தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பஞ்சாபில் ஓடும் காரில் இளம்பெண் பாலியல் பலாத்காரம்

Go down

பஞ்சாபில் ஓடும் காரில் இளம்பெண் பாலியல் பலாத்காரம் Empty பஞ்சாபில் ஓடும் காரில் இளம்பெண் பாலியல் பலாத்காரம்

Post  ishwarya Wed Mar 27, 2013 12:19 pm

டெல்லியில் கடந்த ஆண்டு மருத்துவ மாணவி ஒருவரை ஓடும் பஸ்சில் ஒரு கும்பல் கொடூரமாக கற்பழித்தது. இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அதேபோன்ற ஒரு சம்பவம் பஞ்சாபில் நடந்துள்ளது.

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் நேற்று இரவு 20 வயதான இளம்பெண் ஒருவர் பணி முடிந்து வீட்டுக்கு செல்வதற்காக பஸ்சுக்கு காத்திருந்தார். அப்போது காரில் வந்த வாலிபர்கள், அந்தப் பெண்ணை கடத்திச் சென்று காருக்குள் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

பொதுமக்களுக்கு சந்தேகம் வராமல் இருப்பதற்காக காரில் ஸ்பீக்கரை அதிக ஒலியுடன் வைத்துக்கொண்டு, சுமார் 4 மணி நேரம் நகரை சுற்றி வந்துள்ளனர். பின்னர் அந்தப் பெண்ணை கண்டோன்மென்ட் பகுதியில் கீழே தள்ளிவிட்டு சென்றுள்ளனர்.

பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரைத் தேடி வருகின்றனர். அந்த பெண் பலாத்காரம் செய்யப்பட்டதற்கு முன்பாகவும், அதற்குப் பின்னரும் அவரது செல்போனுக்கு வந்த அழைப்புகளில் குறிப்பிட்ட எண்கள் தொடர்பான தகவல்களை சேகரித்து வருகின்றனர். குற்றவாளிகள் அந்த பெண்ணுக்கு தெரிந்த நபர்களாக இருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.

குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் போலீசார் தெரிவிக்கின்றனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» ஒடும் காரில் தலித் சிறுமி பாலியல் பலாத்காரம்! டெல்லியில் மேலும் ஒரு சம்பவம்!
» பவர்கட் நேரத்தில் காரில் கடத்தி சென்று18 வயது பெண் பாலியல் பலாத்காரம்!
» டெல்லியில் பயங்கரம்! ஓடும் பஸ்ஸில் மாணவி பாலியல் பலாத்காரம்!
» டெல்லியில் ஓடும் காரில் இளம் பெண் கற்பழிப்பு
» குடும்பத்தினர் முன்னிலையிலேயே கொடூரமாக இளம்பெண் பலாத்காரம்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum