தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

‘மூன்றாம் பிறை’ படத்தின் 2-ம் பாகம் தயாராகிறது: கமல், ஸ்ரீதேவிக்கு அழைப்பு

Go down

‘மூன்றாம் பிறை’ படத்தின் 2-ம் பாகம் தயாராகிறது: கமல், ஸ்ரீதேவிக்கு அழைப்பு Empty ‘மூன்றாம் பிறை’ படத்தின் 2-ம் பாகம் தயாராகிறது: கமல், ஸ்ரீதேவிக்கு அழைப்பு

Post  ishwarya Fri Mar 29, 2013 1:51 pm

‘மூன்றாம் பிறை’ படம் 1982-ல் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடியது. கமல் பள்ளி ஆசிரியராகவும், ஸ்ரீதேவி விபத்தில் பழைய நினைவுகளை மறந்து ஏழு வயது பெண்ணுக்குரிய கதாபாத்திரத்திலும் நடித்தனர். கவித்துவமான காதல் கதையாக பாலு மகேந்திரா இயக்கி இருந்தார். இதில் இடம்பெற்றிருந்த கிளைமாக்ஸ் காட்சி பரபரப்பாக பேசப்பட்டது.

இப்படத்தில் இளைய ராஜா இசையில் உருவான ‘கண்ணே கலைமானே’ ‘பொன்மேனி உருகுதே’ ‘பூங்காற்று’ போன்ற பாடல்கள் பட்டி தொட்டியெங்கும் கலக்கின. இதை இந்தியில் ‘சத்மா’ என்ற பெயரில் ‘ரீமேக்’ செய்தனர். அதிலும் கமல் ஸ்ரீதேவியே நடித்தார்கள். அந்த படமும், ஹிட்டானது. அதில் நடித்ததற்காக கமலஹாசனுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது.

இந்த படத்தின் 2-ம் பாகத்தை இந்தி, தமிழில் மீண்டும் எடுக்க ஏற்பாடுகள் நடக்கின்றன. கிளைமாக்சில் கமலை விட்டு பிரியும் ஸ்ரீதேவி நீண்டநாட்களுக்கு பிறகு உண்மை தெரிந்து அவரிடமே திரும்பி வந்து சேர்வது போல் 2-ம் பகுதிகதையை உருவாக்குகின்றனர்.

இதில் கமலும், ஸ்ரீதேவியும் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்று அவர்களை அணுகி பேசி வருகிறார்கள். ஸ்ரீதேவி ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’ படம் மூலம் மீண்டும் சினிமாவுக்கு வந்துள்ளார். கமல் இந்த படத்தில் நடிக்க சம்மதம் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. ‘மூன்றாம் பிறை’ படத்தின் வெற்றியே கிளைமாக்ஸ் சோகமாக முடிவதுதான். 2-ம் பாகத்துக்கு நான் பொருத்தமாக இருப்பேன் என்று கருதவில்லை என்று கூறி விட்டாராம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
»  மூன்றாம் பிறை. இஸ்லாமியர்களைப் பொறுத்தவரையில் பண்டிகைக்கு முக்கியமாக நாளாகக் கருதுகிறார்கள். பொதுவாக, அனைவருக்கும் மூன்றாம் பிறை என்பது காரியங்களைச் செய்வதற்கு எப்படிப்பட்ட நாள்? வளர்பிறையிலேயே மூன்றாம் பிறை மிகச் சிறப்பு வாய்ந்தது. அது தெய்வீகமான பிறை எ
» விஸ்வரூபம் ‘2-ம் பாகம்’ ‘மூ’ என்ற தலைப்பில் தயாராகிறது
» ‘முந்தானை முடிச்சு’ இரண்டாம் பாகம் தயாராகிறது
» வடிவேலு – சிம்புதேவன் சந்திப்பு: இம்சை அரசன் 23-ம் புலிகேசியின் இரண்டாம் பாகம் தயாராகிறது?
» குறையொன்றுமில்லை- மூன்றாம் பாகம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum