தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சக்கரபாணி கோயில்

Go down

   சக்கரபாணி கோயில் Empty சக்கரபாணி கோயில்

Post  ishwarya Fri May 24, 2013 12:31 pm

மூலவர் : அருள்மிகு சக்கரபாணி
தாயர் : சுதர்சனவள்ளி, விஜயவள்ளி
தீர்த்தம் : சூரிய புஷ்கரணி


ஒருகாலத்தில் சூரியன் தன்னைக்காட்டிலும் ஒளியில் சிறந்தவன் யாரும் இல்லை கர்வம் கொண்டு தன்னுடைய ஒளிக்கதிர்களால் உலகத்தை தாக்க அந்த ஒளியை தாங்க மாட்டமல் ஜீவராசிகள் அனைதும் தவிக்கலாயின். அப்பொழுது பிரம்மாதி தேவர்கள் அனைவரும் வைகுண்டத்தில் பகவானிடம் சென்று முரையிட அவர் தன்னுடைய சக்கரத்தின் வாயிலாக இதற்கு வழி செய்வதாகவும் அதன் பொருட்டு ஒரு அஸ்வமேத யாகம் கும்பகோணத்தில் செய்யும்படி பிரம்மாவிற்கு ஆணையிட்டார்.

அதன்படி பிரம்மா இக்க்ஷேத்திரத்தில் அஸ்வமேதயாகம் செய்து அதனை பூர்த்தி செய்யும்பொருட்டு காவேரிக் கரையில் அவபிரதம் என்னும் தீர்த்ததவாரியை செய்து முடிக்க காலத்தில் அவர் கையில் பகவானின் சக்ரமானது வந்து அமர்ந்தது. அதனை அவர் அந்த கரையிலேயே பிரதிஷ்டை செய்து பூஜீத்தார். அதிலிருந்து ஒரு பெரிய ஒளி கிளம்பி சூரியனுடைய ஒளியனைத்தையும் அபகரித்தது.

உலகம் இருளில் மூல்கியது. தேவர்கள் அனைவரும் பிரம்மா முதற்கொண்டு சக்கரத்திடம் தோத்திரம் செய்ய அப்பொழுது அந்த்ச் சக்கரத்திடம் பிரம்மா, விஷ்ணு, சிவன் இவர்கள் அனைவரும் சேர்த்து திரிமூர்த்தி சொருபமாக அஷ்ட ஆயிரம் திரினேத்டிரம் அக்னிமயமான கேசத்துடன் பகவான் அந்தச் சக்கரத்திலிருந்து தோன்றினார்.

தேவர்கல் வழிபட்டு திரும்பவும் சூரியனுக்கு மீண்டும் ஒளியைக் கொடுத்து உலகத்தைக் காக்கும்படி வேண்டினார். சுரிய பகவானிடம் கர்வம் நீங்கியவனாக வணங்கி தன் ஒளியை பெற்று உலகத்தை ரட்சித்து அருளினார். சூரியன் அந்த சமயம் பகவானிடம் தன்னுடைய பெயருடன் இந்த ஊர் விளங்க வேண்டும் என்று பிரார்த்திக்க அதபடி பகவானுடன் அருளினார்.

அதன்னாலேயே இந்த ஊருக்கு பாஸ்கரத் என்று பெயர் விளங்கலாயிற்று. உலகிலேயே சுதர்ஸன மூர்த்திக்காக தனி கோயில் இந்தக் கோயில்தான். இங்குதான் சுதர்சஸன வள்ளி விஜயவள்ளி என்ற இரண்டு தேவிமார்களுடன் சக்கரத்தாழ்வார் அருள்பாலிக்கிறார்.

சிறப்புச்செய்தி

கும்பகோணம் அருள்மிகு சக்கரபாணித் திருகோயில் முதலாம் சரபோசி மன்னர் காலத்தில் நல்ல ஆக்கம் பெற்றுத் திகழ்ந்தது. திருமாலைச் சக்கரத்தாழ்வாராக வழிபடுவது மராத்தியர், மரபு, த்ஞ்சை இராசகோபால கோயில் மராத்தியர்கள் காலத்தில் சக்கரத்தாழ்வார் கோயிலாக மாற்றப்பட்டது என்பதை தஞ்சைபுரீஸ்வரர் கோயில் மண்டபத்துக் கல்வெட்டுகள் கூறுகின்றன. முதலாம் சரபோசி சாக்கோட்டையில் தங்கியிறுந்தபோது இக்கோயில் ஏற்றம் பெற்றது.

இத்திருகோய்ல் மகா மண்டபத்தில் சுமார் 6 அடி உயரம் உடைய சரபோசி மன்னரின் பித்தளை படிமம் ஒன்று ஊள்ளது. இதனருகே சும்மர் 8 அடி உயரமுடைய ஒரு பெண்ணின் உருவமும் பித்தளையில் காணப்படுகிறது.

மராத்ட்தியர் பாணித் தலைப்பாகை நீண்ட அங்கிகளோடு கூடிய மராத்தியர் பாணித் தலைப்பாகை நீண்ட அங்கிகளோடு கூடிய மராத்திய அரச உடை தரித்து வலக்கையில் மலர் ஒன்றை ஏந்திய நிலையில் நின்ற கோலத்தில் காண்ப்படுகிறார். மீசை மெலிந்து காண்ப்படுகிறது. அருகிலுள்ள பெண் இவரது மகளாக இருக்க வாய்ப்புள்ளது. இப்படிமம் மராத்தியர் பாணியில் வடிவமைக்கப்பட்டுள்ளது

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum