தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அட்சய திருதியை தினத்தன்று ஏன் தங்கம் வாங்க வேண்டும்?

Go down

அட்சய திருதியை தினத்தன்று ஏன் தங்கம் வாங்க வேண்டும்? Empty அட்சய திருதியை தினத்தன்று ஏன் தங்கம் வாங்க வேண்டும்?

Post  birundha Fri Apr 05, 2013 10:06 pm


நமக்கு செல்வங்களை வாரி வழங்குபவள் லட்சுமி. அவளுக்கு பொன்மகள் என்றொரு பெயரும் உண்டு. மகாலட்சுமி பார்வை எங்கு படுகிறதோ அங்கு எல்லாவித செல்வங்களும் குறைவில்லாமல் வளரும் என்பது ஐதீகம். மகாலட்சுமி அப்படி தன் பார்வையை பதிக்கும் தினமாக அட்சய திருதியை கருதப்படுகிறது. எனவேதான் அன்று தங்கம் வாங்கி மகாலட்சுமி முன்பு வைத்து வணங்க வேண்டும் என்கிறார்கள்.

தங்கமானது நிறங்களில் உயர்வானது புனிதமானது. தங்கம் தன்னிடம் அழகும், தூய்மையும் கொண்டிருப்பது போல தன்னை அணிந்தவர்களுக்கும் தூய்மையை கொடுப்பதாக சாஸ்திரங்கள் சொல்கின்றன. தங்கம் பயன்படுத்தப்படும் இடத்தில் தோஷம் தங்காது. தோஷம் இருந்தால் ஓடிவிடும். அட்சய திருதியை தினத்தன்று தங்கம் தானமாக கொடுப்பது மிக, மிக புண்ணியம் தரும்.

ஏனெனில் தங்கம் தானம் ஒருவரது பாவங்கள் அனைத்தையும் போக்கி விடும் ஆற்றல் கொண்டது. மேலும் நீங்கள் தொடங்கும் காரியம் அனைத்தும் வெற்றி பெற தங்கத்தை தானம் செய்வது அவசியம் என்று கூறப்படுகிறது. குறிப்பாக திருமணத்துக்கு பணம் இல்லாமல், உரிய வசதி வாய்ப்பு இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கும் ஏழை பெண்களுக்கு அட்சய திருதியை தினத்தன்று தங்கம் தானம் செய்தால் பல மடங்கு சக்தி உங்களுக்கு கிடைக்கும்.

தோஷப் பரிகாரங்களுக்கு கூட தங்கத்தை குறிப்பிட்ட அளவுகளில் தானம் செய்ய வேண்டும் என்று தர்ம சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தங்க ஆபரணங்கள் உடலுக்கு ஒரு புனித தன்மையை தருவதாக சான்றோர்கள் சொëல்லி உள்ளனர். தங்கத்தில் மகாலட்சுமி வாசம் செய்கிற காரணத்தால் அதை ஆபரணங்களாக கால்களில் அணியக்கூடாது. கொலுசு, மெட்டி போன்றவற்றை வெள்ளியில் தான் அணிய வேண்டும்.

இடுப்பில் தங்க ஆபரணங்கள் அணியலாம். தங்க நகைகளை அணிவதால் நமக்கு எத்தகைய பலன்கள் கிடைக்கும் என்பதை சங்க கால நூல்கள் அழகாக கூறியுள்ளன. முதலாவதாக நாம் தங்க நகை அணிந்தால் நம் மனதில் தெளிவும், உறுதியும் இருக்கும். நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் உறுதி தன்மை கொண்டதாக அமையும். இயற்கையாகவே தங்கத்துக்கு உறுதித்தன்மை அதிகம்.

அது நம் உடலோடு ஒட்டி கிடப்பதால் நமக்கு மன பலம் உண்டாகும். தங்கமானது தன்னம்பிக்கை உணர்வைத் தரும் சக்தி கொண்டது. நீங்கள் மோதிரம், செயின் அணிபவராக இருந்தால் நிச்சயமாக சில விஷயங்களில் உங்களுக்கு தன்னம்பிக்கை கிடைக்கும். இதை கருத்தில் கொண்டே நம் முன்னோர்கள் தாலியை தங்கத்தில் செய்யும் மரபை உண்டாக்கினார்கள். தங்கத்துக்கு தெய்வீகத்தன்மை உள்ளது என்பதை மறந்து விடக்கூடாது.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum