தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சத்தியகிரீஸ்வரர் திருக்கோயில்

Go down

சத்தியகிரீஸ்வரர் திருக்கோயில் Empty சத்தியகிரீஸ்வரர் திருக்கோயில்

Post  amma Sat Jan 12, 2013 3:43 pm

மூலவர் - சத்தியகிரீஸ்வரர்
அம்மன் - வேணுவனேஸ்வரி
தல விருட்சம் - மூங்கில்மரம்
தீர்த்தம் - சந்திரபுஷ்கரணி
பழமை - 1000-2000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் - திருமய்யம்
ஊர் - திருமயம்
மாவட்டம் - புதுக்கோட்டை

பெருமாள் கோயிலுடன் இணைந்து கட்டப்பட்டிருக்கும் இந்த சத்தியகிரீஸ்வரர் உடனுறை வேணுவனேஸ்வரி அம்பாள் திருக்கோயில் அருள் வாய்ந்தது.

பல்லவர் காலத்தில் சைவ வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக ஒரே சுற்றுச்சுவருடன் இக்கோயிலும் இதற்கு பக்கத்தில் உள்ள பெருமாள் கோயிலும் திருமயம் மலைச் சரிவில் ஒரே கல்லில் குடைவரைக் கோயில்களாக விளங்குகிறது. மூலவர் சந்நிதி குடைவரைக் கோயிலாக அமைந்துள்ளது என்பது மிகவும் சிறப்பு. இத்தலத்தில் மாதந்தோறும் பௌர்ணமி அன்று கிரிவலத்தின்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.

சிறப்பு..

குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் தொட்டில் செய்து வேணுவனேஸ்வரி அம்பாளை வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கிறது. தவிர திருமண பாக்கியம் வேண்டுவோர் இத்தலத்தில் வணங்கினால் நிச்சயம் வேண்டுதல் நிறைவேறும். வளையல், பொம்மை ஆகியவற்றை உபயம் செய்து வழிபடுகிறார்கள்.
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum