வைத்தே பூப்பெய்தல் என்று அழைக்கப்பட்டது.
ஆனால் பூப்பெய்தல் எந்த நாளில் வந்திருக்கிறார்கள், எந்த நட்சத்திரத்தில் வந்திருக்கிறார்கள் என்பதை மேலோட்டமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். ஆனால் ஜனன ஜாதகமே சிறந்தது
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» திருமண வாழ்க்கையில் தோல்வி ஜாதகமா ?
» ஜோதிடம் ஜாதகம் ருதுவான திதிகளும் பரிகாரங்களும்
» பெண்களுக்கு குறிப்பாக இளம் பெண்களுக்கு ஒரு எச்சரிக்கை!
» பெண்களுக்கு குறிப்பாக இளம் பெண்களுக்கு ஒரு எச்சரிக்கை!
» குழந்தை பிறந்ததும்
» ஜோதிடம் ஜாதகம் ருதுவான திதிகளும் பரிகாரங்களும்
» பெண்களுக்கு குறிப்பாக இளம் பெண்களுக்கு ஒரு எச்சரிக்கை!
» பெண்களுக்கு குறிப்பாக இளம் பெண்களுக்கு ஒரு எச்சரிக்கை!
» குழந்தை பிறந்ததும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum