தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சிங்கம்-2வைத் தொடர்ந்து கார்த்தியை இயக்குகிறார் டைரக்டர் ஹரி!

Go down

சிங்கம்-2வைத் தொடர்ந்து கார்த்தியை இயக்குகிறார் டைரக்டர் ஹரி!  Empty சிங்கம்-2வைத் தொடர்ந்து கார்த்தியை இயக்குகிறார் டைரக்டர் ஹரி!

Post  ishwarya Sat May 25, 2013 12:12 pm

சாமி, சிங்கம் உள்பட பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர் ஹரி. அவர் தற்போது சூர்யாவை வைத்து சிங்கம்-2 படத்தை இயக்கி வருகிறார். இந்த படமும் அவரது வழக்கமான பாணியில் ஆக்சன், காதல், காமெடி, செண்டிமென்ட் என பல ரசங்களும் கலந்த கலவையாக உருவாகி வருகிறது. அதோடு, வெளிநாடுகளிலும் படப்பிடிப்பு நடத்தி வருகிறார். இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அனுஷ்கா, ஹன்சிகா இருவரும் நடிக்கிறார்கள். சந்தானம் காமெடியில் அசத்த இருக்கிறார்.

இந்த படத்திற்கு பிறகு ஹரி யாரை நாயகனாக வைத்து அடுத்த படத்தை இயக்குகிறார் என்ற கேள்விகள் எழுந்திருக்கிறது. இதன்காரணமாக பல்வேறு யூகங்களும் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. இந்தநிலையில், ஹரியின் அடுத்த படத்தில் பருத்திவீரன், சிறுத்தை, பையா படங்களில் நடித்த கார்த்தி நடிக்கயிருப்பதாக தற்போது நம்பத்தகுந்த செய்திகள் வெளியாகியுள்ளன. தற்போது பிரியாணி படத்தில் நடித்து வரும கார்த்தி, அந்த படத்தை முடித்ததும் ஹரியின் படத்தில் அதிரடி ஆக்சன் ஹீரோவாக நடிப்பார் என்று தெரிகிறது.


ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum