தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் 7 புதிய தொழிற்பேட்டைகள் தொடங்கப்படும் சட்டசபையில் அமைச்சர் அறிவிப்பு

Go down

 தமிழகத்தில் 6 மாவட்டங்களில் 7 புதிய தொழிற்பேட்டைகள் தொடங்கப்படும் சட்டசபையில் அமைச்சர் அறிவிப்பு  Empty தமிழகத்தில் 6 மாவட்டங்களில் 7 புதிய தொழிற்பேட்டைகள் தொடங்கப்படும் சட்டசபையில் அமைச்சர் அறிவிப்பு

Post  amma Thu Apr 04, 2013 6:15 pm



சிட்கோ நிறுவனம் மூலமாக விழுப்புரம், தருமபுரி, அரியலூர், கடலூர், ராமநாதபுரம் உட்பட 6 மாவட்டங்களில் உள்ள 7 ஊர்களில் புதிய தொழிற்பேட்டைகள் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டசபையில் ஊரகத்தொழில்கள் துறை அமைச்சர் அறிவித்தார்.

தமிழ்நாடு முதலிடம்

தமிழக சட்டசபையில் குறு, சிறு மற்றும் நடுத்தரத்தொழில் நிறுவனங்கள் துறையின் மானிய கோரிக்கை மீதான விவாதம் நேற்று முன்தினம் நடந்தது. இதில் பல உறுப்பினர்கள் பேசினர். இந்த நிலையில் இந்த மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதில் அளித்து ஊரக தொழில்கள் துறை அமைச்சர் ப.மோகன் பேசியதாவது:–மாநில பொருளாதார வளர்ச்சியில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பெரும் பங்கு ஆற்றி வருகின்றன. கடந்த 28.2.2013 நிலவரப்படி, ரூ.48,189 கோடிக்கு மேல் முதலீடு செய்யப்பட்ட, 8.44 லட்சம் பதிவு செய்யப்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தரத்தொழில் நிறுவனங்கள் சுமார் 58.83 லட்சம் நபர்களுக்கு வேலை வாய்ப்பை அளித்துள்ளன. இந்தியாவிலேயே அதிகப்படியான நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதில், தமிழ்நாடு தான் முதலிடத்தை பெற்றுள்ளது.

சிறு தொழில் நிறுவனங்களுக்கு அதிக நிதி

11–வது ஐந்தாண்டு திட்டத்தில், 2007 முதல் 2012–ம் ஆண்டு வரை, குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு ரூ.206 கோடி ஒதுக்கப்பட்டது. 2012 முதல் 2017–ம் ஆண்டு வரையிலான 12–வது ஐந்தாண்டு திட்டத்தில் இத்துறையின் வளர்ச்சிக்கு ரூ.946 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர கீழ்கண்ட திட்டங்களை அறிவிக்கிறேன்.

*திருவள்ளூர் மாவட்டம் காக்களூரில் அமைந்துள்ள அரசு தொழிற்பேட்டையில் ரூ.25 லட்சம் செலவில் பொது வசதி மையம் ஒன்று அமைக்கப்படும்.

*சென்னை, மதுரை, கோயம்புத்தூர், சேலம் மற்றும் தூத்துக்குடி ஆகிய 5 இடங்களில் தொழில் வணிகத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ரசாயன பரிசோதனை கூடங்களின் கட்டமைப்பு வசதிகள் ரூ.2 கோடி செலவில் மேம்படுத்தப்படும்.

*இந்த ரசாயன பரிசோதனை கூடங்களுக்கு கூடுதல் ஆய்வக உபகரணங்கள் வாங்குவதற்கு ரூ.15 லட்சம் நிதியுதவி வழங்கப்படும்.

சென்னை பயிற்சி மையம் மூடல்

*சென்னை, கிண்டியில் இயங்கி வரும் அரசு அறிவியல் கண்ணாடிப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி நிலையத்தில் மாணவர்களின் சேர்க்கை மிகவும் குறைந்து விட்டது. எனவே இந்த பயிற்சி நிலையத்தை, கோவைக்கு மாற்றி அங்கு தற்போது இயங்கி வரும் அரசு அறிவியல் கண்ணாடி பொருட்கள் தயாரிப்பு பயிற்சி மையத்துடன் ஒருங்கிணைத்து புத்துயிரூட்டுவதற்காக ரூ.30 லட்சம் நிதியுதவி வழங்கப்படும்.

புதிய தொழிற்பேட்டைகள்

*தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் (சிட்கோ) மூலமாக விழுப்புரம் மாவட்டம், காட்டு வன்னஞ்சூர், தருமபுரி மாவட்டத்தில் பர்வதனஹல்லி, ஈச்சம்பாடி, அரியலூர் மாவட்டம் மல்லூர், கடலூர் மாவட்டம் பெரிய நெசலூர், ராமநாதபுரம் மாவட்டம் சக்கரக்கோட்டை, நாமக்கல் மாவட்டம் வேட்டம்பாடி ஆகிய 7 ஊர்களில் புதிய தொழிற்பேட்டைகள் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அமைச்சர் மோகன் பேசினார்.
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics
»  அரியலூர் மாவட்டத்தில் தொடக்கப்பள்ளி குழந்தைகளுக்கு ருசியான தானிய லட்டு, அல்வா சட்டசபையில் அமைச்சர் பி.வளர்மதி அறிவிப்பு
»  டெசோ மாநாடு குறித்து அமைச்சர் விமர்சனம்: சட்டசபையில் தி.மு.க. வெளிநடப்பு
» விலங்குகளிடம் இருந்து மனிதர்களை காப்பதற்கு 183 கிலோ மீட்டருக்கு சூரிய மின்வேலி சட்டசபையில் அமைச்சர் தகவல்
» தமிழக அரசு ஊழியர்களுக்கு 8 சதவீதம் அகவிலைப்படி உயர்வு: சட்டசபையில் ஜெயலலிதா அறிவிப்பு
» காரைக்கால் விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.20ஆயிரம் நிவாரணம் முதல்–அமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum