தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நடிகர் சங்கத்தில் உறுப்பினராகாத நடிகர், நடிகைகளுக்கு தடை; 15-ந் தேதி “கெடு”முடிகிறது

Go down

நடிகர் சங்கத்தில் உறுப்பினராகாத நடிகர், நடிகைகளுக்கு தடை; 15-ந் தேதி “கெடு”முடிகிறது Empty நடிகர் சங்கத்தில் உறுப்பினராகாத நடிகர், நடிகைகளுக்கு தடை; 15-ந் தேதி “கெடு”முடிகிறது

Post  ishwarya Thu Apr 25, 2013 11:45 am

தமிழ் படங்களில் புதுமுக நடிகர்-நடிகைகள் பலர் அறிமுகமாகின்றனர். இவர்கள் நடிகர் சங்கத்தில் உறுப்பினராக பதிவு செய்வதில்லை. குறிப்பாக மலையாளம், தெலுங்கு, பட உலகில் இருந்து நிறைய நடிகைகள் வருகின்றனர். இவர்கள் ஓரிரு படங்களில் தலைக்காட்டி விட்டு போய் விடுவதால் நடிகர் சங்க கட்டுப்பாடுகளை மதிப்பதில்லை.

எனவே நடிகர்கள் சங்கத்தில் உறுப்பினராகி விட்டு தான் புதுப்படங்களில் நடிக்க வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டது. இதை மீறுவோர் நடிக்க முடியாது என்றும் எச்சரிக்கப்பட்டது. இதையும் நடிகர்-நடிகைகள் கண்டுகொள்ளவில்லை.

இதையடுத்து கடந்த மாதம் நடந்த நடிகர் சங்க பொதுக்குழுவில் சங்கத்தில் உறுப்பினராவதற்கு ஆகஸ்டு 15-ந் தேதி வரை கெடு விதிக்கப்பட்டது. அதன் பிறகும் உறுப்பின ராகாதவர்களுக்கு படங் களில் நடிக்க ஒத்துழைப்பு அளிக்க மாட்டோம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

15-ந் தேதிக்கு பிறகு உறுப்பினராகாதவர்களின் பட்டியல் சேகரிக்கப்பட்டு அவர்கள் நடிப்பதற்கு தடை விதிக்கப்படும் என்று சங்கத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிய களவானி படத்தில் அறிமுகமான ஓவியா இன்னும் உறுப்பினராகவில்லை. அவர் மேலும் பல படங்களில் கதா நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டு நடித்து வருகிறார்.

பாணா காத்தாடி, பட நாயகி சமந்தாவும் உறுப்பினராகவில்லை. மாஸ்கோவின் காவிரி என்ற படத்திலும் இவர் நடித்துள்ளார்.

ஜெனிலியா, ஹன் சிகாமோட்வானி ஆகியோரும் உறுப்பினராக வில்லை. ஜெனிலியா ஏற்கனவே சச்சின், சந்தோஷ் சுப்பிரமணியம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

ஹன்சிகா மோட்வானி தெலுங்கில் பிரபல நடிகையாக உள்ளார். “வேலாயுதம்” படத்தில் விஜய்யுடன் நடிக்கிறார்.

மனிஷா கொய்ராலா பல தமிழ் படங்களில் நடித்துள்ளார். தற்போது மாப்பிள்ளை படத்தில் தனுஷ் மாமியாராக நடிக்கிறார். இவரும் உறுப்பினராக வில்லை.

ஐஸ்வர்யாராயும் உறுப்பினர் இல்லை. இவர் ஏற்கனவே தமிழில் இருவர், கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன், ஜீன்ஸ் போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது மணி ரத்னம் இயக்கத்தில் நடித்த ராவணன் படம் ரிலீசாகி ஓடிக் கொண்டிருக்கிறது.

ரஜினியுடன் நடித்த எந்திரன் படம் அடுத்த மாதம் ரிலீசுக்கு தயாராகிறது. ஐஸ்வர்யாராய் நடிகர் சங்கத்தில் உறுப்பிராக வேண்டும் என்று ராதாரவி வற்புறுத்தியுள்ளார். கிருஷ்ண லீலை, காதல் சொல்ல வந்தேன், நந்தா நந்திதா படங்களில் நடிக்கும் மேக்னா சுந்தரும் உறுப்பினராகவில்லை.

மேலும் உறுப்பினராகாத வர்களின் பெயர்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. 15-ந் தேதிக்கு மேல் இவர்களுக்கு நடிக்க தடை விதிக்கப்படும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum