தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வைஷ்ணவ தேவி கோவில்

Go down

வைஷ்ணவ தேவி கோவில்  Empty வைஷ்ணவ தேவி கோவில்

Post  ishwarya Wed May 22, 2013 6:04 pm

ஸ்தல வரலாறு.....

வைஷ்ணவ தேவி கோவில் மிகவும் புனிதமான இந்து சமயக்கோவில்களில் ஒன்றாகும். வைஷ்ணவ தேவி கோவில் சக்தி வழிபாட்டிற்கு மிகவும் பெயர் பெற்ற புனிதத் தலமாகும். இக்கோவில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஜம்மு மாவட்டத்தில் கத்ரா என்ற ஊரின் அருகாமையில் அமைந்துள்ளது.

வடஇந்தியாவில் மிகவும் போற்றப்படும் வழிபாட்டுத்தலங்களில் இதுவும் ஒன்று. இக்கோவில் 5200 அடிகள் உயரத்திலும் மற்றும் கத்ரா என்ற ஊரிலிருந்து சுமார் 12 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. ஆண்டு தோறும் சுமார் 8,00000 பக்தர்கள் வைஷ்ணவி தேவி கோவிலுக்கு அன்னையின் அருள் வேண்டி வருகின்றனர்.

திருமலை வெங்கடேஸ்வரர் கோவிலுக்குப் பிறகு மிகவும் அதிகமாக பக்தர்கள் திரளாக வந்து இறைவனை வழிபடும் கோவில்களில் இக்கோவில் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது. இந்தியாவின் தெற்கு பாகத்தில் ரத்னாகர் சாகர் வீட்டில் அன்னை வைஷ்ணவ தேவி பிறந்தார். தெய்வீக அம்சம் நிறைந்த இக்குழந்தை பிறக்கும் முன் நாள் இரவு, ரத்னாகர் குழந்தையின் விருப்பத்திற்கு மாறாக எதையும் செய்ய மாட்டேன் என்று வாக்களித்தார்

அவர் பெருமாளின் அவதாரமாகக் கருதப்பட்டதால் அவர் வைஷ்ணவி என அழைக்கப்பெற்றார். திரிகுடாவிற்கு 9 வயது நிரம்பியதும், அவர் கடற்கரை அருகே கடும் தவம் மேற்கொள்ள தந்தையிடம் அனுமதி கேட்டார். திரிகுடா ராமர் ரூபத்தில் விளங்கும் பெருமாளை மிகவும் தீவிரமாக வழிபட்டார். ராமர் தியானத்தில் இருக்கும் தெய்வீக அம்சம் பொருந்திய பெண்ணின் மேல் விழுந்தார்.

அப்போது ராமரிடம் தனது கணவராக ஏற்றுக் கொண்டதாகக் கூறினார். ராமர் அவரிடம் இந்த தெய்வீகப் பிறப்பில் அவர் தமது மனைவி சீதைக்கு மட்டுமே நேர்மையான கணவனாக இருக்க உறுதி பூண்டிருப்பதாக அறிவித்தார். இருந்தாலும் கலியுகத்தில் அவர் மீண்டும் கல்கி அவதாரம் எடுக்கப் போவதாகவும், அப்போது அவரை திருமணம் செய்து கொள்வதாகவும் வரம் அளித்தார்

அதே சமயத்தில் ராமர் திரிகுடாவிடம் வடஇந்தியாவில் நிலை கொண்டுள்ள மாணிக்கமலையில் அமைந்துள்ள திரிகுடா மலைத் தொடரில் உள்ள குகையில் தவம் மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். அன்னை அவர்கள் நவராத்திரியின் பொழுது ராமர் ராவணனுக்கு எதிராக வெற்றி காண்பதற்காக நோன்பு மேற்கொண்டார்.

இந்த தொடர்பை நினைவு கூறுவதற்காகவே நவராத்திரியின் ஒன்பது நாட்களில் மக்கள் ராமாயணத்தைப் படிக்கும் வழக்கத்தை மேற்கொண்டுள்ளனர். ராமர் அனைத்து உலகமும் அன்னை வைஷ்ணவ தேவியின் புகழைப்பாடுவார்கள் என வரமளித்தார். திரிகுடா மிகவும் புகழ் பெற்ற அன்னை வைஷ்ணவ தேவியாக மாறுவார் என்றும் அருளினார்.

அன்னை வைஷ்ணவ தேவியின் மீது ஆழ்ந்த பக்தி கொண்ட ஒரு பக்தர் ஸ்ரீதர். ஒருமுறை அன்னை அவர்கள் அவர் முன்னால் ஒரு மிகவும் அழகான மனதை கொள்ளை கொள்ளும் இளம்பெண்ணின் உருவத்தில் காட்சி தந்தார். அந்த இளம்பெண் அடக்கமான பண்டிதரை ஒரு பண்டாரா என்ற விருந்தைப் படைக்குமாறு கேட்டுக் கொண்டார்.

பண்டிதரும் கிராமத்திலும் மற்றும் அருகாமை இடங்களில் வசிக்கும் மக்களை விருந்துக்கு அழைக்கப் புறப்பட்டார். பைரவ் நாத் என்ற பெயர் கொண்ட சுயநலம் வாய்ந்த அரக்கனையும் விருந்திற்கு அழைத்தார். பைரவ் நாத் ஸ்ரீதரிடம் எவ்வாறு அவருடைய தேவைகளைப் பூர்த்தி செய்ய திட்டமிட்டுள்ளாய் என்ற கேட்டார்.

தவறுகள் நிகழ்ந்தால் அதனால் ஏற்படக்கூடிய விளைவுகளையும் சுட்டிக் காட்டினார். இதனால் கவலையுற்று பண்டிதர் அமர்ந்திருக்க, தெய்வீக அம்சம் பொருந்திய அந்தப் பெண் மீண்டும் அவர் முன் தோன்றி, அனைத்து ஏற்பாடுகளும் நடந்தேறும், அதனால் நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை என்று கூறினாள்.

அவர் வாக்களித்த படியே பண்டாரா என்ற அந்த விருந்து மிகவும் இனிதாக நடந்து முடிந்தது. பைரவ் நாத் அந்த தெய்வீகப் பெண்ணிடம் இயற்கைக்கு மாறான சக்திகள் இருப்பதை ஒப்புக் கொண்டார். அவர் அந்த தெய்வீகப் பெண்ணை திரிகூட மலைகளில் தேடி அலைந்தார். 9 மாதங்களுக்கு பைரவ் நாத் மலைகளில் மாயம் நிறைந்த பெண்ணைத் தேடி அலைந்தார்.

அவர் அந்தப் பெண்ணை அன்னை தெய்வத்தின் அவதாரம் என்றே நம்பினார். பைரவிடமிருந்து ஓடிப்போகும் பொழுது, தேவி ஒரு அம்பை பூமியில் செலுத்த, அவ்விடத்தில் இருந்து நீரூற்று பெருகியது. அவ்வாறு விளைந்த ஆற்றின் பெயரே பாணகங்கை ஆகும். பாணகங்கை ஆற்றில் குளிப்பதால் அவர்கள் இழைத்த அனைத்து பாவங்களையும் போக்குவதோடு, அன்னையின் அருளையும் பெறலாம் என நம்புகின்றனர்.

இந்த ஆற்றின் கரைகளில் தேவியின் காலடிச் சுவடுகள் பதிந்துள்ளது. அச்சுவடுகள் அதே போல் விளங்குவதை நாம் காணலாம். அதனால் சரண் பாதுகா என்ற பக்தியுடன் இந்த ஆற்றின் கரைகள் மக்களால் இன்றும் போற்றப்படுகின்றன. பைரவர் அவரை கொலை செய்ய முயற்சித்த போது வைஷ்ணவ தேவிக்கு மகா காளியின் உருவத்தை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

அன்னை இறைவியின் இந்த உருமாற்றம் தர்பார் என்ற இடத்திலுள்ள புனிதமான குகையின் வாயில் அருகே நிகழ்ந்தது. அதற்குப் பின் அன்னை மிகவும் ஆக்ரோஷத்துடன் பைரவரின் தலையைத் துண்டித்தார். அதன் விளைவாக துண்டித்த மண்டை ஓடானது பைரவ் காடி என்று அழைக்கப் பெறும் புனித குகையில் இருந்து 2.5 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள இடத்தில் சென்று விழுந்தது

இறக்கும் தருவாயில் பைரவர் தன்னை மன்னிக்கும்படி அன்னையிடம் வேண்டிக் கொண்டார். அவர் பைரவருக்கு மறுபிறவி என்ற காலச்சக்கரத்தில் இருந்து முக்தி அளித்தார்.

ஒவ்வொரு பக்தனும், அன்னை தெய்வத்தின் தரிசனம் பெற்ற பின்னர் புனித குகையின் அருகாமையிலிருக்கும் பைரவ நாதரின் கோவிலுக்கும் தவறாமல் சென்றால் மட்டுமே பக்தர்கள் அவர்களுடைய புனித யாத்திரையின் பலனைப் பெறுவார்கள் என்ற வரத்தையும் பைரவனுக்கு அளித்து அருள் பாலித்தார்.

அதே நேரத்தில் வைஷ்ணவ தேவி தன்னை மூன்று சூலங்களுடைய கல்லாக உருமாற்றம் செய்து கொண்டார். என்றென்றைக்கும் மீளாத தவத்தில் தன்னை ஆட்படுத்திக் கொண்டார்.*


ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum