தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அபிஷேக் பச்சனுடன் இணையும் பிருத்வி ராஜ்

Go down

அபிஷேக் பச்சனுடன் இணையும் பிருத்வி ராஜ்  Empty அபிஷேக் பச்சனுடன் இணையும் பிருத்வி ராஜ்

Post  ishwarya Mon May 27, 2013 6:24 pm

நடன இயக்குனர், நடிகை, திரைப்பட இயக்குனர் என பாலிவுட்டில் பிரபலமான ஃபாரா கான் தற்போது இயக்கி வரும் ஹிந்தி படம் ‘ஹேப்பி நியூ இயர்’. இப்படத்தில் ஷாருக் கான், அபிஷேக் பச்சன், ப்ரியங்கா சோப்ரா, ஜாக்கி ஷெராஃப், சித்தார்த் மல்ஹோத்ரா என பாலிவுட்டின் பிரபல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.

இவர்களுடன் மல்லுவுட் ஹீரோ பிருத்வி ராஜும் முக்கியமான வேடம் ஒன்றில் நடிக்கிறார். படத்தின் கதைப்படி நடனம் தெரியாத மூன்று நண்பர்கள் ஷாருக் கான், அபிஷேக் பச்சன், பிருத்வி ராஜ்.

இவர்கள் மூன்று பேரும் ஒரு நடன நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்கள். நடனம் தெரியாத இவர்களால் ஏற்படும் பிரச்சனைகளும், திருப்பங்களும்தான் படத்தின் கதை. இப்படத்தை ஷாருக்கானின் ரெட் சில்லீஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

பிருத்வி ராஜ் ஏற்கெனவே அபிஷேக் பச்சனுடன் மணிரத்னத்தின் இராவண் என்ற ஹிந்தி படத்தில் இணைந்து நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum