தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மாவை - யாழ் முஸ்லிம் தலைவர்கள் நாவாந்துறை பள்ளிவாயலில் சந்திப்பு. குட்டு அம்பலம்! படங்கள் உள்ளே..

Go down

மாவை - யாழ் முஸ்லிம் தலைவர்கள் நாவாந்துறை பள்ளிவாயலில் சந்திப்பு. குட்டு அம்பலம்! படங்கள் உள்ளே.. Empty மாவை - யாழ் முஸ்லிம் தலைவர்கள் நாவாந்துறை பள்ளிவாயலில் சந்திப்பு. குட்டு அம்பலம்! படங்கள் உள்ளே..

Post  ishwarya Tue Apr 30, 2013 2:51 pm

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எதிர்காலத் தலைமைக்கு கண்வைத்து நிற்கும் மாவை சேனாதிராஜா யாழ் முஸ்லிம் தலைமைகளை சில தினங்களுக்கு முன்னர் யாழ் நாவாந்துறை பெரிய பள்ளிவாயலில் சந்தித்து பேச்சுவார்த்தை ஒன்றை நடாத்தியுள்ளார். இச்சந்திப்பில் யாழ் முஸ்லிம்கள் சார்பில் பள்ளிவாயல் மௌலவி , மஹ்ருப் மொகமட், அஜ்மால், இர்பாண், நஞாட், நிக்காஸ், நிலாம் லாபீர் , தாகிர் என்போருடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் சிவிகே. சிவஞானமும் கலந்து கொண்டுள்ளனர்.

இச்சந்திப்பின்போது, வடக்கில் த.தே.கூ முஸ்லிம்களுடன் இணைந்து எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுது பற்றி பேசப்பட்டுள்ளது. முஸ்லிம் தரப்பினர் தேர்தலில் இணைந்து போட்டியிடுவதற்கு இணங்கினால் மாகாண சபையைக் கைப்பற்றியவுடன் கிளி முல்லைத்தீவு பிரதேசங்களில் முஸ்லிம்களுக்கு மேலதிக காணிகளை வழங்குவதற்கு தாங்கள் தயார் என்பதுடன் முஸ்லிம்களுக்கு மாகாண சபையில் சரி அரைவாசி அமைச்சுக்களையும் தரமுடியும் என மாவை சேனாதிராஜா உறுதிவழங்கினார் என பள்ளிவாயல் வட்டாரங்களிலிருந்து அறியக்கிடைக்கின்றது.

கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதேசங்களில் முஸ்லிம்களின் விகிதாசாரத்தை பெருக்கும் நோக்கில் திட்டமிட்ட குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மேலும் 17000 முஸ்லிம்களை குடியேற்றுவதற்கு றிசாட் பதுயுத்தீன் பல்வேறு சூட்சுமங்களை மேற்கொள்கின்றார் என்ற குற்றச்சாட்டுக்கள் வலுப்பெற்று வருவதும் யாவரும் அறிந்த விடயம்.

றிசார்ட் பதுயுதீனின் மேற்படி திட்டமிட்ட நில அபகரிப்பு , முஸ்லிம்களின் விகிதாசாரத்தினை வடக்கு பகுதியில் அதிகரித்தல், வடகிழக்கின் முக்கிய நகர்ப்பகுதிகளை கைப்பற்றல், அப்பிரதேசங்களுக்கான வர்த்தகங்களை முஸ்லிம் தரப்பினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருதல் என்ற முயற்சிகளை தடுப்பதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் பங்காளிகளாக இணைந்திருக்கின்ற தமிழ் தரப்பினர் முயன்று வருகின்றனர்.

இதன் பொருட்டு கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் கீதாஞ்சலி தலைமையில் அங்குள்ள பெண்கள் அமைப்புக்கள் தெருவில் இறங்கி ஆர்ப்பாட்டங்கள் மேற்கொண்டிருந்தனர் என்பதும் இங்கு சுட்டிக்காட்டப்படவேண்டியது.

நுpலைமைகள் இவ்வாறு இருக்கின்றபோது ஆசனங்களைக் கைப்பற்றிக்கொள்வதற்காக மாவை முஸ்லிம் தரப்புடன் பேச்சுக்களை நடாத்தியுள்ளமை மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

கடந்த கிழக்கு மாகாண சபைத்தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் முஸ்லிம்களை கூட்டாட்சிக்கு வருமாறு மண்டாடியும் அவர்கள் உதறித்தள்ளிய துரோகத்தை மறத்து மீண்டும் ஒருமுறை வட மாகாண மக்களை ஏமாற்ற இம்முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றது.

கிழக்கு மாகாண சபைத் தேர்தல் முடிவடைந்த தருணத்தில் முஸ்லிம் தரப்பினர் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் ஆட்சி அமைக்க வாருங்கள் அதிலுள்ள அனைத்து அமைச்சுக்களையுமே உங்களுக்கு தருகின்றோம் என்று என்று எமது தலைவர் அழைத்தபோதும் அவர்கள் எங்களை ஏற்றுக்கொள்ளவில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் கிழக்கு மாகாண சபைக்கு தெரிவாகியிருக்கின்ற ஜனா எனப்படுகின்ற கருணாகரன் தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

இவ்வாறு தமிழர் தரப்புடன் முஸ்லிம்கள் இணைந்து கொள்ளமாட்டார்கள் என்பதும் அவர்கள் ஆழும் தரப்புடன் இணைந்தே தமது தேவைகளை பூர்த்தி செய்வர் என்பதும் நன்கு தெரிந்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மீண்டும் ஒருமுறை தமிழ் மக்களை ஏமாற்ற முயல்கின்றனர் என்பது மட்டும் உண்மை.

அவ்வாறுதான் முஸ்லிம்கள் தமிழர் தரப்புடன் இணைவதாயின் அரசிடமிருந்து கிடைக்கக்கூடிய சலுகைகள் மற்றும் அதிகாரங்களுக்கு அதிகாமாக கிடைக்கும் என்பது உறுதிப்படுத்தகப்பட்டாலே அது சாந்தியமாகும். அவ்வாறாயின் த.தே.கூ தமது அதிகாரங்கள் மற்றும் கதிரைகளை தக்கவைத்துக்கொள்வதற்காக தமிழரின் சகலவற்றையும் முஸ்லிம்களுக்கு தாரைவார்க்க தயாராகின்றது என்ற உண்மையை மக்கள் உணரவேண்டும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» அவுஸ்திரேலியாவில் சாதனை புரிந்த யாழ் மாணவன்! (படங்கள்)
» யாழில் சட்டவிரோத விபச்சார விடுதி முற்றுகை யாழ் பல்கலைக்கழக மாணவர் கைது(படங்கள் இணைப்பு)
» பெரிய வெற்றிக்குப் பிறகும் தமிழில் தொடர்ந்து படங்கள் இல்லாதது ஏன்? – கார்த்திகாவுடன் ஒரு சந்திப்பு
» குட்டு வைத்த தல
» கடலை மாவை வெச்சும் சூப்பரா ஃபேஸ் மாஸ்க் போடலாம்!!!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum