தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நாள்தோறும் 5 சினிமா காட்சிகள் நடத்த அரசு அனுமதி தர வேண்டுமாம்!

Go down

நாள்தோறும் 5 சினிமா காட்சிகள் நடத்த அரசு அனுமதி தர வேண்டுமாம்! Empty நாள்தோறும் 5 சினிமா காட்சிகள் நடத்த அரசு அனுமதி தர வேண்டுமாம்!

Post  amma Fri Apr 05, 2013 5:06 pm

தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சம்மேளன பொதுக்குழு கூட்டம், சென்னையில் நேற்று நடந்தது. இதன் தலைவர் அபிராமி ராமநாதன், மற்றும் டாக்டர் முரளி மனோகர், திருப் பூர் சுப்ரமணியன் உள் பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத் தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பற்றி அபிராமி ராமநாதன் கூறியதாவது:

சினிமாவுக்கு நன்மை விளைவிக்கும் நிபந்த னைகளுடன், படங் களுக்கு வரிவிலக்கு அளித்ததற்காக தமிழக அரசுக்கு நன்றி. மேலும், முதல்வரை சந்தித்து, கீழ்க்கண்ட சலுகைகள் கேட்க உள்ளோம்.

மல்ட்டி பிளக்ஸ்களுக்கும், ஏ.சி தியேட்டருக்கும், ஏ.சி இல்லாத தியேட்டருக்கும் அதிக பட்ச கட்டணம், குறைந்தபட்ச கட்டணம் நிர்ணயிக்க வேண்டும். அப்படி நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்துக்கு மேல் எந்த தியேட்டரும் கட்ட ணத்தை உயர்த்துவது இல்லை என்று முடிவு செய்துள்ளோம்.

மல்ட்டி பிளக்ஸ் தியேட்டருக்கு உள்ள நிபந்தனைகளின்படி கட்டப்பட்டிருக்கும் மல்ட்டி பிளக்ஸ் இல் லாத தனி தியேட்ட ருக்கும், மல்ட்டி பிளக்ஸ் தியேட்டருக்கு உள்ள கட்டணத்தை அனுமதிக்க வேண்டும். தியேட்டர் பராமரிப் புக்கான கட்டணத்தை உயர்த்திக் கொடுக்க வேண்டும். தியேட்டர்கள் இருக்கும் கட்டடத்துக்கு அந்த கட்ட டத்தின் உறுதிக்கேற்ப, பொதுப்பணித் துறை 5 வருடங்கள் வரை உறுதிச் சான்றிதழ் வழங்க வேண்டும். டிஜிட்டல் தியேட் டர்களுக்கு லைசென்ஸ் உள்ள ஆபரேட்டர்கள் தேவையில்லை. ஒரு நாளுக்கு காலை 9 மணி முதல் இரவு 12 மணி வரை, இவ்வளவு காட்சி கள் மட்டுமே நடத்த லாம் என்ற கட்டுப் பாட்டை விலக்கிக் கொள்ள வேண்டும்.

-இவ்வாறு அபிராமி ராமநாதன் கூறினார்.

பிறகு செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அபிராமி ராமநாதன், ஏ.சி தியேட்டருக்கு ஒரு ரூபாய், ஏ.சி இல்லாத தியேட்டருக்கு 50 பைசா பராமரிப்பு கட்டணமாக இருக் கிறது. அதை உயர்த்தி தர வேண்டும். இப்போது 2 மணி நேரம் ஓடுகின்ற படங்கள் நிறைய வரு கிறது.

எனவே, ஒரு நாளுக்கு 4 காட்சிகள் என்ற நிலையை மாற்றி, 5 காட்சிகள் நடத்த அனுமதிக்க வேண்டும். தியேட்டருக்குள் விற்கப் படும் உணவுப் பண் டங்களின் விலை மற்றும் வண்டி பார்க் கிங் கட்டணம் அதிக மாக இருக்கிறது என்கிற புகார் பற்றி எங்கள் சம்மேளன கூட்டத்தில் பேசி முடிவு செய்யப் படும் என்றார்.
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics
»  தயாரிப்பாளர் சங்க பிரச்னை வாக்கு எண்ணிக்கை நடத்த கோர்ட் அனுமதி
» எஸ்ஏசி அணிக்கு பின்னடைவு – தயாரிப்பாளர் சங்கப் பொதுக்குழுவை கேயார் நடத்த நீதிமன்றம் அனுமதி!
» தீபாவளி படம் ரிலீஸ்: தியேட்டர்களில் 7 நாட்களுக்கு 5 காட்சிகள் அனுமதி
» தீபாவளி படம் ரிலீஸ்: தியேட்டர்களில் 7 நாட்களுக்கு 5 காட்சிகள் அனுமதி
» டிச.15 சினிமா காட்சிகள் ரத்து?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum