தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நந்தி விலகிய கோயில்கள்

Go down

நந்தி விலகிய கோயில்கள் Empty நந்தி விலகிய கோயில்கள்

Post  birundha Sat Apr 13, 2013 10:50 pm


திருப்புங்கூரில் தாழ்த்தப்பட்ட குலத்தில் பிறந்த நந்தனாரை அந்தணர்கள் கோயிலுக்குள் அனுமதிக்க வில்லை. இறைவனைக் காணும் பொருட்டு வாசலில் இருந்து இறைவனை வேண்டினார். அவருக்குத் திருக்காட்சியளிக்க விரும்பிய இறைவன், நந்தியை விலகி நிற்கும்படி ஆணையிட நந்தி விலகி, நந்தனாருக்கு இறைவனின் திருக்காட்சியைக் காணச் செய்தது.

திருப்புங்கூர் கோயிலில் நந்தி இடப்புறம் கால்களை மடக்கி வலப்புறும் சாய்ந்து காணப்படுகிறது. மற்ற எல்லாக் கோயில்களிலும் இதற்கு எதிர்மறையாக நந்தி உள்ளது. இக்கோயில் சன்னிதானத்தில் உள்ள சிறுநந்தியும் விலகியே காணப்படுகிறது. திருமழபாடி கோயிலில் சந்நிதிக்கு நேரே நந்தி இல்லை.

திருப்பூந்திருத்தி சிவாலயத்திலும் நந்தி விலகியுள்ளது. இது ஞானசம்பந்தப் பெருமானுக்குகாக விலகியது. நாவுக்கரசரும் ஞானசம்பந்தப் பெருமானும் இத்திருக் கோவிலுக்கு எழுந்தருளி வழிபாடு செய்ய வந்தனர். நாவுக்கரச பெருமான் தனது கைகளால் சிவத் தொண்டு செய்த இக்கோவிலை கோயிலின் தன் கால்களால் மிதிக்க மனமின்றி சம்பந்தப் பெருமான் கோயிலின் வெளியே நின்றார்.

அப்போது இறைவன் நந்திதேவரை விலகச் செய்து சம்பந்தப் பெருமானுக்குத் திருக்காட்சி அருளினார் என்று திருப் பூந்துருத்தி தல வரலாறு கூறுகிறது. மதுரை அருகே உள்ள திருப்பூவனம் ஆலயத்திலும் நந்தி சிறிது சாய்ந்துள்ளது. ஞானசம்பந்தப் பெருமான் இத்தலத்திற்கு வந்தபோது இங்குள்ள மணல் எல்லாம் சிவலிங்கமாகக் காட்சியளிக்க சம்பந்தரும் அக்கரையிலிருந்தே சிவபெருமானைப் பாடியுள்ளார்.

அவருக்குக் காட்சியளிக்க விரும்பிய இறைவன் நந்தியைச் சற்று விலகச் சொன்னதாக ஐதீகம். சுசீந்திரம் தாணுமாலயசுவாமி திருக்கோயிலில் உட்சுவரை ஒட்டியபடி திண்ணைமேல் பெரிய அளவில் நந்தி உள்ளது. இந்த நந்தி சுதையாலானது. இதை மாக்காளை என்று அழைக்கிறார்கள். சந்தாசாகிப் என்ற இஸ்லாமிய மன்னன் இக்கோயிலின் சிலைகளையெல்லாம் உடைத்தான்.

இந்த நந்திக்குச் சக்தி உள்ளதா என்று சோதிக்க விரும்பிய அவன் அதற்கு வைக்கோலைத் தின்னத்தர அதைத் தின்ற நந்தி சாணமிட்டது என்று கூறுவதுண்டு. அதன் பிறகே அவன் சிலைகளை உடைப்பதை நிறுத்தினான் என்றும் வழக்கு உண்டு. மகாதேவர் ஆலயத்தில் உறைந்திருக்கும் ஈஸ்வரனின் பெயர் வீரபத்திரர். இவர் மிகவும் கோபநிலையில் இருப்பதால் இவர் முன்னால் இருக்க முடியாமல் நந்தி வடக்கு நோக்கி ஒதுங்கி இருப்பதாகக் கூறப்படுகிறது.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum