தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பிரதோஷ பூஜைக்கு முன் நந்தி பூஜைc

Go down

பிரதோஷ பூஜைக்கு முன் நந்தி பூஜைc Empty பிரதோஷ பூஜைக்கு முன் நந்தி பூஜைc

Post  birundha Sat Apr 13, 2013 11:24 pm


ஒருவர் பிரதோஷ வழிபாட்டை மேற்கொள்கிறார் என்றால், அவர் பிரதோஷ பூஜைக்கு முன் நந்தி தேவருக்கு பூஜை செய்ய வேண்டும். எல்லா சிவாலயங்களிலும், சிவனுக்கு எப்படி பூஜை செய்யப்படுகிறதோ, அதைப்போலவே நந்தி தேவருக்கும் பூஜை செய்யப்படுகிறது. எனவே பிரதோஷ வழிபாட்டுக்கு முன் நந்தி தேவர் வழிபாடு மிகவும் முக்கியமானதாகும்.

நந்திக்கு பலதரப்பட்ட சிறப்புகள் உண்டு. இவர் ஈடுஇணையில்லாப் பெருமைகளை உடையவர். தரும தேவதையின் மறு வடிவமும் இவரே சிவ பெருமானின் பஞ்சாட்சரமான "ஓம் நமசிவாய'' என்னும் சொல்லின் நடமாடும் வடிவம் இவரே. எங்கு இறைவன் சென்றாலும், நந்தியுடன் செல்லுவதே வழக்கமாக உள்ளது.

இறைவனை விட்டு அகலாதவர் இவர். இப்படிப்பட்ட உயர்ந்த பெருமைகளை உடைய நந்தி தேவரை, முதலில் வழிபட வேண்டியது முறை. பிரதோஷ விரதம் அனுஷ்டிப்பதில் பாடல்கள் மிகுந்த முக்கியத்துவம் வகிக்கின்றன.

எனவே தான் பிரதோஷ தினத்தில் முக்கியமாக பிரதோஷ வேளையில், அதற்கே உரிய பாடல்களை எவ்வளவு அதிகமாக முடியுமோ, அவ்வாளவு அதிகமாக ஓதுவது அவசியம் என்று பெரியவர்கள் சொல்லியுள்ளார்கள். இப்புண்ணியப் பாடல்களைப் பாடுவதன் மூலம் இறைவன் அருளை நீங்கள் பரிபூரணமாகப் பெற்று, சகல சௌபாக்கியங்களையும் அடையசலாம் என்பது உறுதி.

நோய் நீங்கி, கடன் நீங்கி, துன்பம் நீங்கி, அறியாமை இருள் நீங்கி, இனிய வாழ்வும், செல்வச் செழிப்பும், மழலைச் செல்வமும் அடையலாம் என்பது திண்ணம். இப்பாடல்களின் மகிமை அவ்வளவு பெரியது என்பது காலம் காலமாக நமது முன்னோர்கள் அனுபவ பூர்வமாக உணர்ந்துள்ளனர். பொருள் செறிவும், நாத மேன்மையும் உடைய இப்பாடல்களை நாமும் ஓதி வாழ்க்கையில் மேன்மை அடைவோம்.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum