தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மாத்தளை மனித புதைகுழி : கோட்டாவிற்கும் தொடர்பா? கண்டறிய வீசேட ஆணைக்குழு.

Go down

மாத்தளை மனித புதைகுழி : கோட்டாவிற்கும் தொடர்பா? கண்டறிய வீசேட ஆணைக்குழு.  Empty மாத்தளை மனித புதைகுழி : கோட்டாவிற்கும் தொடர்பா? கண்டறிய வீசேட ஆணைக்குழு.

Post  ishwarya Tue Apr 30, 2013 2:36 pm

மாத்தளை புதை குழிகள் தொடர்பாக கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழு உறுப்பினர்கள், அடுத்த வாரம் நியமிக்கப்படவுள்ளனர். 1987-89 காலப்பகுதியில் உயிரிழந்த இளைஞர் யுவதிகளின் உண்மையான கதை இன்னும் சில நாட்களில் அம்பலமாகும்.


1987-89 அச்சம் நிலவிய காலப்பகுதியில் ஆட்சியிலிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான ரணசிங்க பிரேமதாசவும், இந்த குழப்பங்களை உருவாக்கிய ஜே.வி.பி. தலைவர் ரோஹண விஜேவீரவும் ஆளுக்கு ஆள் போடடியிட்டுக்கொண்டு, படுகொலைகளை புரிந்தார்கள். இரு தரப்பினரது கொடுமைகள், இரட்டைச் சகோதரர்களை போன்று, அமைந்திருந்தன. ஒருவருக்கொருவர், மாறி, மாறி படுகொலைகளை புரிந்தார்கள்.

அன்று சூரியன் உதித்ததும், சூரியன் மறைந்ததும் ஒரு துர்ப்பாக்கிய கொடுமையுடன் கூடிய படுகொலைகளுக்கு மத்தியிலாகும். ஒருவரையொருவர் குற்றம் சாட்டிக்கொண்டனர். ஒருபோதும் எவராலும் மறந்துவிட முடியாத அந்த இருள் சூழ்ந்த யுகத்தின் கசப்பான அனுபவங்கள் மீண்டும் வெளிவர ஆரம்பித்துள்ளன.

மாத்தளை வைத்தியசாலை பூமியில் உயிரியல் வாயு பிரிவொன்றை நிர்மாணிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்த போது, அப்பகுதியில் இருந்து இந்த மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டன. 2012ம் ஆண்டு நவம்பர் 23ம் திகதி இவை கண்டெடுக்கப்பட்டன. 1980ம் ஆண்டுகாலப்பகுதியில் நாட்டில் வன்முறைகளில் ஈடுபட்ட விஜயவீர, 1989ம் ஆண்டு நவம்பர் மாதம் 13 ம் திகதி கொல்லப்பட்டார். அந்த தினம் கடந்து 23 ஆண்டுகளும் 10 நாட்களும் கடந்த போதிலும், விஜயவீரவினதும், பிரேமதாசவினதும் செயற்பாடுகளின் வெளிப்பாடு, மாத்தளை வைத்தியசாலை வளவிலிருந்து வெளியாகின.

154 மனித எலும்புக்கூடுகளின் பாகங்கள் அங்கிருந்து கண்டெடுக்கப்பட்டன. இவர்கள் யார்? எங்கிருந்து வந்தவர்கள்? இவர்கள் எவ்வாறு கொல்லப்பட்டார்கள் என்பது? அனைவரது மனதிலும் எழுந்த கேள்விகளாகும். களனி பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் ராஜ். சோமதேவ உள்ளிட்ட குழுவினர், இந்த மனித எலும்புக்கூடுகளின் உண்மை நிலையை கண்டறிவதற்கான ஆய்வுகளை ஆரம்பித்தனர். இவர்கள் யார்? எங்கிருந்து வந்தவர்கள் என்பதை கண்டுபிடிக்க முடியாவிட்டாலும், மரணங்கள் இடம்பெற்ற கால எல்லையை இவர்கள் உறுதிப்படுத்தியுள்ளார்கள்.

1987-89 காலப்பகுதியை சேர்ந்த மனித எலும்புக் கூடுகள் இவையென்பதை, அவர்கள் நிர்ணயித்துள்ளார்கள். 154 எலும்புக்கூடுகளின் உரிமையாளர்கள் நாம் என, ஜே.வி.பி. யினர் தெரிவித்து வருகின்றனர். 60 ஆயிரம் பேரை இழந்து, ஐக்கிய தேசியக் கட்சி தமது தலைவரை படுகொலை செய்த நிலையில் லண்டனில் மறைந்திருந்து, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான அரசாங்கத்திற்கு புண்ணியம் கிடைக்க, மீண்டும் தாயகத்தில் ஒரு காலையும், மறுகாலை இன்றும் லண்டனில் வைத்திருக்கும் ஜே.வி.பி. தலைவர் சோமவன்ச அமரசிங்க கூட, தனது தலைவரின் படுகொலை தொடர்பாகவோ, தன்னை இந்த இடத்திற்கு அழைத்து வர உயிர்நீத்ததாக கூறப்படும் 60 ஆயிரம் இளைஞர்களுக்காகவும், ஒருபோதும் விசாரணையொன்றையோ அல்லது ஆணைக்குழுவொன்றையோ நியமிக்குமாறு கோரிக்கை விடுக்கவில்லை.

எனினும் இந்த புதைகுழிகளின் உண்மை நிலையை கண்டறிந்து, நாட்டுக்கு அம்பலப்படுத்துமாறு, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பொறுப்பு வாய்ந்தவர்களுக்கு உடனடியாக உத்தரவிட்டுள்ளார். பொலிஸார் உடனடியாக பணியில் இறங்கினார்கள். விசாரணைகளை ஆரம்பித்தனர். அவர்கள் உரிய விதத்தில், உரிய முறையில் இடம்பெற்று வருகின்றனர். அத்தோடு நின்றுவிடாமல், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, மாத்தளை புதைகுழி தொடர்பாக கண்டறிவதற்கு, ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை நியமிப்பதற்கான அதிகாரிகளின் பெயர்களை அடுத்த வாரம் வெளியிடவும், தீர்மானித்துள்ளார்.

பதவி மோகத்தில் என்றும் குரல் கொடுக்கும் ஜே.வி.பி. தமக்காக வதை முகாம்களில் அல்லல்பட்டு, மரங்களில் தொங்கிய நிலையிலும், சக்கரங்களில் சுழன்ற நிலையிலும், எசிட் வீச்சுக்கு இலக்கான நிலையிலும், கால் கைகளை இழந்து, உயிர்நீத்துது மட்டுமன்றி, டயர்களில் எறிக்கப்பட்ட தமது சகோதரர்கள் தொடர்பாக, அவர்கள் இன்று மறந்துவிட்டார்கள். கார்த்திகை வீரர்களின் நினைவு தினமென்ற போதிலும், மெழுகுவர்த்திகளை எரித்த போதிலும், மலர் வலயங்களை வைத்த போதிலும், இது ஒரு ஊடக கண்காட்சியாகவே, அவர்கள் இதனை மாற்றிவிட்டார்கள். ஜே.வி.க்கு இந்த புதைகுழிகள் ஒரு தங்கச்சுரங்கமாக காணப்பட்ட போதிலும், இந்த புதைகுழிகளின் உண்மை நிலை, விரைவில் நாட்டுக்கு அம்பலமாகுவது, திண்ணம். இறந்தவர்கள் யார்? அவர்கள் எங்கு கொல்லப்பட்டார்கள், எவ்வாறு கொல்லப்பட்டார்கள், கொலை செய்தவர்கள் யார் என்ற அனைத்து விடயங்களும், அம்பலமாகும் காலம், வெகு தூரத்தில் இலலை. அப்போது நாட்டில் வன்முறைகளுக்கு தூபமிட்ட ஐக்கிய தேசியக் கட்சியும், ஜே.வி.பி. யும், அவர்கள் என்ன செய்தார்கள் என்பதை, இந்த நாட்டு மக்கள் மீண்டும் வெகுவிரைவில் அறிந்து கொள்வார்கள் என்பதில், சந்தேகத்திற்கு இடமில்லை

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» மாத்தளை மனித புதைகுழியின் உண்மையை கண்டறிய ஜனாதிபதி ஆணைக்குழு
» மாத்தளை மனித புதைகுழியின் உண்மையை கண்டறிய ஜனாதிபதி ஆணைக்குழு
» போதை மருந்து கும்பலுடன் தொடர்பா? – த்ரிஷா மறுப்பு
» இலங்கைக்கு எதிராக ஐக்கிய அமெரிக்கா கொண்டுவர தீர்மானித்துள்ள பிரேரணை இன்று (15) ஜெனிவா ஐநா மனித உரிமை கவுன்ஸிலில் சமர்பிக்கப்படவுள்ளது.குறித்த பிரேரணை உத்தியோகபூர்வதாக ஜெனிவா மனித உரிமை கவுன்ஸில் கூட்ட ஒழுங்கு பத்திரத்தில் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட
»  உங்கள் மூளையின் வயதை கண்டறிய வேண்டுமா?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum