தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ராகவேந்திரர் கோவிலுக்கு ரஜினி ரூ. 10 கோடி நன்கொடையா?- மந்த்ராலயம் விளக்கம்

Go down

ராகவேந்திரர் கோவிலுக்கு ரஜினி ரூ. 10 கோடி நன்கொடையா?- மந்த்ராலயம் விளக்கம் Empty ராகவேந்திரர் கோவிலுக்கு ரஜினி ரூ. 10 கோடி நன்கொடையா?- மந்த்ராலயம் விளக்கம்

Post  ishwarya Sat Mar 30, 2013 5:33 pm

ஸ்ரீராகவேந்திரர் கோவில் ஆந்திரா மாநிலத்தில் உள்ள மந்த்ராலயத்தில் உள்ளது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் இக்கோவிலுக்கு தினமும் வந்து செல்கிறார்கள். ரஜினிகாந்த், ஸ்ரீராகவேந்திரரின் தீவிர பக்தர் ஆவார். கோவில் பணிகளுக்காக நிறைய நன்கொடை கொடுத்துள்ளார். தனது 100-வது படத்தில் ராகவேந்திரர் வேடத்திலும் நடித்தார்.

ஸ்ரீராகவேந்திரர் கோவிலுக்கு ரஜினி ரூ. 10 கோடி நன்கொடை வழங்கப்போவதாக செய்திகள் வெளியானது. இந்த பணத்தில் கோவில் மண்டபத்தின் பின்புறம் உள்ள கட்டிடங்கள் புதுப் பிக்கப்பட்டு பக்தர்கள் தங்க ஏ.சி. வசதியுடன் 25 அறைகள் கட்டப்படும் என்று கோவில் நிர்வாகிகள் கூறியதாகவும் செய்திகள் வந்தது.

இதுகுறித்து ஸ்ரீராக வேந்திரர் கோவில் மானேஜரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் கூறியதாவது:-

ராகவேந்திரர் கோவிலுக்கு நன்கொடை கேட்டு ரஜினி மனைவி லதா ரஜினிகாந்த்தை அணுகியது உண்மைதான். எங்கள் கோவிலில் காரியதரிசி சுவாமிஜி ஸ்ரீசுயமேந்திரசார்யா இதற்கான முயற்சியில் ஈடுபட்டார். லதா ரஜினியை சந்தித்து நன்கொடை கேட்டார். கோவிலில் அவசரமாக செய்ய வேண்டிய 3 பணிகள் உள்ளன. அதற்கு நிதி தேவைப்படுவதால் அணுகினோம். ஆனால் ரூ. 10 கோடி ரஜினி தரப் போவதாக வெளியான தகவல் உண்மையல்ல.

நாங்கள் இதுவரை இந்த விஷயமாக ரஜினியை சந்தித்து பேசவில்லை. அவர் தரப்பில் எவ்வளவு தொகை நன்கொடையாக தரப்படும் என்றும் கூறப்படவில்லை. ரஜினி விருப்பப்பட்டு எவ்வளவு பணம் தந்தாலும் ஏற்றுக் கொள்வோம். ரஜினி நன்கொடை அளித்ததும் அதிகாரபூர்வமாக அறிவிப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» செலவு 2.5 கோடி… நஷ்டம் ரூ 8 கோடி: இயக்குநர் கிச்சாவின் ‘தப்புக் கணக்கு’!
» எந்திரன் செலவு ரூ 132 கோடி… வருமானம் ரூ 179 கோடி! – சன் டிவி அறிக்கை
» ரஜினி கோவையில் குடியேறத் திட்டமா?- உதவியாளர் விளக்கம்
» கோடி கொடுத்தாலும் மசியாத ரஜினி, கமல்
» முதல் நாளில் ரூ.32 கோடி…! இருவாரத்தில் ரூ.210 கோடி வசூலித்த சல்மான் கான் படம்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum