தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சர்வதேச விண்வெளி நிலையத்தின் சூரிய ஒளி தகட்டில் ஓட்டை விழுந்தது

Go down

சர்வதேச விண்வெளி நிலையத்தின் சூரிய ஒளி தகட்டில் ஓட்டை விழுந்தது Empty சர்வதேச விண்வெளி நிலையத்தின் சூரிய ஒளி தகட்டில் ஓட்டை விழுந்தது

Post  ishwarya Thu May 02, 2013 6:05 pm

அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகள் இணைந்து, சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தை விண்ணில் அமைத்துள்ளன. இந்த ஆய்வு நிலையம், 1998-ம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்டது. பூமியில் இருந்து சுமார் 370 கி.மீ. தொலைவில் சுற்றுவட்டத்தில் சுற்றி வரும் இந்த விண்வெளி நிலையம், பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், சர்வதேச விண்வெளி நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள ஒரு சூரிய ஒளி தகட்டில் ஓட்டை விழுந்திருப்பதாக கனடா விண்வெளி வீரர் கிறிஸ் ஹாட்பீல்டு கூறியுள்ளார். சமீபத்தில் விண்வெளி மையத்தை சுற்றி விண்வெளி நடை (ஸ்பேஸ் வாக்) மேற்கொண்டபோது, இந்த ஓட்டையை கண்டுபிடித்தாக அவர் தனது டுவிட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார். இதனால் முக்கிய பாகம் எதுவும் சேதம் அடையாததால் மகிழ்ச்சியடைந்ததாக கூறியுள்ள அவர், ஓட்டை விழுந்த இடத்தை புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார்.

விண்ணில் சுற்றி வரும் எறிகல் மோதியதால் இந்த ஓட்டை விழுந்திருக்கலாம் என்றும், முக்கிய பாகங்களில் எறிகல் ஊடுருவியிருக்க முடியாது என்றும் விஞ்ஞானிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.

விண்கற்களால் இந்த ஓட்டை ஏற்பட அதிக வாய்ப்பு இல்லை என்றும், மனிதர்களால் கைவிடப்பட்ட விண்வெளி குப்பைகளால் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்றும் அரிசோனா பல்கலைக் கழக கோள்கள் ஆராய்ச்சியாளர் ஜிம் ஸ்காட்டி தெரிவிக்கிறார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» மகம் – ஸ்ரீ சூரிய பகவான் (சூரிய நாராயணர்)
» குழந்தை பிறந்த பிறகு வயிறு தொப்பை விழுந்தது போல் தோன்றுகிறது. எப்படி சரி செய்வது?
» குழந்தை பிறந்த பிறகு வயிறு தொப்பை விழுந்தது போல் தோன்றுகிறது. எப்படி சரி செய்வது?
» கரும்புப் பயிரில் இரும்பு சத்து பற்றாக்குறையை போக்குவதற்கான வழிமுறைகள் பற்றி திண்டிவனம் எண்ணெய் வித்துக்கள் ஆராய்ச்சி நிலையத்தின் தலைவர் நா.ராமமூர்த்தி தெரிவித்துள்ளார். அறிகுறிகள்: இளம் பயிர்களில் புதிதாகத் தோன்றும் இலைகள் பற்றாக்குறை அறிகுறிகளைக்
» விண்வெளி விண்வெளி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum