தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

முடிந்து போன தமிழீழத்தை தமிழருக்கு சொல்லிக்கொண்டு திரியும் அரசியல் வாதிகள்!

Go down

முடிந்து போன தமிழீழத்தை தமிழருக்கு சொல்லிக்கொண்டு திரியும் அரசியல் வாதிகள்! Empty முடிந்து போன தமிழீழத்தை தமிழருக்கு சொல்லிக்கொண்டு திரியும் அரசியல் வாதிகள்!

Post  ishwarya Thu May 02, 2013 11:46 am

சர்வதேச நாடுகளின் ராஜதந்திர அணுகுமுறைகள் பற்றி நாம் என்ன தெரிந்து வைத்திருக்கிறோம்? அமெரிக்காவோ ஐ.நா.வோ இந்தியாவோ நமக்கு தமிழீழத்தை எடுத்துத் தந்துவிடப் போகின் றன என்று காட்ட முற்படுகிறோம். அந்த நம்பிக்கையைக் காட்டிக் காட்டி மக்களை உசுப்பேற்றிவிட்டுக் கொண்டிருக்கிறோம். ஏதோ ஒரு மகாநாட்டைச் சுட்டிக்காட்டி நமக்கான வெளிச்சம் அங்கிருந்துதான் வரப்போகிறது என்று அடித்துச் சொல்கிறோம். அந்த மகாநாடுகள் முடிந்தபின்னர் அமெரிக்காவோ இந்தியாவோ ஐ.நா.வோ முதுகில் குத்திவிட்டன - துரோகம் செய்துவிட்டன என்று சொல்லி அதற்கும் கொந்தளித்தபடி இருக்கிறோம்.

எங்களது உணர்ச்சிகரமான எதிர்பார்ப்புகள் விருப்பங்கள் மட்டும்தான் உலக அரசியல் என்று நாம் புரிந்துவைத்திருக்கிறோமா? அதற்கப்பால் நடக்கப் போவது என்ன, நடைமுறைச் சாத்தியமானது என்ன, சர்வதேச நாடுகளின் அணுகுமுறைகள் என்ன என்பது பற்றியெல்லாம் நாம் சிந்திக்க மாட்டோமா? அல்லது அதுபற்றிக் கருத்துச் சொல்பவர்களுக்கு நாம் காது கொடுக் கவே மாட்டோமா? அமெரிக்கத் தீர்மானம் தமிழ்மக்களுக்கானது. எனவே அதை இந்தியா ஆதரிக்குமா ஆதரிக்காதா? தீர்மானம் சபையில் நிறை வேறுமா தோற்குமா? என்ற கேள்விகளில் கொந்தளிக்கும்படி தானே கடந்த நாலு மாதங்களும் மக்களைக் கிடுக்கிப்பிடியில் வைத்துவிட்டார்கள்! தீர்மானம் நிறைவேறி என்ன, விட்டென்ன, அதனால் நமது மக்களுக்கு எதுவுமில்லை.

அதெல்லாம் அந்தந்த நாடுகளுக்கான நிகழ்ச்சிநிரல் என்பதைப் புரிந்துகொள்ளாமலேயா வருடாவருடம் செக்குமாடுகள் போல் அதையே சுற்றிச் சுற்றி வருவோம்? அமெரிக்கா தமிழர்களுக்காக தீர்மானம் கொண்டுவருகிறது என்று நம்புவதற்கான தர்க்கம் என்ன? யுத்தத்தில் முன்னணியில் ஈடுபட்ட தளபதிகளில் ஒருவரான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா ஒரு போர்க் குற்றவாளி என்றவாறான பிரச்சாரங்களை பல மனித உரிமை அமைப்புக்கள் பிரச்சாரப்படுத்தி வருகின்ற சூழலில்தான், சவேந்திர சில்வா அமெரிக்க மரையன் படைப்பிரிவின் பல்கலைக்கழகத்தில் உரையாற்றியிருக்கின்றார். அதாவது அவர்களது அழைப்பில் சென்று, தீவிரவாதம் எவ்வாறு அழிக்கப்பட்டது என்னும் தலைப்பில் அங்கு வகுப்பெடுத்திருக்கின்றார். இது செய்தியாக வந்ததை நாம் அறியோமா?

இதுதவிர, அமெரிக்க பசுபிக் கட்டளைபீடத்தின் படை அதிகாரிகள் குழுவொன்று, இங்குவந்து கடந்தமாதம் இலங்கைப் படையினருக்கு பயிற்சிகளை அளித்துள்ளது. வவுனியா பூ ஓயா விலுள்ள இலங்கை இராணுவத்தின் கண்ணிவெடி அகற்றும் பிரிவு முகாமில் இப்பயிற்சி இடம்பெற்றது. இதுவும் நமது பத்திரிகைகளில்தானே செய்தியாக வந்தது? சர்வதேச அரசுகளிடையிலான உறவுகளைப் புரிந்துகொள்ளாமல், எவ்வாறு அமெரிக்கா - இலங்கை மோதல் என்று தமிழ்ப் பத்திரிகைகள் குழந்தைத்தனமாக தலைப்பெழுதி ஏமாற்றுவதைப் பார்த்து மக்களும் ஏமாறுகின்றார்கள்?

தமிழகத்தில் மாணவர்கள்தான் தமிழீழக் கோரிக்கையை வைத்துப் போராடுகின்றார்கள் என்றால், பழுத்த அரசியல்வாதியான கருணாநிதி போன்றவர்களுக்கும் தெரியாதா அதன் சாத்தி யமின்மை பற்றி? எதற்காக ஏமாற்றுகிறார்கள்? நமது மக்களும் அதையெல்லாம் பார்த்து உசார்ப்பட்டுக் கொள்ளவேண்டும் என்று நம் ஊடகங்களும் ஏமாற்றுகின்றன. இலங்கைத் தமிழ்மக்களுக்கு நடைமுறைச் சாத்தியமான ஒரு தீர்வைக் கோரி இவர்கள் யாரும் போராடுவதில்லை; கவனப்படுத்துவதில்லை. தீர்வு வராமல் இந்த அவலச் சூழல் நீடிப்பதற்கு வேண்டியவற்றையே செய்துகொண்டிருக்கிறார்கள். தமிழ் அரசியல்வாதிகளும், தமிழ் ஊடகங்களும் தங்கள் சுயலாபங்களைக் கைவிட்டு எப்போது யோசிப்பார்கள்? நம் மக்கள் தமிழீழக் கன விலிருந்து மீண்டு, தரையில் இறங்கி யதார்த்தமுணர்ந்து

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» பிரித்தானியாவில் சிங்களவரை தாக்கிய இரு தமிழருக்கு 8, 7 வருடங்கள் கம்பி.
» ஆசின் நடத்திய முகாமில் பங்கேற்ற 10 தமிழருக்கு பார்வை போனது!!
» நானும் ஈழத் தமிழன்தான் – நாம் தமிழருக்கு கருணாஸ் பதில்
» சிங்களருக்கு இணையான அந்தஸ்து தமிழருக்கு கிடைக்கும் வரை எனது அரசு ஓயாது!- ஜெ
» சிங்கம்-2 படப்பிடிப்பு முடிந்து பூசணிக்காய் உடைத்தாச்சு!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum