மசாலா கபே படத்தின் தலைப்பு மாறுகிறது…?
Page 1 of 1
மசாலா கபே படத்தின் தலைப்பு மாறுகிறது…?
சுந்தர்.சி இயக்கி வரும் மசாலா கபே படத்தின் தலைப்பு மாற்றம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இயக்குநராக இருந்து ஹீரோவாக மாறி அதில் ஜொலிக்க முடியாமல் போக, மீண்டும் தன்னுடைய டைரக்ஷ்ன் துறைக்கே வந்துவிட்டார் சுந்தர்.சி. இவர் இப்போது தன்னுடைய 25வது டைரக்ஷ்ன் படமாக மசாலா கபே என்ற படத்தை இயக்கி வருகிறார். விமல், சிவா, அஞ்சலி, ஓவியா ஆகியோர் நடித்து வரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சந்தானம் நடிக்கிறார். சுந்தர்.சி யின் மனைவியும் நடிகையுமான குஷ்பு தன்னுடைய அவினி சினி மேக்ஸ் பேனரில் இப்படத்தை தயாரித்து வருகிறார். சுந்தர்.சியின் வழக்கமான காமெடி, ஆக்ஷ்ன், த்ரில்லர் போன்ற அனைத்து அம்சங்களும் இந்த படத்திலும் இருக்கிறது. ஊட்டி, கும்பகோணம், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இப்படத்தின் சூட்டிங் நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில், தமிழக அரசின் வரிச்சலுகை உள்ளிட்டவைகளை பெற இப்படத்தின் தலைப்பை மாற்ற சுந்தர்.சி யோசித்து வருகிறாராம். விரைவில் புது தலைப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» தலைவன் என்ற தலைப்பு மாறுகிறது
» ஷங்கர் படத்தின் பெயர் மாறுகிறது?
» விஜய் படத்தின் தலைப்பு தளபதி?
» விஜய் படத்தின் தலைப்பு தளபதி?
» விஜய் படத்தின் தலைப்பு தங்கமகன்?
» ஷங்கர் படத்தின் பெயர் மாறுகிறது?
» விஜய் படத்தின் தலைப்பு தளபதி?
» விஜய் படத்தின் தலைப்பு தளபதி?
» விஜய் படத்தின் தலைப்பு தங்கமகன்?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum