தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பழம்பெரும் நடிகை சுகுமாரி சென்னையில் மரணம்

Go down

 பழம்பெரும் நடிகை சுகுமாரி சென்னையில் மரணம்  Empty பழம்பெரும் நடிகை சுகுமாரி சென்னையில் மரணம்

Post  ishwarya Wed Mar 27, 2013 12:09 pm


சென்னை, மார்ச் 26-

பழம்பெரும் திரைப்பட நடிகை சுகுமாரி (வயது 74). கடந்த சில நாட்களுக்கு முன் கோவிலில் விளக்கு ஏற்றும்போது அவரது புடவையில் தீ பிடித்தது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் பெரும்பாக்கத்தில் உள்ள குளோபல் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு பிளாஸ்டிக் சர்ஜரியும் செய்யப்பட்டிருந்தது. தீவிர சிகிச்சை பெற்று வந்த சுகுமாரியை முதல்வர் ஜெயலலிதா நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நலம் விசாரித்தார்.

இந்நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த சுகுமாரிக்கு இன்று உடல்நிலை மேலும் மோசமடைந்தது. மாரடைப்பும் ஏற்பட்டதால் சிறிது நேரத்தில் அவர் மரணம் அடைந்தார்.

கேரளாவைச் சேர்ந்த சுகுமாரியின் மறைவு அதிர்ச்சி அளிப்பதாக அம்மாநில திரைப்படத்துறை மந்திரி கே.பி.கணேஷ் குமார் தெரிவித்தார். “சென்னை மருத்துவமனையில் இறந்த சுகுமாரியின் உடலை எங்கள் மாநிலத்திற்கு கொண்டு வந்து அடக்கம் செய்ய வேண்டும் என்று விரும்புகிறோம். இதுதொடர்பாக முதல்வர் உம்மன் சாண்டியிடம் பேசினேன். அவர் முழு ஆதரவு தருவதாக உறுதி அளித்திருக்கிறார். எனவே, இப்போது சுகுமாரியின் மகன் சுரேஷ் பீம்சிங்தான இது தொடர்பாக முடிவெடுக்க வேண்டும்” என்றும் அமைச்சர் குமார் தெரிவித்தார்.

10 வயதில் திரைத்துறையில் அறிமுகமான சுகுமாறி 2500-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். 2003-ல் அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. நம்ம கிராமம் என்ற மலையாள படத்திற்காக 2010-ல் அவர் தேசிய விருதினைப் பெற்றார்.

சுகுமாரியின் மறைவுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவும் சுகுமாரியும் ‘பட்டிக்காடா பட்டணமா’ படத்தில் இணைந்து நடித்துள்ளனர். ஏழு நிறங்கள், ஆர்ப்பாட்ட கெட்டிய கிராமத்தில் மற்றும் சிரியோ சிரி ஆகிய படங்கள் சுகுமாரியின் சிறந்த படங்களாகும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum