தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

காதலர்களுடன் வீடொன்றில் தங்கியிருந்த மாணவியர் இருவர் கைது!

Go down

காதலர்களுடன் வீடொன்றில் தங்கியிருந்த மாணவியர் இருவர் கைது! Empty காதலர்களுடன் வீடொன்றில் தங்கியிருந்த மாணவியர் இருவர் கைது!

Post  meenu Sat Mar 16, 2013 12:31 pm



0


பாடசாலை முடிவடைந்த பின்னர் தமது வீடுகளுக்குச் செல்லாது தமது காதலர்களுடன் சிலாபம் நகரில் அமைந்துள்ள வீடொன்றில் தங்கியிருந்த இரண்டு பாடசாலை மாணவிகளை சிலாபம் பொலிசார் நேற்று முன்தினம் கைது செய்துள்ளனர்.

இம்மாணவிகளுடன் அவர்களது காதலர்கள் எனக்கூறப்படும் இரண்டு இளைஞர்களும் அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கியதாகச் சொல்லப்படும் பெண் ஒருவரும் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாத்தாண்டி பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த மாணவியர் இருவரும் 9 மற்றும் 10ஆம் வகுப்புக்களில் கல்வி கற்கும் 15 மற்றும் 16 வயது சிறுமிகளாவர் என பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த சிறுமிகளான மாணவியர் இருவரும் சிலாபம் பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களுடன் நட்பினை ஏற்படுத்தியிருந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை பாடசாலை முடிவடைந்த பின்னர் பாடசாலைச் சீருடையுடனே சிலாபம் வந்துள்ளனர்.

பாடசாலை முடிவடைந்த பின்னர் வெகு நேரமாகியும் அம்மாணவியர் வீடு வராததையடுத்து அவர்களது பெற்றோர் இது தொடர்பில் மாரவில பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். இதன் பின்னர் குறித்த மாணவியர் இருவரும் சிலாபத்திலுள்ள வீடொன்றில் தங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து உடன் செயற்பட்டுள்ள குற்றத்தடுப்புப் பிரிவினர் சிலாபம் பிரதேசத்தில் வீடொன்றில் தங்கியிருந்த நிலையில் அன்றைய தினம் இரவு அவர்களைக் கைது செய்துள்ளனர்.

குறித்த மாணவிகளான சிறுமிகள் இருவரையும் வைத்திய பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதித்த பின்னர் அவர்களையும் அவர்களது காதலர்களுடன் அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கிய பெண்ணையும் மாரவில பொலிசாரிடம் ஒப்படைக்க சிலாபம் பொலிசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் சிலாபம் மற்றும் மாரவில பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» பொது இடத்தில் ஓரினச் சேர்கையில் ஈடுபட்ட அமெரிக்கர்கள் இருவர் கைது! (Pics)
» காதலர்களுடன் மும்பை சென்ற 4 மாணவிகள் பலாத்காரம்! கற்பழித்தது ரவுடிகளா? காதலர்களா?
» பாலியல் துஷ்பிரயோகத்தின் பின் 29 வயது பெண் கொலை: இருவர் கைது
» கனடாவில் ரயிலை தடம்புரட்ட திட்டமிட்டிருந்த அல் கைதா பயங்கரவாதிகள் இருவர் கைது.
»  சிறுவர் இல்லமொன்றில் 15 சிறுமிகளை பாலியல் துஸ்பிரயோகம் செய்த இருவர் கைது!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum