தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மரத்தடி விநாயகர் வழிபாட்டு பலன்கள்

Go down

மரத்தடி விநாயகர் வழிபாட்டு பலன்கள் Empty மரத்தடி விநாயகர் வழிபாட்டு பலன்கள்

Post  birundha Thu Apr 25, 2013 6:00 pm


1. வில்வமரம் விநாயகர்- தெற்கு நோக்கி அமர்ந்திருக்கும் வில்வமர விநாயகரை சித்திரை நட்சத்திரத்தன்று வழிபாட்டால் பிரிந்த கணவன்-மனைவி ஒன்று சேர்வார்கள்.

2. அரசமர விநாயகர்- அரசமரத்தடியில் மேற்கு நோக்கி அமர்ந்திருக்கும் விநாயகரை பூசநட்சத்திர தினத்தன்று அன்னாபிஷேகம் செய்து வழிபட வேண்டும். இதனால் எதிர்பார்த்த பணஉதவி கிடைக்கும். பண கஷ்டங்கள் நீங்கும். பயிர்விளைச்சல் அதிகரிக்கும்.

3. ஆலமர விநாயகர்- ஆலமரத்தடியில் வடக்கு நோக்கி அமர்ந்திருக்கும் விநாயகரை ஐந்து வகை சாதம் படையலிட்டு வழிபட வேண்டும். பிறகு அந்த சாதங்களை கோவிலுக்கு வந்திருக்கும் பக்தர்களுக்கு வினியோகிக்க வேண்டும். இதனால் தீராத கடுமையான நோய்கள் குணமடையும்.

4. வேப்பமர விநாயகர்- வேப்பமரத்தடியில் கிழக்கு நோக்கி அமர்ந்திருக்கும் விநாயகரை உத்திராட்டதி நட்சத்திரத்தன்று ஐந்து வகை எண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டால் விருப்பத்துக்கு ஏற்ப நல்ல கணவர் அல்லது நல்ல மனைவியுடன் திருமணம் நடைபெறும்.

5. மாமரத்து விநாயகர்- மாமரத்து அடியில் இருக்கும் விநாயகரை கேட்டை நட்சத்திரத்தன்று விபூதி காப்பீட்டு வணங்கி பெண்களுக்கு ஏதாவது தானம் செய்தால் வியாபாரம் செழிப்படையும். எதிரிகள் தொல்லை நீங்கும்.

6. புன்னைமர விநாயகர்- ஆயில்யம் நட்சத்திரத்தன்று புன்னைமர விநாயகருக்கு இளநீர் அபிஷேகம் செய்தால் தம்பதிகளிடையே ஒற்றுமை அதிகரிக்கும். ஏழை நோயாளிகளுக்கு தானம் செய்தால் தம்பதியம் சிறப்பாகும்.

7. மகிழமர விநாயகர்- மகிழமர விநாயகரை அனுஷம் நட்சத்திர தினத்தன்று மாம்பழச்சாறு அபிஷேகம் செய்தால் பில்லி-சூனியம், செய்வினை, திருஷ்டிகள் விலகும்.

8.வன்னிமர விநாயகர்- அவிட்டம் நட்சத்திரத்தினத்தன்று நெல் பொரியால் வன்னிமர விநாயகரை வழிபட்டால் தடைப்பட்ட திருமணம் நடைபெறும்
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum