தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஆனைமுகன் பற்றிய ஆச்சர்யச்செய்திகள்

Go down

ஆனைமுகன் பற்றிய ஆச்சர்யச்செய்திகள் Empty ஆனைமுகன் பற்றிய ஆச்சர்யச்செய்திகள்

Post  birundha Sat Apr 13, 2013 11:33 pm


சொல்கேட்டான் பிள்ளையார்.........

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கோட்டையூரில் அருளும் விநாயகருக்கு சொல்கேட்டான் பிள்ளையார் என்று பெயர். இவரை வணங்கிவந்த பக்தர்கள் நாளடைவில் சொக்கட்டான் பிள்ளையார் என்று மாற்றி விட்டனர்.

விசித்திரமாய் விநாயகர்கள்......

குடந்தை நாகேஸ்வரன் கோவிலில் ஜுரஹ விநாயகர் கையில் குடையுடன் துதிக்கையில் அமிர்த கலசம் ஏந்தி காட்சி தருகிறார். திருப்பரங்குன்றம் குடைவரைக் கோவிலில் கையில் கரும்புடன் காட்சி தருகிறார் விநாயகர். தேவக்கோட்டை கோவிலில் காலில் சிலம்பை அணிந்துள்ளார். சங்கரன்கோவிலில் கையில் பாம்பைப் பிடித்துக்கொண்டு காணப்படுகிறார். ஸ்ரீசைலத்தின் கிருஷ்ணர் வைத்திருக்க வேண்டிய புல்லாங்குழலை விநாயகர் வைத்திருக்கிறார். பவானி சிவன்கோவிலில் விநாயகர் கையில் விணையை வாசித்துக்கொண்டிருக்கிறார்.

பிள்ளையார் தாலிகட்டிக் கொள்கிறார்........

மதுரை வடக்கு மாசி வீதியில் நேரு ஆவார சுந்தர விநாயகர் கோவில் உள்ளது. கன்னிப்பெண்கள் இந்த ஆலயத்தில் வெள்ளிக்கிழமை தோறும் கூடு கிறார்கள். அவர்கள் வயதுக்குத்தக்கப்படி 16,21,26,32 என்றபடி விரளி மஞ்சளை தாலிக்கயிறில் கட்டி இவருக்கு அணி வித்து பிரார்த்திக்கின்றனர்.

இவ்வாறு வழிபட்டால் முகப்பொலிவு ஏற்படுமென்றும் நவக்கிரக தோஷம் விலகி நல்ல கணவர் வருவார் என்று நம்புகின்றனர். ஆலமரத்தின் கீழ் அழகுருவாய் அமைந்த இவரை மதுரைக்கு வந்த பிரதமர் ஜவஹர்லால் நேரு வழிபட்டதால் நேரு ஆலால சுந்தர விநாயகர் என்று பெயர் பெற்றுவிட்டார்.

தூமகேது கணபதி............

சென்னை, திருநீர்மலையில் எழுந்தருளியுள்ள விநாயகர் இவர். தூலம்-ராகு, கேது ஞானகாரகன் கேது வைக்குறிக்கும். இவரை வணங்கினால் ராகு, கேது தோஷங்கள் விலகி திருமணம் விரைவில் கூடும் என்பது நம்பிக்கை. சங்கடஹர சதுர்த்தி தோறும் இங்குள்ள நாகர் சன்னதி முன்பு சந்தான கணேச ஓமம் செய்யப்பட்டு புத்திரன் இல்லாதவர்களுக்கு அருட்பிரசாதம் வழங்கப்படுகிறது. அரங்கன் பள்ளி கொண்ட மாமலைக்கு எதிரில் உள்ள மணிகர்ணிகா புஷ்கரணியில் இந்த விசேஷவிக்னேசர் கிழக்கு முகமாக அமர்ந்து அருள்கிறார்.

பார்வதிதேவியுடன் கணேசர்...........

நெல்லையிலிருந்து ஐம்பது கி.மீ தொலைவில் உள்ளது காரையார் பாணதீர்த்தம் என்ற அருவி. அதன் கிழக்குக் கரையில் உள்ள சித்திவிநாயகர் வலது புறம் அன்னை பார்வதி தேவியையும் இடதுபுறம் கங்கா தேவியையும் வைத்துக்கொண்டு காட்சி தருகிறார். பிரம்ம ஹத்தி தோஷம், இவரை வணங்குவதால் போய் விடும் என்று நம்புகிறார்கள்.

தூர்வாஷ்டமியில் அருளும் கணபதி............

தூர்வா என்பதற்கு அருகம்புல் என்று பெயர் புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமிக்கு தூர்வாஷ்டமி என்ன பெயர் நிலைத்தது விநாயகப்பெருமானது அருள் அன்று கிடைப்பதால் தான். இந்த சுபநாளில் விரதம் இருந்து விநாயகரை அருகம் புல்லால் அர்ச்சித்து வணங்கு பவர்களுக்கு நல்ல அறிவுள்ள குழந்தைகள் பிறப்பார்கள். பவிஷ்ய புராணத்தில் தூர்வான்டமி விரத பூஜையின் மகிமை குறிப்பிடப்பட்டுள்ளது.

உடன்பிறப்புக்கு இடம் தந்த விநாயகர்........

சென்னை தங்கசாலைத் தெருவில் அமைந்துள்ள ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் விநாயகப் பெருமாள் தனது உடன் பிறப்பான முருகப்பெருமானுக்கு தன் உடலில் பாதியைக் கொடுத்துள்ளார். அவருக்கு பின்புறம் முரு கனது தோற்றம் உள்ளது. எழு நாகர்தலை உருவின் மேல் ஐந்து முருகங்களுடன் அமர்ந்த கோலத்தில் இவர் காணப்பட, பின்புறம் நின்ற கோலத்தில் தம்பி முருகன் இருக்கிறார். இவரை வணங்கினால் சகோதர ஒற்றுமை ஏற்படும் என்று நம்புகிறார்கள்.

பெண்வடிவில் விநாயகிகள்..........

விநாயகர் பெண் வடிவம் கொண்டதால் அவரை விநாயகி என்று அழைக்கலானார்கள். எத்தனை விநாயகிகள் பாருங்கள். கோவைப்பகுதியில் உள்ள பவானி ஆதிகேசவப் பெருமாள் கோவிலில் வீணையை வாசித்தப்படி விநாயகி உள்ளார். ஒரிசா மாநிலத்திலுள்ள ஹராப்பூரில் ரிஷப வாகனத்தில் மேல் நின்றபடி விநாயகி காட்சி தருகிறாள்.

திருநெல்வேலி வாசுதேவநல்லூரில் இடுப்புக்குக் கீழ்யாளி வடிவம் கொண்ட விநாயகி கைகளில் வான், மமு, அதை கேடயம் வைத்தப்படி போர்க்கோலத்தில் காட்சி தருகிறாள். ராஜஸ்தான் மாநிலத்து ஹர்ஷவர்தன் நகரில் சிவன் கோவிலில் சிரசில் மகுடம் தரித்த விநாயகி காட்சி அளிக்கிறாள். நாகர்கோவில் வடிவீஸ்வரத்தில் உள்ள அழகம்மை சன்னதியில் புலிக்கால்களோடு, வீனை வாசித்தப்படி விநாயகி வடிவம் காணப்படுகிறது.

உத்திரபிரதேசத்தில் நதியான் என்ற ஊரில் பரியங்காசன் வடிவத்தில் விநாயகி உருவம் உள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் முன் மண்டப வாயிலில் முகம் யானை வடிவிலும், உடல் முழுவதும் புலிவடிவுடனும் விநாயகர் சக்தி வடிவினாய் விநாயகி காட்சி தருகிறான். கணேஸ்வரி கணேசாயினி, கஜானனி, ஜங்கினி, சக்தி கணபதி, விக்னேஸ்வரி, விநாயகி, மூஷிக், சுமுகி, ரேம் பினி என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறாள் பெண் வடிவ விநாயகி.

கோபத்தில் பிறந்த மகன்............

ஒரு சமயம் விநாயகர் கமலாகரன் என்ற அசுரனை அழிக்க போர் செய்து கொண்டிருந்தபோது புத்திதேவி அங்கு வந்து சேர்ந்தாள். அவன் கண்களில் கோபம் தெறிக்க அதிலிருந்து ஒரு வீரன் வெளிவந்தான். அவன்தான் லாபன். அவனை விநாயகர் தனது மகனாக ஏற்றுக்கொண்டார்.

18-அடி ஆழத்தில் கணேசர்........

விருத்தாச்சலத்தில் உள்ள விடுத்த கிரீஸ்வரர் கோவி லில் 18 அடி ஆழத்தில் கிழக்கு நோக்கியபடி விக்னேசர் அருள்பாலிக்கிறார். இங்கே ஒரு புறம் பொன்னுக்கு மாற்றுரைத்த கணேசரும் உள்ளார்.

விநாயகரின் சட்டாட்சர மந்திரம்..........

ஓம் வக்ரதுண்டாய ஹீம் என்பது தான் சட்டாட்சர மந்திரம் இந்த மந்திரத்தை உச்சரித்து விநாயகரை வணங்கினால் பகை வரை எளிதாக வென்று விடலாம். முருகன் தாராசுரனை வென்றதும், வாமனன் மகா பலியை வென்றதும், பரசுராமர் அசுரர்களை வீழ்த்தியதும், மது கைடபர்களை திருமால் அழித்ததும் இந்த மந்திரத்தை உச்சரித்தால் தான்.

ராஜராஜ சோழன் வணங்கிய கணபதி.......

ராஜராஜ சோழன் சிறந்த சிவ பக்தர். இருப்பினும் அவர் விநாயகரை வணங்கத் தவறியதில்லை. தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலில் மேற்கு மூலையில் திருச்சுற்று மாளிகையில் உள்ள சின்னச்சின்ன கோவிலுக்குள் இருக்கும் விநாயகர்களை தான் அவர் வணங்கி வந்தார். பரிவார ஆலயத்துப்பிள்ளையார் என்று பெயர் வழக் கத்தில் உள்ளது.

பாதாள விநாயகர்..........

திருப்பதிக்கு செல்லும் வழியில் உள்ள காளஹஸ்தி சிவன் கோவிலில் பாதாள விநாயகர் இருக்கிறார். இவர் தனது துதிக்கையை உயர்த்தி வாழ்த்துச் சொல்வது போல் அமைக்கப்பட்டுள்ளார்.

விநாயகர்-கல்விக்கடவுளாக..........

மராட்டிய மாநிலத்தில் விநாயக சதுர்த்தியை வெகு சிறப்பாக கொண்டாடுவர். அங்கே ஒவ்வொரு பகுதியிலும் பந்தல் அமைத்து அதில் பெரிய பெரிய விநாயகர் நிலை அமைத்து பூஜை செய்து பின்னர் அதை ஊர்வலமாக எடுத்துச்சென்று கடலில் கரைப்பது வழக்கம். கல்விக்கடவுளாக கருதி வணங்குகின்றனர்.

வாரத்தில் செவ்வாய்க்கிழமையே அவருக்கு உகந்த நாள். கணபதியை வணங்க அனைத்துக் கடவுளரையும் போற்றியதாக பொருள்படும். அவரது அம்சத்தில் முகம்- விஷ்ணுரூபம். இடபாகத்தில் சக்தி, வலது பாகத்தில்-சூரியன், முக் கண்களில் சிவாபெருமாள் உள்ளனர்.

தந்த அலங்காரம்:........

சிவகங்கை மாவட்டம் இளையாத்தங்குடியில் நகரத் தார் கோவிலான கைலாச விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் விநாயகர் சதுர்த்தியின் போது பல லட்ச ரூபாய் மதிப்புள்ள யானைத் தந்தங்களை விநாயகருக்கு வைத்து அலங்காரம் செய்து வழிபடுவார்கள்.

ஐவகை விநாயகர் வடிவங்கள்........

1. நின்ற கோலம்,
2. அமர்ந்த கோலம்,
3.நர்த்தன கோலம்,
4.வலஞ்சுழி விநாயகர், இடஞ்சுழி விநாயகர்.

பிரம்மன் கட்டிய விநாயகர் கோவில்........

மராட்டிய மாநிலம் புனே அருகில் போர்காவ் என்ற தலத்தில் திரிசக்தி சேத்திரம் அமைந்துள்ளது. இங்குள்ள விநாயகர் கோவிலை பிரம்மன் கட்டியதாக கூறுகிறார்கள். வேதங்களைத் திருடிய கமலாசுரனை மயில் வாகனத்தில் ஏறி துரத்திச்சென்று அவற்றை மீட்டு வந்தார். போர் முடிந்த பிறகு கமலாசுரன் உடல் மூன்று துண்டுகளாக விழுந்த இடத்தில் பிரம்மா விநாயகருக்காக கட்டியதாக புராணத்தில் உள்ளது.

விநாயகருக்கு என்ன பிடிக்கும்?

சுண்டல், பொரி, கடலை, விளாம்பழம், இளநீர், தேன், அதிரசம், அப்பம், முறுக்கு, சர்க்கரை, கொழுக்கட்டை, மிளகு அன்னம் (சம்பாசாதம்) சர்க்கரைப்பொங்கல், வடை ஆகியன.

காசியாத்திரையை முடித்து வைக்கும் கணபதி.........

புண்ணியத்தைத்தேடி காசி மாநகருக்கு செல்பவர்கள் அங்குள்ள அனைத்து விதமாக ஆலய வழிபாட்டுச் சம்பிரதாயங்கள் சடங்குகளை முடித்துக்கொண்டு வரும்போது முடிவில் ஒரு சிறிய ஆலயத்தில் உள்ள டுண்டி ராஜ கணபதியை வணங்கினால் தான் யாத்திரை முற்றுப்பெறுவதாக நம்புகின்றனர்.*
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum