தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பரஞ்சோதி ஈசுவரர் திருக்கோயில்

Go down

பரஞ்சோதி ஈசுவரர் திருக்கோயில்  Empty பரஞ்சோதி ஈசுவரர் திருக்கோயில்

Post  ishwarya Wed May 22, 2013 6:13 pm

மூலவர் : பரஞ்சோதி ஈசுவரர்

அம்மன்/தாயார் : ஞானாம்பிகை

புராண பெயர் : ஆதிவில்வ வனம்

ஊர் : தஞ்சாக்கூர்

மாவட்டம் : சிவகங்கை

மாநிலம் : தமிழ்நாடு

பாடியவர்கள்: மாணிக்கவாசகர்

திருவிழா:

மகா சிவராத்திரி,மார்கழி திருவாதிரை

தல சிறப்பு: இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

திறக்கும் நேரம்: காலை 7 மணி முதல் 11 மணி வரை, மாலை மணி 5 முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி: அருள்மிகு ஞானாம்பிகை சமேத பரஞ்சோதி ஈசுவரர் திருக்கோயில், தஞ்சாக்கூர்-630610, சிவகங்கை மாவட்டம்.

போன்: +91- 4574-205 100

பொது தகவல்:

இந்திராணி, ராமர், லட்சுமணர், அனுமார், அகத்தியர், கவுதம முனிவர் ஆகியோரும், பிற்காலத்தில் மாறன், மறைவாணன், தஞ்சைவாணர் போன்ற அரசர்களும் தரிசனம் செய்துள்ளனர்.

பிரார்த்தனை புலமையில் சிறந்து விளங்க நினைப்பவர்கள் இங்கு வழிபாடு செய்கிறார்கள். தோல் சம்பந்தப்பட்ட நோய் உள்ளவர்கள் இங்குள்ள குளத்தில் நீராடி இறைவனை வழிபாடு செய்தால் விரைவில் குணமாகும் என்பது நம்பிக்கை.

நேர்த்திக்கடன்:

சுவாமிக்கும், அம்மனுக்கும் அபிஷேகம் செய்து புத்தாடை அணிவிக்கிறார்கள்.

தலபெருமை: பொய்யாமொழிப்புலவர் தன் வறுமை நீங்க இத்தல இறைவனை வழிபட்டு புலமையிலும், வசதியிலும் மேன்மையடைந்தார்.

தல வரலாறு:

ஒரு முறை கைலாயத்தில் பிரம்மா, விஷ்ணு மற்றும் இந்திரன் முதலிய தேவர்கள் சிவனிடம் சென்று,""இறைவா! நாள் தோறும் நாங்கள் தங்களை பூசித்து வருகிறோம். இருந்தாலும் தங்களது எதார்த்த வடிவமாகிய பரஞ்சோதி தரிசனத்தை எங்களுக்கு காட்டியருள வேண்டும்,''என வேண்டினர். அதற்கு இறைவன்,""பூமியில் வில்வ வனத்தில் நான் அரூபமாக உள்ளேன். நீங்கள் அங்கு சென்று பூசித்தால் பரஞ்சோதி தரிசனம் கிடைக்கும்,''என்றார். அதன்படி அவர்கள் வில்வவனத்தை கண்டுபிடித்து, அங்கிருந்த வில்வ மரத்தடியில் ஓர் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து, அதற்கு பூஜை செய்ய குளமும் உண்டாக்கி சிவ பூஜை செய்தனர்.

சிவன் இவர்களது பூஜையை சோதனை செய்ய விரும்பி முதலில் ஒரு தேவ கன்னியையும், அதன் பின் மகாகாளி, வீரகாளியையும், கடைசியாக தானே வயதானவர் வேடத்தில் தோன்றி பூஜைக்கு இடையூறு செய்தார். இதையெல்லாம் தேவர்கள் கண்டு கொள்ளாமல் பூஜையை தொடர்ந்தனர்.

இவர்களது மனஉறுதியை மெச்சிய இறைவன் ஆவணி மாத சோமவாரத்தில் இத்தலத்தில் தேவர்கள் விரும்பிய பரஞ்சோதி தரிசனத்தை காட்டினார். இதன் பின் இந்த தரிசனம் காண பார்வதி, லட்சுமி, சரஸ்வதி, விநாயகர், முருகன் ஆகியோர் வழிபாடு செய்துள்ளனர்.

சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்: இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.


ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum