தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்க கோரி தமிழ் திரைப்பட இயக்குநர்கள் உண்ணாவிரதம்

Go down

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்க கோரி தமிழ் திரைப்பட இயக்குநர்கள் உண்ணாவிரதம் Empty இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்க கோரி தமிழ் திரைப்பட இயக்குநர்கள் உண்ணாவிரதம்

Post  ishwarya Fri Mar 22, 2013 1:24 pm



ஐ.நா. மனித உரிமை கவுன்சலில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்கம் சார்பில் சென்னை வள்ளூவர் கூட்டம் அருகே உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது.

இயக்குநர் அமீர் தலைமையில் நடக்கும் இந்த போராட்டத்தில் தமிழ் திரைப்பட இயக்குனர் சங்கத்துடன், தயாரிப்பாளர்கள் சங்கம், பெப்சி, சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கம், பாடலாசிரியர்கள் சங்கம் உள்ளிட்ட 30 சங்கங்கள் கலந்து கொண்டுள்ளனர். மேலும் இசைஞானி இளையராஜா, டைரக்டர்கள் அமீர், ஷங்கர், ஏ.ஆர்.முருகதாஸ், சிம்புதேவன், சசிகுமார், ஸ்டான்லி, எஸ்.பி.ஜனநாதன், பிரபுசாலமன், கே.வி.ஆனந்த், நடிகர்கள் பாண்டியராஜன், எஸ்.ஜே. சூர்யா, பாலாஜி சக்திவேல், சுந்தர்ராஜன், பெப்சி விஜயன், தளபதி தினேஷ், ராஜ்கபூர், நடிகைகள் சுஹாசினி, சத்யப்ரியா, குயிலி பாடல் ஆசிரியை த‌ாமரை, விஜய் ஆண்டனி உள்பட பலர் பங்கேற்றுள்ளனர்.

காலை 9 மணிக்கு துவங்கிய இந்த உண்ணாவிதப் போராட்டம் மாலை 6 மணி வரை நடைபெற இருக்கிறது.

இலங்கை அரசு மீது பொருளாதார தடை விதிக்க வலியுறுத்தி தமிழக அரசு கொண்டு வந்த தீர்மானத்தை மத்திய அரசு செயல்படுத்த வேண்டும். இலங்கை அதிபர் ராஜபட்சவை பன்னாட்டு நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்.புலம் பெயர்ந்த தமிழர்களிடம் தனி ஈழத்திற்கான பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். தமிழர் பகுதிகளில் திணிக்கப்பட்டிருக்கும் சிங்களக் குடியேற்றத்தை உடனே வெளியேற்ற வேண்டும். இலங்கையுடனான உறவை இந்திய அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும். இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை கவுன்சலில் கொண்டு வந்துள்ள தீர்மானத்தை மத்திய அரசு ஆதரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» முல்லைப் பெரியாறு: டிசம்பர் 30-ல் திரைப்பட இயக்குநர்கள் உண்ணாவிரதம்
» நார்வே தமிழ் திரைப்பட விழா 2012… இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் ஆர்வம்!
» இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானத்தை நீர்த்துப் போகச் செய்த இந்தியா: ஆம்னஸ்டி சாடல்’
» திரைப்பட இயக்குநர்கள் 19-ல் உண்ணாவிரதம்
» இலங்கைக்கு எதிரான தீர்மானம்: திரையுலகினர் உண்ணாவிரதம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum