தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அட்சய புரீஸ்வரர் கோவில்

Go down

 அட்சய புரீஸ்வரர் கோவில் Empty அட்சய புரீஸ்வரர் கோவில்

Post  ishwarya Thu May 23, 2013 11:54 am

தஞ்சாவூர் அருகே பட்டுக்கோட்டையில் இருந்து தெற்கே 30 கி.மீ. தொலைவில் விளங்குளம் என்ற பகுதியில் அட்சய புரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. பேராவூரணியிலிருந்து நகரப் பேருந்திலும் இந்தத் திருக்கோவிலுக்கு செல்லலாம்.

அட்சய திருதியை அன்று இக்கோவிலில் வழிபட்டால் காரிய தடைகள் நீங்கி சகல யோகங்கள் பெறலாம். சூரிய பகவானின் மகன் சனி பகவானுக்கும் இன்னொரு மகன் எமதர்மனுக்கும் இருந்த பகை காரணமாக ஒரு முறை சனி பகவானின் காலில் எமதர்மன் ஓங்கி அடிக்க... சனி பகவானுக்கு ஊனம் ஏற்பட்டது.

கால் ஊனத்துடன் விமோசனம் தேடி மானுட ரூபத்தில் பூலோகத்தில் பல திருத்தலங்களுக்கும் அலைந்தார். அப்போது விளாமரங்கள் அடர்ந்த (விளங்குளம்) பகுதிக்கு வந்தபோது, பரந்து விரிந்து தரையில் காணப்பட்ட ஒரு விளாமரத்தின் வேர் தடுக்கி, அருகில் உள்ள ஒரு பள்ளத்தில் விழுந்து விட்டார் சனி பகவான்.

அந்த நாள் திருதியையும் பூச நட்சத்திரமும் சனி வாரமும் சேர்ந்த புனித நன்னாள். சனி விழுந்த அந்த நேரத்தில், பல கோடி யுகங்களாக மறைந்திருந்த பூச ஞான வாவி என்ற ஞான தீர்த்தம் சுரந்து, சனி பகவானை மேலெழுப்பி கரை சேர்த்தது. இந்நிகழ்வில், சனி பகவானின் கால் ஊனம் நிவர்த்தி ஆகி விட்டது.

சனி கால் ஊனம் நீங்கி மந்தா, ஜேஷ்டா எனும் இரு பத்தினியரை மணம் செய்து கொண்டு ஆதி பிருஹத் சனீஸ்வரராக, திருமணக் கோலத்தில் இத்தலத்தில் அருள்பாலித்து வருகிறார். மேலும் விளா வேர் தடுத்து விழுந்து சுரந்த குளமானதால், விளம்குளம் என்றழைக்கப்பட்டு, பின்னர் இந்தக் கிராமம் விளங்குளம் என்று அழைக்கப்படுகிறது.

கோவிலில் விஜய விநாயகர் மேற்கு முகமாக இருந்து அருள்பாலிக்கிறார். அட்சயபுரீஸ்வரர் சனிக்குக் காட்சி அளித்து, இந்த தலத்தில் திருமணப் பிராப்தியையும் அவருக்குத் தந்தார். பின்னர் குறைவில்லாத செல்வத்தை அள்ளித்தரும் அட்சயபுரீஸ்வரராக இங்கு நிலை கொண்டார்.

அட்சய திரிதியை அன்று விளங்குளம் ஸ்ரீஅட்சயபுரீஸ்வரர் ஆலயம் சென்று சிறப்பு வழிபாடு செய்வது மிகவும் நல்லது. மூல மூர்த்தி சிவலிங்கத்துக்கு, சந்தனக் காப்பில் முத்துக்கள் பதித்து வழிபட வேண்டும். பின், ஸ்ரீசனீஸ்வரமூர்த்திக்கு புனுகு கலந்த சந்தனக் காப்பிட்டு, அதில் எள், அரிசி, கோதுமை, பாதாம் பருப்பு, குங்குமப்பூ மற்றும் நவதானியங்களைப் பதித்து பூஜிக்க வேண்டும்.

இதனால், சந்ததிகள் உணவுப் பஞ்சம் இல்லாமல் நல்வாழ்வு வாழ்வார்கள். பெண் பிள்ளைகள் புகுந்த வீட்டில் துன்பமில்லாமல் வாழ்வர். அட்சய திருதியை அன்று குறைந்தது ஒரு வார காலத்துக்கு தேவையான உணவுப் பண்டங்களை தானமாக அளிக்க வேண்டும்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum