தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சென்னை கோவில்களில் ஆடிப் பெருவிழா

Go down

சென்னை கோவில்களில் ஆடிப் பெருவிழா Empty சென்னை கோவில்களில் ஆடிப் பெருவிழா

Post  birundha Mon Apr 08, 2013 10:50 pm


* திருவேற்காடு கருமாரியம்மன் கோவில்: திருவேற்காடு கோவிலில் ஆடி, ஆவணி, புரட்டாசி 3 மாதமும் ஆடிப்பெரு விழா நடைபெற உள்ளது. செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் 1008 சங்காபிஷேகம், 108 பால்குடம் மற்றும் சிறப்பு பூஜைகள், அம்மன் உற்சவம் நடைபெறும். மேலும் தகவல்களுக்கு 26800880 மற்றும் 26800487.

* மாங்காடு காமாட்சி அம்மன்: மாங்காடு காமாட்சி அம்மன் கோவிலில் ஆடி மாத 4 வெள்ளிக்கிழமைகளில் 108 கலசாபிஷேகம் நடைபெறும். ஆடிப்பூரம் தினத்தன்று 1008 கலசாபிஷேகம் நடைபெறும். மேலும் தகவல்களுக்கு 26272053.

* மயிலாப்பூர் முண்டகக்கன்னி அம்மன்: மயிலை முண்டகக்கன்னியம்மன் கோவிலில் ஆடி மாதம் முழுவதும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். மற்ற கோவில்களுக்கு இங்கிருந்து தான் காப்பு கட்டி எடுத்து செல்வார்கள். வெள்ளிக்கிழமைகளில் நூற்றுக்கணக்கான பெண்கள் பொங்கல் வைத்து வழிபடுவார்கள். ஆடிப்பூரம் தினத்தன்று 1008 பூச்சொரிதல் விழா நடைபெறும். மேலும் தகவல்களுக்கு 24981893.

* காளிகாம்பாள் கோவில்: பாரிமுனை தம்பு செட்டி தெருவில் உள்ள காளிகாம்பாள் கோவிலில் வரும் 23-ந் தேதி வெள்ளி தோறும் அம்பாளுக்கு ஊஞ்சல் உற்சவம் நடைபெறும். 4.8.10 ஆடி கிருத்திகை அன்று முருகனுக்கு பால் அபிஷேகம் நடைபெறும். ஞாயிறு தோறும் 108 பால் அபிஷேகம், தயிர் அபிஷேகம், இளநீர் அபிஷேகம், பஞ்சாமிர்த அபிஷேகம், புஷ்பாஞ்சலி போன்றவை நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை எம்.பாஸ்கர் ஆச்சாரி தலைமையில் அறங்காவலர்கள் ஆர்.சுப்பிரமணி ஆச்சாரி, பி.ஜெயபால் ஆச்சாரி, சி.மனோகர் ஆச்சாரி, கே.யுவராஜ் ஆச்சாரி செய்துள்ளனர். மேலும் தகவல்களுக்கு 25229624.

* திருவான்மியூர் மருந்தீஸ்வரர்: இங்கு ஆடிப்பூரம் தினத்தன்று அம்மனுக்கு வளைகாப்பு நடத்தப்படும். இரவில் அம்பாள் வீதி உலா நடைபெறும். தொர்புக்கு: 24410477.

* புரசை பாதாள பொன்னியம்மன்: புரசைவாக்கம் பாதாள பொன்னியம்மன் கோவிலில் ஆடி பெருவிழாவை முன்னிட்டு ஆகஸ்டு மாதம் 3-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை 10 நாட்கள் அம்பாள் வீதி உலா நடைபெறும். தொடர்புக்கு: 26481727.

* கன்னிகா பரமேஸ்வரி அம்மன்: கொத்தவால்சாவடியில் உள்ள கன்னிகா பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் ஆடி விழாவையொட்டி பஜனை, குத்துவிளக்கு பூஜைகள் நடைபெறும். ஆகஸ்டு 13-ந் தேதி 108 பால்குட ஊர்வலமும், 100 கிலோ சாதம் படைத்து அன்னக்கூட உற்சவமும் நடைபெறும். தொடர்புக்கு: 25383598.

* கபாலீசுவரர் கோவில்: மயிலை கபாலீசுவரர் கோவிலில் ஆடி மாத 4 வெள்ளிக்கிழமைகளிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். ஆடிப்பூரத்தன்று கற்பகாம்பாளுக்கு வளைகாப்பு நடைபெறும். காலை அபிஷேகம் முடிந்ததும் பெண்களுக்கு ஜாக்கெட் பிட் வழங்கப்படும். தொடர்புக்கு: 24611393, 24611356.

* வடிவுடையம்மன்: திருவொற்றியூர் வடிவுடையம்மனுக்கு ஆடி பூரத்தன்று வளைகாப்பு மற்றும் ஊஞ்சல் உற்சவம் நடைபெறும். மீஞ்சூர் திருவுடை அம்மன், திருமுல்லைவாயில் கொடியிடை அம்மனுக்கும் வளைகாப்பு பூஜைகள் நடத்தப்படும். தொடர்புக்கு: 25733703 மற்றும் 26376151.

* கந்தராஸ்சிரமம்: தாம்பரம்-வேளச்சேரி சாலையில் உள்ள ஓம் ஸ்ரீ கந்தராஸ்சிரமத்தில் ஆடி வெள்ளிக்கிழமைகளில் புவனேசுவரிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். ஆடிப்பூரத்தன்று ப்ரித்யங்ரா தேவிக்கும், ஆடி அமாவாசை தினத்தன்று பஞ்சமுக விநாயகருக்கும் பூஜைகள் நடைபெறும். தொடர்புக்கு: 22290134 மற்றும் 22293388.

* பார்த்தசாரதி கோவில்: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் ஆடிப்பூரத்தன்று இரவு 8 மணிக்கு ஆண்டாள் திருவீதி உலா நடைபெறும். ஆடி பவுர்ணமி அன்று கஜேந்திர மோட்சமும், மாலை 6 மணிக்கு கருட சேவையும், அம்பு போடும் நிகழ்ச்சியும் நடைபெறும். தொடர்புக்கு: 28442462.

* அய்யப்பன் கோவில்: நுங்கம்பாக்கம் அய்யப்பன் கோவிலில் ஆடி மாதம் முழுவதும் தினமும் மாலை 6.45 மணிக்கு விளக்கு பூஜை நடைபெறும். தொடர்புக்கு: 28171197.

* மாதவபெருமாள் கோவில்: மயிலை மாதவ பெருமாள் கோவிலில் தினமும் ஒவ்வொரு அலங்காரத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். ஆடி கடைசி நாள் ஆண்டாள் மடியில் பெருமாள் படுத்து இருப்பது போன்ற சயன திருக்கோல அலங்காரம் இடம்பெறுவது கண்கொள்ளா காட்சியாக இருக்கும். தொடர்புக்கு: 24985112.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum