மருமகன் மருமகளால் நிம்மதி கிடைக்குமா?
Page 1 of 1
மருமகன் மருமகளால் நிம்மதி கிடைக்குமா?
வணக்கம் நண்பர்களே இன்றைய தேதியில் சோதிடர்களிடம் கேட்கும் முதல் கேள்வியே என் மருமகள், மருமகனால் நிம்மதி ஏற்படுமா அதாவது அவர்கள் பிரச்சினையை ஏற்படுத்துவார்களா என்று கேட்கிறார்கள் பெற்றோர்கள் இந்த கேள்வி வர காரணம் அவனவன் திருமணம் முடிந்துவிட்டால் எப்படா பெற்றோர்களை வெளியில் அனுப்புவது என்று தான் முதலில் நினைக்கிறார்கள் அதனால் அவர்கள் ஒரு எச்சரிக்கைக்காக இந்த கேள்வியை கேட்கிறார்கள்.
மருமகள் பற்றி தான் அதிக கேள்விகள் கேட்கிறார்கள். மருமகள் நல்லவளாக இருப்பாள மருமகளால் பிரச்சினை எங்களுக்கு ஏற்படாதே என்று தான் கேட்கிறார்கள்.
முதியோர்கள் இல்லம் இன்று நகரங்களில் பெருகிவிட்டது. மனிதர்கள் அனாதையாக ஆக்கபட்டுவிட்டார்கள் இதனை பார்க்கும் போது ஒவ்வொருவருக்கும் நமக்கு வரும் மருமகன் அல்லது மருமகள் நல்லவர்களா இருப்பார்களா என்று ஒவ்வொருவரும் எண்ண தொடங்கிவிட்டார்கள்.
நாம் அனாதை என்று இந்த உலகத்தில் இருக்ககூடாதே அந்த நிலை நமக்கு வரக்கூடாதே என்று நினைத்து இந்த கேள்வியை கேட்க ஆரம்பித்துவிட்டார்கள்.
உங்கள் ஜாதகத்தில் பதினோராவது அதிபதி நல்ல நிலையில் இருந்தால் உங்களுக்கு வரும் மருமகன் அல்லது மருமகளால் நிம்மதி உங்களுக்கு கிடைக்கும் .
பதினோராவது வீட்டு அதிபதி 6 வது வீட்டில் இருந்தால் உங்கள் மருமகள் அல்லது மருமகனால் நீங்கள் அடி வாங்குவீர்கள்.அவர்களின் வேலையை நீங்கள் செய்தே காலத்தை ஒட்ட வேண்டி வரும். சரியான சாப்பாடு கூட போடமாட்டார்கள்.
பதினோராவது வீட்டு அதிபதி 8 வது வீட்டில் இருந்தால் உங்கள் மருமகள் அல்லது மருமகனால் அவமானம் அடைவீர்கள். ஊரே உங்களை திட்டி தீரும் நிலையை ஏற்படுத்துவார்.
பதினோராவது வீட்டு அதிபதி 12 வது வீட்டில் நின்றால் அவர்களுக்கு நீங்கள் காலம் முழுவதும் செலவு செய்தே காலத்தை ஒட்டவேண்டிவரும். எதற்கு எடுத்தாலும் இருக்கிறதை பிடிங்கி கொண்டு சென்றுவிடுவார்கள். சில மருமகன் வங்கி மாதிரி அனைத்தையும் இவர்களிடமே எடுத்துக்கொண்டு இருப்பார்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» மருமகளால் அதிர்ஷ்டமா?
» மருமகளால் அதிர்ஷ்டமா?
» எனக்கு வேலை கிடைக்குமா
» மங்காத்தாவுக்கு யு / ஏ… கிடைக்குமா வரிவிலக்கு?
» எனக்கொரு தாய்மடி கிடைக்குமா?
» மருமகளால் அதிர்ஷ்டமா?
» எனக்கு வேலை கிடைக்குமா
» மங்காத்தாவுக்கு யு / ஏ… கிடைக்குமா வரிவிலக்கு?
» எனக்கொரு தாய்மடி கிடைக்குமா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum