தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இலங்கை வீரர்களை நீக்கினால் மட்டுமே தமிழ்நாட்டில் ஐ.பி.எல். போட்டிக்கு அனுமதி: பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்

Go down

இலங்கை வீரர்களை நீக்கினால் மட்டுமே தமிழ்நாட்டில் ஐ.பி.எல். போட்டிக்கு அனுமதி: பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம் Empty இலங்கை வீரர்களை நீக்கினால் மட்டுமே தமிழ்நாட்டில் ஐ.பி.எல். போட்டிக்கு அனுமதி: பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்

Post  ishwarya Wed Mar 27, 2013 12:16 pm

சென்னை, மார்ச் 26-

தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

இலங்கைப் பிரச்சினை தொடர்பாக சமீபத்தில் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் விவாதம் நடைபெற்றபோது, தமிழ்நாட்டு மக்கள் தொடர் போராட்டங்கள் நடத்தி தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தினர். இத்தகைய சூழ்நிலையில் சென்னை உள்ளிட்ட நாட்டின் பல்வேறு இடங்களில் ஏப்ரல் 3-ம் தேதி முதல், மே 26-ம் தேதி வரை ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் நடைபெற உள்ளன.

இதில் பங்கேற்கும் அனைத்து அணிகளிலும் இலங்கையின் வீரர்கள் மற்றும் அணி உறுப்பினர்கள் இடம்பெற்றிருக்கிறார்கள். இலங்கையில் நடந்த உள்நாட்டு சண்டையின்போது இலங்கை அரசு ராணுவத்தைப் பயன்படுத்தி, பாதுகாப்பற்ற சூழ்நிலையில் இருந்த தமிழ் மக்களை இனப்படுகொலை செய்தது. இந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சர்வதேச ஊடகங்களில் விரிவாக ஆவணப்படுத்தப்பட்டு கண்டனம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த இனப்படுகொலை தமிழக மக்களிடையே கடும் அதிருப்தியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவினர் உண்ணாவிரதம், தீக்குளிப்பு போன்ற போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இதேபோல் ஆழ்கடலில் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படும் தமிழக மீனவர்களை பாதுகாக்க வேண்டும் என்று தங்களுக்கு தொடர்ந்து கடிதம் எழுதி வருகிறேன்.

இந்த தாக்குதலைக் கண்டித்து தமிழகத்தில் அனைத்துக் கட்சிகளும் குரல் கொடுத்து வருகின்றன. இத்தகைய விரோத போக்கு மற்றும் பதட்டமான சூழ்நிலையில், இலங்கை வீரர்கள் சென்னையில் பல போட்டிகளில் விளையாடுவதால் தமிழர்களின் உணர்வுகளை மேலும் புண்படுத்துவதாக அமையும்.

எனவே, தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, இலங்கை வீரர்களை தமிழகத்தில் விளையாட அனுமதிக்கக்கூடாது. இலங்கையைச் சேர்ந்த வீரர்கள், நடுவர்கள் மற்றும் அதிகாரிகள் ஒருவரும் தமிழ்நாட்டில் நடைபெறும் விளையாட்டில் பங்கேற்கக் கூடாது.

எனவே, இலங்கை வீரர்களை சென்னை போட்டிகளில் சேர்க்கக் கூடாது என்று பி.சி.சி.ஐ.க்கு அரசு அறிவுறுத்த வேண்டும். இலங்கையைச் சேர்ந்த வீரர்கள், நடுவர்கள், அதிகாரிகள் மற்றும் களப்பணியாளர்கள் யாரும் பங்கேற்க மாட்டார்கள் என்று போட்டி அமைப்பாளர்கள் உறுதி அளித்தால் மட்டுமே, ஐ.பி.எல். போட்டிகளை தமிழ் நாட்டில் நடத்த தமிழக அரசு அனுமதி அளிக்கும்.

இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» ஜெயலலிதா கடிதம் எதிரொலி: சென்னையில் நடக்கும் ஐ.பி.எல். போட்டிகளில் இலங்கை வீரர்களுக்கு தடை
» ஜெயலலிதா கடிதம் எதிரொலி: சென்னையில் நடக்கும் ஐ.பி.எல். போட்டிகளில் இலங்கை வீரர்களுக்கு தடை
» 2 இலங்கை வீரர்களை நீக்க சென்னை சூப்பர் கிங்ஸ் முடிவு
» இறுதிப் போட்டிக்கு தெரிவான இலங்கை வலைபந்தாட்ட மகளிர் அணி!
» பிரதமருக்கு கடமைப்பட்டுள்ளேன் : விருந்தில் பங்கேற்ற தனுஷ் பேட்டி!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum