தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அமெரிக்க குற்றச்சாட்டை நிராகரித்தார் ஜனாதிபதி!

Go down

அமெரிக்க குற்றச்சாட்டை நிராகரித்தார் ஜனாதிபதி! Empty அமெரிக்க குற்றச்சாட்டை நிராகரித்தார் ஜனாதிபதி!

Post  ishwarya Tue Apr 30, 2013 1:08 pm

இலங்கை தொடர்பாக அமெரிக்கா அண்மையில் தெரிவித்துள்ள குற்றச்சாட்டுக்களை ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ முற்றிலுமாக நிராகரித்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்க இராஜாங்கத்திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில், இலங்கையில் சட்டத்திற்குப் புறம்பான படுகொலைகள், காணாமற்போதல் சம்பவங்கள் தொடர்ந்து இடம்பெறுவதாகவும் இதற்குப் பொறுப்பானவர்கள் எவரையும் பொறுப்புக் கூறச்செய்வதற்கு அரசாங்கம் முயற்சி எடுக்கவில்லையெனவும் தெரிவித்திருந்தது.

இந்தநிலையிலேயே இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்களின் பிரதானிகளை நேற்றைய தினம் அலரி மாளிகையில் சந்தித் துக் கலந்துரையாடிய ஜனாதிபதி, அமெரிக்காவின் மேற்படி குற்றச்சாட்டை நிராகரித்தார். இந்தக் கலந்துரையாடலில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, அரசாங்கம் மனித உரிமைகளைச் சிறப்பாகப் பேணி வருகின்றது. அத்துடன் ஒவ்வொரு குடிமகனினதும் உரிமைகளையும் பாதுகாப்பது அரசின் பொறுப்பாகும். இவ்வாறு மனித உரிமைகள் மீறப்படுவதாக எவராவது ஆதாரத்துடன் நிரூபித்தால் அது தொடர்பாக கடுமையான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்கும்.

எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் வடமாகாண சபைத்தேர்தல் திட்டமிட்டபடி நடைபெறும். அதற்கான சூழ்நிலைகள் அங்கு ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. உள்ளூரில் இடம்பெயர்ந்த மக்கள் அனைவரும் தமது சொந்த இடங்களில் மீள்குடியமர்த்தப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கான வாழ்வாதார வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. வடக்கில் நிலக்கணிவெடிகள் ஐந்து வீத நிலப்பரப்பிலேயே அகற்றப்பட வேண்டியுள்ளன.

அமெரிக்கா இலங்கைக்கு வழங்கி வரும் நிதியுதவியில் குறைப்பை ஏற்படுத்தவதனால் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தமாட்டாது. ஏனெனில் அமெரிக்காவை விடவும் ஜப்பான், சீனா, கொரிய நாடுகள் கூடுதலான நிதியுதவியை அளித்து வருகின்றன. நாடு அபிவிருத்திப் பாதையில் முன்னெடுத்துச் செல்ல இந்த நாடுகளில் உதவியை இலங்கை நிச்சயமாக ஏற்றுக்கொள்ளும். தமிழ்நாட்டில் இலங்கைக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் நடந்தபோதிலும் இந்திய மத்திய அரசுடனான உறவில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. தமிழ் நாட்டு போராட்டங்களினால் இரு நாடுகளும் எவ்விதத்திலும் பாதிப்பை எதிர்நோக்கவில்லை.

இலங்கைக்கு வந்து உண் மையான நிலையை அறியுமாறு தமிழக அரசியல்வாதிகளுக்கு நாம் எப்பொழுதும் அழைப்பு விடுக்கின்றோம்;. இலங்கை தொடர்பாக விசமர்சனம் செய்பவர்களுக்கு இங்கு வந்து உண்மை நிலையை அறிந்து கொள்ள வேண்டுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார். இந்தக் கலந்துரையாடலில் அமைச்சர்களான பசில் ராஜபக்‌ஷ, அனுர பிரியதர்ஷன யாப்பா, பந்துலகுணவர்த்தன, பவித்ரா வன்னியாராச்சி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum