தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மண் சரிந்து இறந்த 4 பெண்களின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நஷ்டஈடு: டாக்டர் ராமதாஸ் கோரிக்கை

Go down

 மண் சரிந்து இறந்த 4 பெண்களின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நஷ்டஈடு: டாக்டர் ராமதாஸ் கோரிக்கை  Empty மண் சரிந்து இறந்த 4 பெண்களின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நஷ்டஈடு: டாக்டர் ராமதாஸ் கோரிக்கை

Post  ishwarya Wed Mar 27, 2013 12:23 pm


பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தையடுத்த பட்டணம் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டப்பணியில் ஈடுபட்டிருந்தபோது, மண் சரிந்து விழுந்து 4 பெண்கள் உயிரிழந்தனர் என்ற செய்தி கேட்டு பெரும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். அவர்களை இழந்துவாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அப்பாவி பெண்கள் 4 பேரும் உயிரிழந்ததற்கு பட்டணம் ஊராட்சித் தலைவரும், அதிகாரிகளும் தான் காரணம். ஆபத்தான குகை பகுதியில் மணல் எடுத்தால், மணல் சரிந்து உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். ஆனால், இந்த வேலையை செய்யாவிட்டால் இனி எந்த வேலையும் கிடைக்காது என்று மிரட்டி தமது சொந்த வேலையை செய்யும்படி கட்டாயப்படுத்தியுள்ளார்.

உயிரிழந்த பெண்கள் அனைவரும் 30 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர். அவர்களின் குடும்பங்கள் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாடிக் கொண்டிருக்கின்றன. அவர்கள் அனைவருக்குமே 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் உள்ளனர். அவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டும், இது அரசு கடமை தவறியதால் நிகழ்ந்த விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு என்பதாலும் உயிரிழந்த பெண்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 5 லட்சம் இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு வேலையும் வழங்கவேண்டும். இந்த விபத்தில் காயமடைந்த இருவருக்கும் உயர்தர மருத்துவம் அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
»  டாக்டர் ராமதாஸ் கைது: அறவழியில் பா.ம.க. போராட்டம் தொடரும்-அன்புமணி ராமதாஸ் அறிக்கை
» டாக்டர் ராமதாஸ் கைதை கண்டித்து அரசு பஸ் தீ வைத்து எரிப்பு: ஆயிரக்கணக்கானவர்கள் கைது
» டாக்டர் ராமதாஸ் கைது: 15 நாள் காவலில் வைக்க கோர்ட் உத்தரவு
» விழுப்புரத்தில் இன்று தடையை மீறி ஆர்ப்பாட்டம்: டாக்டர் ராமதாஸ் கைது
»  விழுப்புரம் கோர்ட்டில் டாக்டர் ராமதாஸ் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று நடக்கிறது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum