தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மகாளய பட்ச வழிபாடு விதிகள்...!

Go down

மகாளய பட்ச வழிபாடு விதிகள்...! Empty மகாளய பட்ச வழிபாடு விதிகள்...!

Post  birundha Sat Apr 13, 2013 11:37 pm


முன்னோர்களை வழிபட்டால் முன்னேற்றம் வந்து சேரும் என்றும் அந்த வழிபாட்டை மறந்து விட்டால். `மறந்ததை மானயத்தில் விடு' என்றும் சொல்மொழிகள் இந்த மாதத்தில் வரும் மகாளய பட்ச அமாவாசையின் சிறப்பை எடுத்துரைக்கின்றன. மகா+ளயம்- என்பதற்கு மகா-பெரியவர்கள், மூத்தவர்கள் உயிர்நீத்தவர்களாகி விட்டவர்கள் லயம் - நினைவு கூறும் நாட்கள் என்று பெயர்.

இந்த புரட்டாசி மாதம் சூரியன் கன்னி ராசியில் சஞ்சரிக்கும் காலமாக வருவதால் எம லோகத்தில் இருக்கக் கூடிய பித்ருக்களை எமதர்மன் 15 நாட்களுக்கு தற்காலிகமாக விடுவித்து அவரவர்களின் குடும்பத்தினருடன் தங்கி விட்டு வரும்படி அனுப்புவதாக ஐதீகம். இந்த புனித தினங்கள் புரட்டாசி மாத பவுர்ணமிக்கு மறுநாளான தேய்பிறை பிரதமை திதியிலிருந்து அமாவாசை வரை வருகிறது.

அப்பா, அம்மா இல்லாதவர்கள் அவர்களுக்கான திதி அன்று தர்ப்பண பூஜையை எளிய முறையில் செய்யலாம். அப்படி செய்ய முடியாதவர்கள் வரும் (15-10-2012) புரட்டாசி மாதம் 29-ந் தேதி திங்கட்கிழமை அன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கண்டிப்பாக செய்தல் வேண்டும். பொதுவாக, எல்லா அமாவாசை திதி நாளிலும் தர்ப்பணம் தருபவர் அளிக்கும் எள் மற்றும் நீரை அக்னி தேவனின் மனைவியாகிய ஸ்வதா தேவி பெற்றுக் கொண்டு வானத்தில் உள்ள அவரவர்களது பித்ருக்களுக்கு கொடுக்கிறாள்.

மகாளய பட்ச அமாவாசையில் மட்டும் சூரியன் சந்திரன் சஞ்சரிக்கும் உலகுக்கு வருவதால் ஸ்வதா தேவி எல்லாரது முன்னோர்களையும் சந்திக்கும்படி ஆகிறது. ஒருபட்சம் என்பதற்கு 11 திதிகள் உடைய நாட்கள் என்று பெயர்.

தர்ப்பண பூஜையில் எள் தர்ப்பை பயன்படுத்துவது ஏன்?:-

இந்த உலகத்தில் ஆயிரம் வகை புற்கள் இருக்கின்றன. ஆனால், தர்ப்பை புல்லை மட்டும் வழிபாட்டிற்குப் பயன்படுத்துவது ஏன் என்று அறிதல் வேண்டும். எள் என்னும் கருமை நிற விதை திருமாலின் வியர்வைத் துளியிலிருந்து வெளிவந்த பரிசுத்தமான தானியம் என்பது வேதக்கூற்று. பித்ருக்களுக்கு செய்யப்படுகிற தர்ப்பன வழிபாட்டில் கருமைநிற எள்ளைப் பயன்படுத்துவதால் நமது முன்னோரும் தேவர்களும் மகிழ்ச்சி அடைகின்றனர்.

மாளய பட்சம் வருவதற்கு 15 நாட்கள் முன்னதாகவே ஒரு வீட்டின் பானையில் கொட்டி வைக்கப்பட்டுள்ள எள்ளானது பித்ரு வருவதைச் சொல்ல நிமிர்ந்து நிற்பதாக நம்பப்படுகிறது. தர்ப்பை புல் ஆகாயத்தில் தோன்றியது என்று கூறுவர். இதில் ஒரு முனையில் பிரம்மாவும், மறு முனையில் சிவபெருமானும், நடுப்பகுதியில் திருமாலும் வாசம் செய்வதாகக் கூறுவர்.

தர்ப்பைக்குக் குசம், திருப்புல், தெய்வப்புல் அமிர்த வீர்யம் என்ற பெயர்கள் உண்டு. நிலத்தில் வாடாமல் நீரில் அழுகாமல் விதை, செடி, பதியம் இல்லாமல் சுயமாகத் தோன்றுவதே தர்ப்பை. ஆன்மா தோற்றம் போன்று புதிரான தர்பை தானே தோன்றி வளர்வதால் தர்ப்பையில் ஆன்மாவை ஆவாகனம் செய்து வழிபடுவர்.

உஷ்ணம் மிகுந்த தர்ப்பை அமாவாசையிலும் கிரகண காலத்திலும் அதிக வீர்யம் உடையதால் தர்ப்பணம் இட பயன்படுத்தப்படுகிறது. அதனால் தான் தர்ப்பண பூஜைக்கு இதை பயன்படுத்துவர். மகாளய தர்ப்பண நாட்களில் நடுவில் வரும் பரணி நட்சத்திர நாளை மகா பரணி என்று சிறப்பித்து பித்ரு வழிபாடு செய்வர்.

புரட்டாசி மாத மக நட்சத்திரம், திரயோதசி சேர்ந்து வரும் புனித நாளை சுஜச்சாயை என்பர். இதுவும் பித்ருக்களுக்கு விசேஷ நாளாகிறது. நடுவில் வருகின்ற அஷ்டமி திதியை மத்யாஷ்டமி என்பர். துர் மரணம் வழியில் மறைந்தவர்களுக்கு இந்த நாள் ஏற்றதாகச் சொல்லப்படுகிறது. சன்னியாசியாகி இறந்தவர்களுக்கான சன்னியாஸ்த மகாளயம் அக்டோபர் 12-ந் தேதி (வெள்ளிக்கிழமை) வருகிறது. அன்று அவர்களை வழிபட்டால் நிறைந்த பலன்கள் கிடைக்கும்.

மகாளய தர்ப்பண வழிபாடு:-

தன் வீட்டில் உயிர் நீத்த அப்பா, அம்மா படத்தை எடுத்து சுத்தம் செய்து உரிய திதி நாளில் துளசி, மலர்மாலை சாற்றி பொட்டு வைத்து அதற்கு முன்பாக ஒரு தாம்பளத்தை வைத்து படத்தில் குறிப்பிட்டபடி தர்பை சட்டம் போட வோண்டும். அதன்மேல் முன்னோர் பெயரைச் சொல்லி அதில் எழுந்தருள்க என்று சொல்ல வேண்டும். அதாவது, எனது தாயே எழுந்தருள்க!

தந்தையே எழுந்தருள்க! என்று எள்ளும் தண்ணீரும் விட வேண்டும். பிறகு சிவ (அல்லது) விஷ்ணு கோத்ரத்தை சேர்ந்த பவருக்கு தர்பணம் செய் கிறேன் என்று கூறி 3 முறை நீர் எள் விடவும், அடுத்ததாக, எனது தந்தையின் தந்தைக்கு தர்ப்பணம் செய்கிறேன், என்று 3 முறை எள் தீர்த்தம் விடுக.

மூன்றாவதாக எனது பாட்டனார்.....க்கு தர்ப்பணம் விடுகிறேன் என்று மூன்றுமுறை எள், தண்ணீர் விடவும். அடுத்ததாக, எனக்குத் தெரியாமல் என் வம்சாவழியில் வருகின்ற பித்ருக்களுக்கு (காருணீக பித்ரு) தர்ப்பணம் செய்கிறேன் என்று எள் நீர் விடவும். இதன் பொருட்டு தேவர்களும், தேவ ருலக வாசிகள் அனைவரும் எனது தர்ப்பண வழிபாட்டால் திருப்தி அடையட்டும் திருப்தியக;

என்று 3 முறை கூறுக. இது தான் எளிய மாயை தர்ப்பண பூஜை முறை.பிறகு எழுந்து நின்று கையில் எள் நீர் எடுத்துக்கொண்டு மூன்று முறை தன்னையே சுற்றுக்கொண்டு முட்டி போட்ட நிலையில், கட்டி கொண்டுள்ள வேட்டி துணியால் எள் தீர்த்தத்தை தொட்டு நெற்றி கண்களில் ஏற்றிக்கொள்ள வேண்டும்.

அதில் உள்ள கூர்ச்ச முடிச்சை அவிழ்த்து எடுத்து என்னை சேர்த்துக் கொண்டு குலம் உறவினர்கள் தழைக்க தர்ப்பணம் செய்தேன். உலக மக்கள், என் மக்கள் நலன் காக்கப்பட்டும் என்று மூன்று முறை சொல்ல வேண்டும். பிறகு யாருக்கு தர்ப்பணம் செய்தோமோ அவக்குப் பிடித்தமான பண்டத்துடன், தேங்காய்,வாழைப்பழம் வைத்து மலர் துளசி போட்டு நெய் தீபம் காட்ட வேண்டும். தர்ப்பண நீரை அருகில் உள்ள நீர் நிலைகளில் அல்லது செடிகளில் விட்டு வரவேண்டும்.

காக்கைக்கு அன்னம்:-

உங்கள் கையில் உள்ள ஒரு பிடி சாதத்தை உருண்டையாகப் பிடித்து எள் நீர் விட்டு சிறிது பருப்பு கலந்து காக்கையை அழைத்து அது சாதத்தை எடுத்த பிறகு கயா....கயா... கயாதிதி சமர்ப்பணம் என்று மூன்று முறை கூறிய பின் விளக்கில் உள்ள திரியை மட்டும் மாற்றி தீபம் ஏற்றி விட்டு பிறகு வீட்டு தெய்வத்திற்கு பூஜை செய்த பிறகு குடும்பத்தில் உள்ளவர்கள் உணவு சாப்பிட வேண்டும்.

பித்ருக்களும் தேவர்களும் காக்கை வடிவில் உணவு எடுக்க வருவதாக சாஸ்திரம் கூறுவதால் காக்கைக்கு அன்னமிட்டு கயாவில் சிரார்த்தம் செய்தது போல இந்த தர்ப்பணம் செய்தேன் என்று கூறுகிறோம். பித்ரு தர்ப்பண பூஜை செய்வதால் மனிதர்களுக்கு உணவு, மற்ற தானங்கள், காக்கைக்கும் பசுவுக்கும் பிண்ட உணவு இறைகின்ற அரிசி எள் முதலியவற்றுக்கு உணவு என்று இயற்கையாகவே உயிரோம்புதல் நடைபெறுகிறது.

சில கடுமையான பணி நிமித்தமாக வெளியூரில் இருப்பவர்களே தனக்குச்சக்தி இல்லாமை காரணமாக தடை வந்து செய்ய முடியாவிட்டால் மட்டும் அதற்கு வேறு வழி கூறப்பட்டுள்ளது. ஏழைகளுக்கு அன்னம் இடலாம். எள் மற்றும் காசு வைத்து தானம் கொடுக்கலாம். அதுவும் முடியவில்லை எனில் கட்டை விரலை ஈரம் செய்து அதில் ஒட்டிய எள்ளை தானம் தந்து பித்ருக்களை நினைக்கலாம்.

பசுவுக்குப் புல் எடுத்துப்போட்டு அதைத் தர்ப்பணமாக ஏற்கும் படி பித்ருக்களை வணங்கிக்கேட்கலாம். அதுவும் முடியாதவர்கள் ஆகாயத்தை அன்னாந்து பார்த்து ஏ பித்ருக்களே! எனக்கு எதுவும் செய்ய இயலவில்லை வேண்டுகிறேன். திருப்தி பெறுவீர்களாக என்று வேண்டி விழுந்து வணங்கலாம்.

தர்ப்பண தலங்கள்..............

1.நாகை மாவட்டம் பூந்தோட்டத்திற்கு அருகில் உள்ள மூக்தீஸ்வரக் கோயில் (தில தர்ப்பணபுரி) உள்ளது. இங்கு சந்திர தீர்த்தம் உள்ளது. அரசலாறு ஓடுகிறது. இங்கும் மாயைபட்ச தர்ப்பணம் செய்யலாம்.

2.ராமேஸ்வரம்,கன்னியாகுமரி, கோடியக்ரை, திருப்புல்லான, தேவிபட்டினம், நவபாஷானை கடற்கரை தலம் கும்பகோணம் மகா மகக்குளம், ஸ்ரீரங்கம் அம்மா மண்டப படித்துறை, மூன்று நதிகள் சங்கமிக்கிற பவானி கூடுதுறை, திருச்சி அருகில் உள்ள முக்கொம்பு, மயிலாடுதுறை, காவிரிக்ரை மன்னார்குடி-திருத்துறைப்பூண்டி சாலையில் உள்ள திருராமேஸ்வரம் ஆகிய தலங்களில் மாயை தர்ப்பணம் செய்வார்கள்.

3.மகாவிஷ்ணு தன் தங்கை உமையவளை பரமசிவனுக்குத் திருமணம் செய்து கொடுத்து தேவருலகத்திலும் கயிலாயத்திலும் பல வசதிகள் இருந்தாலும் தேவர்கள், மகரிஷிகள் இருந்தாலும் தேவகணங்களால் இடையூறுகள் இருக்கும் என்று எண்ணி பூலோகம் வந்த போது அவர்கள் மூவருக்கும் ஒளி பொருந்திய ஓர் இடம் தென் படவே அங்கு தன் சக்ராயுதத்தால் அழகான தீர்த்தத்தை உருவாக்கினார்.

தன் தங்கையும், கணவன் பரம சிவனும் அதைக்கண்டு நீராட விரும்பி அழைத்து சென்ற போது தேவி அதில் எட்டிப்பார்த்து விட முகம் பொலிவாகத்தெரிந்தது. தன் நகைகளை சரி செய்த போது அவள் அணிந்திருந்த மணி குளத்தில் விழுந்தது. அதை பரமன் எடுக்க முயன்ற போது காதணிகள் நீரில் விழுந்தன.

அம்பிகையின் மணியும், பரமணின் கர்ண குண்டலமும் விழுந்ததால் மணி+ கர்ணிகா திருக்குளம் எனப்பட்டதே காசி மணிகர்ணிகா இந்த விஷேச மணிகர்ணிகா தீர்த்தங்கள் காசி மட்டுமல்ல வேதாரண்யம், திருப்புவனம், திருநீர் மலையில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதுவே மணிகர்ணிகா உருவான கதை.

4. மகாயை தர்ப்பண காலத்தில் அனைவரும் தர்பையால் ஆன மூன்று பின் பவித்திரம் இதற்கு சுத்தமான மோதிரம் என்று பெயர். கூர்ச்சம், ஒரு ஜான் அளவுள்ள 16தர்பைகளை பயன்படுத்துதல் வேண்டும்.

5.பித்ருக்களின் பெயர்கள் வரிசையாக தெரியாதவர்கள், தெரிந்தும் தெரியாத அறிந்தும் அறியாத என்வம்சாவழி பித்ருக்கள் என்று தர்ப்பண பூஜையால் திருப்தி அடைக. ஓம் தத்சத் பிரும்மார்ப்பணம் அஸ்து என்று கூற வேண்டும்.

தர்ப்பணம் இடும்போது கடை பிடிக்க வேண்டியவை............

1.சுத்தமான நீரில் தலை முழுவதாக நனையும்படி நீராடி உலர்ந்த ஆடையை அணிந்து நெற்றியில் அவரவர்களின் குலவழக்கத்திற்கு ஏற்றபடி விபூதியோ, திருமண்ணோ, கோபிச்சந்தனமோ, செந்தூரமோ அணிந்து கொண்டு கிழக்கு அல்லது வடக்கு நோக்கியபடி மனைப்பலகை அல்லது தர்ப்பைப்பாய் போட்டு அதன்மேல் பத்மாசனம் இட்டு அமர்ந்து கொள்ளுதல் வேண்டும்.

2. வலது கை மோதிர விரலில் தர்ப்பை புல்லால் செய்யப்பட்ட பவித்திரத்தை அணிந்து கொள்ளுதல் அவசியம்.

3. சுத்தமான பித்தளை தாம்பாளத்தில் கட்டை தர்ப்பையை 7 எண்ணிக்கை விரித்து அதன்மேல் கூர்ச்சம் கிழக்கு நுனியாக வைத்து நமது முன்னோர்களாகிய பித்ருக்களை அதில் ஆவாகனம் செய்தல் வேண்டும்.

4. முன்னோர் பெயரையும் வம்சாவழி கோத்திரம் தெரிந்தால் சொல்லிக் கொண்டு (தெரியாதவர்கள்) சிவ அல்லது விஷ்ணு கோத்திரம் என்று சொல்லிக் கொண்டு வலது உள்ளங்கையில் எள்ளை வைத்துக்கொண்டபடி வலது ஆள்காட்டி விரல் கட்டை விரல் இடையில் நீரும் எள்ளும் கலந்தபடி தர்ப்பைமேல் விழுமாறு விடவேண்டும்.

5. தர்ப்பணம் முடிந்த பிறகு பித்ருக்கள் வசிக்கின்ற பித்ருலோகம் உள்ள திசை எனப்படும் தெற்கு நோக்கி 12 முறை காசா டாங்கமாக விழுந்து வணங்குதல் வேண்டும்.

6. தர்ப்பணத்தை கிழக்கு நோக்கி சூரிய செய்தல் மிகச் சிறப்பான பலன்களைத்தரும். துவ்துரு திசைக்கும் வெவ்வேறு வகை பலன்கள் ச்ரார்த்தாங்க- தர்ப்பணம் விதியில் சொல்லப்பட்டுள்ளது.

7. தர்ப்பண நீரை சிறிதளவு குடும்பத்தார் தன் தலையில் தெளித்துக் கொண்டு பிறகு கால் படாத இடமான வில்வம், அரசு, மற்று பூச் செடிகளின் வேரில் ஊற்றிவிட வேண்டும்.

8.தர்ப்பண தினத்தில் தன்னால் முடிந்த அளவு அன்னதானம் செய்தல் அவசியம். சன்யாசி ஒருவருக்கு மட்டும் கூட கொடுத்து விடலாம்.

9. மந்திரங்கள் முறையாகத் தெரியவில்லையே என்று சிலர் இந்த தர்ப்பணத்தைச் செய்யாமல் விட்டு விடுகின்ற நிலை உள்ளது. அதைத்தவிர்க்க ஒர் எளிய தமிழ்க்கூறு உள்ளது. தர்ப்பைச் சட்டத்தை அமைத்து அதன்மேல் எள்ளூம் நீரும் விட்டு, விண்ணில் இருக்கும் முன்னோரே....(பெயர்) மண்ணில் வந்து நிற்கும் நீவிர்.... (திதிநாளில்) என்னால் இடப்படும் எள்ளும் நீரும் சேர்ந்திட வேணும் நன்றாய் வாழ வாழ்த்து வீரே-நல்லருள் பெற வேண்டுகிறேன். என்று 16 முறை தர்ப்பணம் இடவேண்டும் உறுதியாக இப்படிச் செய்யப்படும் எளிய தர்ப்பணம் அவர்களைச் சென்றடைந்து அவர்கள் ஆசீர்வாதத்தைப் பெற்றுத்தந்து விடும்.

10. வடமொழியில் கூறப்படும் ஊர்ஜம் வகந்தீ என்ற மந்திரத்தின் பொருள் கடைசியில் திருப்யத...தருப்யத...த்ருப்யத என்று முடியும்.


இதன் பொருள்:- அன்ன ரசமாஜவும் அமிர்தமாகவும், நெய்யாகவும், பாலாகவும், தேனாகவும், பானகமாகவும் நான் விடுகின்ற தர்ப்பண நீர் என் குடும்பத்தின் முன்னோரான பித்ருக்கனைத் திருப்தி செய்யட்டும் எம்மை வாழ்த்த வரும் பித்ருக்களே! திருப்தி அடையுங்கள்! திருப்தி அடையுங்கள்! திருப்தி அடையுங்கள்! என்று மூன்று முறை சொல்ல வேண்டும்.

தர்ப்பணத்தின் அவசியம் பற்றி மகாபாரதம் சொல்வது மிக எளிமையாகச் செய்யப்படுகிற தர்ப்பணம் கூட எத்தனை மகிமை வாய்ந்தது என்பதை மகாபாரதத்தில் உள்ள அனுசாசனபர்வம் சுலோகம் 143- கூறுவதைப்பாருங்கள்...

தந்யம் யசஸ்யம் ஆயுஷ்யம்
ஸ்வர்க்யம் சத்ரு விநாசனம்!
குல ஸந்தாரகம் சேதி
ச்ராத்த மாஹீர் மநீஷினி

இதன் பொருள் எவர் ஒருவர் பித்ருக்களான தன் முன்னோர்களை மறக்காமல் தர்ப்பண காலங்களில் நினைத்து எள்நீர் இறைந்து பித்ரு வழிபாடு செய்கிறாரோ அவருக்கு இந்தப் பூவுலகில் தனம் என்னும் செல்வம் கீர்த்தி எனும் புகழ் முழுமையான ஆயுள் ஸ்வாஜ்ஜ போகங்கள் ஆகிய பலன்கள் உறுதியாகச் கிடைப்பதோடு எதிர்வரும் பகையை அழித்து அவர் குலத்தைத் தழைத் தோங்கச்செய்யும் எனவே அமாவாசை, மகாளய பட்சதினங்களில் பித்ருக்களை வழிபடுவதைத் தன் ஜென்ம கடனாக எண்ணி செய்தல் அலசியம்.

மணிகர்ணிகா அஷ்டகத்தின் சில முத்துக்கள்:...........

ஒன்பது துதிகளை உடைய மணிகர்ணிகா அஷ்டகத்தின் சில வரிகளை இங்கே பொருளுடன் அறிவோம்

இந்த்ராத்யாஸ் த்ரிதசா யகயதந்தி நியதம்...
போக கூடியதே புன:
ஜாயந்தே மனுஜாஸ் ததோபி பசவ கீடா:
பதங்கா தய: யே மாதர் மணிகர்ணிகே தவ ஜலே
மஜ்ஜந்தி நிஷ்கல் மஷா: சாயுஜ்யேபி கிரீட
கௌஸ்துபதரா நாராயணா: ஸ்யுர் நரா:

இதன் பொருள்:....... இந்திரன் முதலிய தேவர்கள் விண்ணில் ஏற முயற்சிக்கிறார்கள். என்றாலும் அவர்கள் புண்ணியத்தை அனுபவித்து முடிந்த பிறகு மீண்டும் மனிதர்களாகவோ புழு பூச்சிகளாகவோ பிறக்கிறார்கள். அம்மா! மணிகர்ணிகா தேவியே எவர்கள் உங்கள் தீர்த்தத்தில் மூழ்குகிறார்களோ, அந்த மனிதர்கள் மாசற்றவர்கள் ஆவார்கள்.

நல்ல பதவி கிடைத்து கிரீடமும் கௌஸ்துபமும் அணிந்த நாராயண் சொரூபத்தை அடைவார்கள் என்பதாகும். மேலும் நடுப்பகல் வேளையில் மணிகர்ணிகையில் ஸ்நானம் செய்து அதன் துதியையும் அவதார திருக்கதையையும் மகாளய பட்ச தினமாகிய 15 புண்ணிய தினங்களில் கூறுவோர் பெறும் புண்ணியத்தையும் நலனையும் தேவர்களாலும் கூறிட பல நூற்றாண்டுகள் போதாது திருக்குளமாக உள்ள தேவியை வழிபடுவதால் இதன் பலனாக சந்திரசேகர சிவன், நாராயணர், மகிழ்ந்து நோய்களை நீக்கி அருள்கிறார்.

இவ்வாறு மணிகர்ணிகையின் பெருமை பற்றி அஷ்டகமாக என்பது துதியகத் கூறியுள்ள ஆதி சங்கரர் மகயாய பட்ச தர்ப்பண பூஜையின் மகத்துவத்தையும் கூறினார். கங்கே தங்கேதி யோப் ரூயாத் யோஜநாநாம் சாதரபி முச்யதே ஸர்வ பர்பேப்யோ விஷ்ணு லோகம் ஸகச்சதி!! கங்கை கங்கை என்று நூறு மைல்களுக்கு அப்பால் இருந்து சொல்பவன் எல்லா பாவங்களிலிருந்தும் விடுபட்டு விஷ்ணு அருளை அடைகிறான் என்று விஷ்ணுபுராணம் சொல்கிறது.

பித்ருக்கள் தேவர்கள் தவத அந்தனர், அக்னியை புஜிப்பவர்கள் மகா விஷ்ணுவின் நண்பர்களாக பாவிக்கப்படுகிறார்கள். தர்ப்பண மகிமை ஆயு புத்ராஜ் யச ஸ்வர்க்கம் கீர்த்திம் புஷ்டிம் பலம் ஸ்ரியம் பசூன் சுகம் தனம் தான்யம் ப்ராப்னுயாத் பித்ரு பூஜனாத்!! தீர்க்கமான ஆயுள் அறிவுள்ள குழந்தைகள், புகழ் ஸ்வர்க்கம் அழகு திடம், பலம் செல்வம் சுகம் பசுக்கள் தனம் தான்யங்கள் இவை அனைத்தையும் பித்ரு வழிபட்டால் ஒரு மனிதன் அடைய முடியும் என்று இவ்வழிபாடு பற்றி லிங்க புராணம் சொல்கிறது.

எனவே இல்லறத்தில் உள்ளவரும், தகப்பனை இழந்தவர்களும் தர்ப்பணம் அவசியம் செய்ய வேண்டும். பிள்ளை இல்லாத பெண் மணிகள் பித்ரு பூஜையை மலர் வழி பாடாகச் செய்யலாம்.

1. தகப்பனார் இல்லாதவர்கள் மட்டும்தான் தர்ப்பணம் செய்தல் வேண்டும். மாதம்தோறும் வரும் அமாவாசையில் தர்ப்பணம் செய்வோர் உலகம் முழுவதையும் திருப்தி செய்வதாக விஷ்ணுபுராணம் கூறுகிறது.

2. தாய் வழிப்பாட்டானார் உயிரோடு இருந்தால் அந்த இடத்தில் உயிரோடு இல்லாதவர் பெயரையே மறுபடியும் கூறலாம்.

3. தர்ப்பண மந்திர வாசகங்களை உதவிட வந்திருக்கும் குரு, ஆசிரியர் சொன்னாலும் நான் செய்கிறேன் என்று அடிக்கடி சொல்லுதல் வேண்டும்.

4. புரட்டாசி மாதம் திதி வந்தால் மாயை பட்சம் வந்தபிறகு செய்ய வேண்டும் என்று சில நூல்கள் கூறுகின்றன.

5. மகாளய ப்பட்ச கர்மம் நடைபெறும் காலத்தில் உத்யோக நிமித்தமாக வெளியூர்களுக்கு சென்று விட்டால் அடுத்து வருகிற ஐப்பசி அல்லது கார்த்திகை மாதத்தில் தேய்பிறையில் வரும் உங்கள் வீட்டு பித்ருக்களது திதியிலோ, ஏகாதசியிலோ விடுபட்ட தர்ப்பணத்தை செய்யலாம்.

6.தர்ப்பணத்தை மூன்று கூர்ச்சம் போட்டு செய்வது சிறப்பு. தகப்பனார் வர்கம்-1, தாயார் வர்க்கம்-1, தர்ப்பணம் ஏற்கிற பாக்கியம் இல்லாத அல்லது துர்மரணம் அடைந்த உறவினர் வர்க்கம் ஆகியவர்களுக்கு உரியன.

7. தந்தை வழி பெரியப்பா, சித்தப்பா, அத்தை ஆகியவர்களும், தாய் வழியில் பெரியம்மா, சித்தி, மாமா ஆகியோரை தர்ப்பணத்தில் கடைசியாக காருணீக் என்று சொல்லி நீர்விடல் வேண்டும். பித்ரு தர்ப்பணங்களின் வகையும் பலனும் வைணவத்தில் கருடபுராணமும் சைவத்தில் உள்ள லிங்கபுராணமும் பித்ரு தர்ப்பண விதிகளை 18ஆக வகைப்படுத்தி அதற்கான பலன்களைச் ஓலைச்சுவடி நூலில் குறிப்பிட்டுள்ளன. அவை வருமாறு:-

1.பிரம்மபதம் - பதவி உயர்வு 2.இந்திரபதம் - அரசாங்க அனுகூலம் பெற 3.தட்சிணாஜ்னி பதம் - காசிக்குப் போன பலன் பெற 4.கார்க பத்ய பதம் - வைப்புகள் சூன்யங்கள் விலக 5.ஆஹாவநீய பதம் - கடன் தொல்லைகள் தீர்ந்திட 6.ததீசி பதம் - திருஷ்டிகள் விலகி முன்னேற 7.ஸப்ய பதம் - நல்ல பரம்பரை உருவாக 8.ஆவஸத்ய பதம் - வழக்கு, சிறைவாசம், அவப்பெயர் நீங்கிட 9.சூர்ய பதம் - ஆரோக்ய விருத்திக்கு 10.சந்திர பதம் - குழந்தைப்பேறு உண்டாக 11.கார்த்திகேய பதம் - அங்காரக தோஷ நிவர்த்தி 12.கார்த்திக பதம் - இழந்த சொத்துக்களை திரும்பப் பெற 13.அகஸ்த்ய பதம் - மதிப்புடைய மனிதராக 14. க்ரவுஞ்ச பதம் - ருணம் எனும் கடன் தீர 15. கணேச பதம் - முயற்சிகள் வெற்றிக்கு 16.கண்வபதம் - துர்மரணங்கள் நிகழாதிருக்க 17.காச்யப பதம் - பித்ரு சாம் நீங்கிட முழுமை யான ஆசி பெற 18.கஜகர்ண பதம் - நல்ல செயலின் தடை விலக பித்ரு பூஜை செய்வோர் தகப்பனாருக்கு மகாளய தர்ப்பணம் செய்யும்போது இந்த முறைகளை விருப்பப்படி பயன்படுத்தலாம்.

மகாளய தர்ப்பண காலங்களில் மணிகர்ணிகாவின் சிறப்பை அறிவோம் மகாளய பட்ச நாட்களில் மணிகர்கணிகா என்ற பெயருடைய தீர்த்தங்களில் புனிதமான சூழலில் தர்ப்பணம் செய்வதால் பித்ருக்களின் ஆசீர்வாதம் உடனே கிடைக்கும் மேலும் இரட்டிப்பான பலன்கள் கிடைப்பதாகவும் ஸ்ரீ ஆதி சங்கரர் சொல்லியதோடு, ஸ்ரீ மணிகர்ணிகா அஷ்டகம் என்ற இந்த மகிமை உடைய துதியை மணிகர்ணிகா குளத்தில் குளித்த பிறகு கூற வேண்டும்.

அவ்வாறு வழிபட்டு பித்ரு தர்ப்பணமும் செய்பவர்கள் சவுபாக்கிய வாழ்வை வாழ்ந்து புத்திரர் பேரன்களைப் பெற்று இறை நலம் பெறுவார்கள். "கர்ம பூமி'' என்கிற நம் இந்திய நாட்டில் மொத்தம் 4 மணிகர்ணிகா தீர்த்தங்கள் உள்ளன.

இந்த 15 நாட்களிலும் தங்கள் ஊர் அருகாமையில் உள்ள மணிகர்ணிகாக்குச் சென்று வணங்கி வரலாம். வாரணாசி (காசியில்) விஸ்வநாதர் கோவிலில்- மணிகர்ணிகா கட்டம் மதுரை, திருப்புவணம்- பூவணநாதர் கோவிலில் மணிகணிகாகுளம் தஞ்சை மாவட்டம் வேதாரண்யம் தர்ப்பாண்யேஸ்வரர் கோவிலில் மணிகர்ணிகா கங்கை. சென்னை திருநீர்மலை ரங்கநாதர் கோவில் மலை அடி வாரத்தில் -மணிகர்ணிகா திருக்குளம் என்னும் புஷ்கரணி. கந்தனுக்கு சரவணப் பொய்கையையே புனித நீரூற்று என்பது போன்று காசிக்கு சென்று மகாளய தர்ப்பணம் செய்த முழுப்பலனையும் பெற்றிட அவரவர் தகப்பனாரின் திதி நாளன்று மேற் சொன்ன மணிகர்ணிகாளில் தர்ப்பணம் செய்தோ, அல்லது மகாளய அமாவாசையிலோ தர்ப்பண பூஜை செய்து மணிகர்கணிகா அஷ்டகத்துதியை மூன்று முறை படிக்க வேண்டும்.

குழந்தை பிறப்பும்,பிண்டத் தொடர்பும்.........

ஒருவருக்கு குழந்தையை உற்பத்தி செய்யக்கூடிய சுக்கில தாதுவில் 84 அம்சங்கள் உள்ளது. அந்த ஜீன்கள் மரபணுக்கள் நாம் செய்யும் முன்னோர் வழிபாட்டுடன் தொடர்புடையதாக உள்ளன என்று நம் சாஸ்திரங்கள் கூறுகின்றன. இக்கால மரபணு அறிவியலும், 84 ஜீன்கள் மரபணு கோட்பாட்டையே சொல்கிறது.

குழந்தை பேறு இல்லாதவர்கள் இந்த 84 அம்சங்களை பெற முடியாமல் போவதால்தான் அந்த பாக்கியத்தை அடையாமல் கடைசி வரை இருந்து வருகின்றனர் என்கிறது சாஸ்திரம். இதற்கு காரணம் ஒரு பாட்டனாரோ அவர் தகப்பனாரோ பித்ரு வழிபாடு செய்து பிண்டத்தை சமர்ப்பித்திருக்க மாட்டார் என்று சாஸ்திரம் சொல்கிறது.

இதற்கு எளிமையான தீர்வாக, புத்திரப்பேறு இல்லாதவர்கள் மகாளயப்பட்சம் நடைபெறுகிற 15 தினங்களில் அவரவர் தகப்பானர், பாட்டனார், முப்பாட்டனார்களை 16 தலைமுறைக்கு நினைத்து பதினாறு இலைகளை போட்டு அதில் அரிசி, பருப்பு வைத்து அவர்களும் தர்ப்பண கிரியை செய்து குலம் தழைக்க வேண்டுதல் செய்ய வேண்டும். வடநூலார் இதை நாந்தீ வழிபாடு என்கின்றனர்.

பூணூல் தரிக்கும் மரபு உடையவர்கள் தங்கள் வீட்டுத் திருமணம், சீமந்தம், 60-ம் கல்யாணம், பீமரதசாந்தி, சதாபிஷேகம், 80 வயது முடிவடைதல் ஆகிய சுப காலங்களில் செய்வது குறிப்பிடத்தக்கது.

பித்ரு வழிபாட்டால் மனித உடலில் சேரும் ஜீன்களின் எண்ணிக்கையை இங்கே எல்லோரும் தான் பெறுகிற உணவிலிருந்து ஒரு மனிதர் பெறுகிற ஜீன் அளவு -28, தந்தையிடம் இருந்து பெறுவது -21, தாத்தாவிடம் இருந்து பெறுவது -15, கொள்ளு தாத்தாவிடம் இருந்து பெறுவது -10, எள்ளு பாட்டனாரிடம் இருந்து பெறுவது -6, எள்ளுபாட்டன் தந்தையிடமிருந்து பெறுவது -3, எள்ளு பாட்டனின் பாட்டனிடம் இருந்து பெறுவது -1 மொத்தம் -84 ஜீன்கள்.

மேற்படி முன்னோர்களில் நெருங்கிய பிண்டத் தொடர்பு இருப்பதால்தான் குழந்தை கருவில் உருவாகும்போது பிண்டமாக உள்ளது என்கிறோம். பிண்டத் தொடர்பும், படைக்கும் சக்தியும் உள்ள தந்தை-21, பாட்டன்-15, கொள்ளு பாட்டன்-10 ஜீன் அம்சங்களை தந்த மூன்று முந்தைய தலைமுறைகளையே மூன்று வழியினருக்கு தர்ப்பணமிடல் வேண்டும் என்று சொல்லப்படுகிறது.

பெற்றோர், மூதாதையர்கள் நல்லவர்களோ, கெட்டவர்களோ அவர்களுக்கு பித்ரு பூஜை செய்வது ஒவ்வொரு மனிதனுக்கும் கடமை ஆகிறது. அவர்கள் உயிரோடு இருக்கும்போது அவர்களை மரியாதையாக நடத்தி உரிய உபகாரங்களை செய்வது அறிவுடையோர் செய்யும் செயலாகிறது.

தென் முகமாக ஏன் தர்ப்பணம் செய்கிறோம்....

மகாளய தர்ப்பண முறையை தெற்கு முகமாகவும், சிலர் கிழக்கு முகமாகவும் செய்கின்றனர். பொதுவாக கிழக்கு முகமாகவே - சூரிய உதயம் பொருட்டு செய்வர். அதாவது, தேவர்கள் கிழக்கை எடுத்துக் கொண்டனர். மேற்கை - மனிதர்கள் எடுத்துக் கொண்டனர்.

தென்திசையை பித்ருக்கள் எடுத்துக் கொள்ள வடக்கை ருத்திரர்கள் எடுத்துக் கொண்டனர். பித்ருக்களின் உலகிற்குத் தலைவனான எமதர்மனின் சம்யமினீ என்ற அரசாங்கம் தெற்கில் உள்ளதால் பித்ரு பூஜை தென்முகமாகச் செய்யப்படுகிறது.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum