தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

‘நிமிர்ந்து நில்’ படத்தில் 2 வேடங்களில் வருகிறேன்: ஜெயம் ரவி

Go down

‘நிமிர்ந்து நில்’ படத்தில் 2 வேடங்களில் வருகிறேன்: ஜெயம் ரவி Empty ‘நிமிர்ந்து நில்’ படத்தில் 2 வேடங்களில் வருகிறேன்: ஜெயம் ரவி

Post  ishwarya Sat Mar 30, 2013 1:05 pm

சமுத்திரகனி இயக்கும் ‘நிமிர்ந்து நில்’ படத்தில் நடிக்கிறார் நடிகர் ஜெயம்ரவி. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக அமலாபால் நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் படம் குறித்து ஜெயம் ரவி கூறும்போது,

நானும், சமுத்திரகனியும் இணையும் முதல் படம் இது. இப்படத்தில் நான் இரு வேடங்களில் நடிக்கிறேன். 20 வயது கதாபாத்திரமாகவும், 40 வயது கதாபாத்திரமாகவும் வருகிறேன். ஒரு கதாபாத்திரம் சமூக சேவை செய்வது போல் அமையும். மற்றொரு கதாபாத்திரம் எந்தவித பிரச்சினையும் கண்டுகொள்ளாத, ஜாலியான கேரக்டராக இருக்கும். இந்த கதாபாத்திரங்களுக்காக நான் நிறைய ஹோம் ஒர்க் செய்திருக்கிறேன்.

இயக்குனர் சமுத்திரகனி படத்தில் எனக்காக நிறைய மெனக்கெட்டிருக்கிறார். எனக்கு நிறைய ஐடியாக்கள் கொடுப்பார். இந்த படம் மிகவும் நன்றாக வரவேண்டும் என்பதில் அவருக்கு முழு ஈடுபாடு உண்டு.

இப்படத்தில் எனக்கு ஜோடியாக அமலாபால் நடிக்கிறார். இவர் ஒரு திறமை வாய்ந்த கதாநாயகி. அவருடன் நடித்தது ரொம்ப ஜாலியாக இருந்தது. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். அவருடைய இசையில் இப்படத்துக்காக ஒரு பாடலை படமாக்கியுள்ளோம். அப்பாடல், தாலாட்டுகிற மாதிரியும், ரொம்பவும் இனிமையாகவும் வந்திருக்கிறது. அவருடைய இசையில் இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய அளவில் வெற்றியடையும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum