தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கடைசி டெஸ்டிலும் வெற்றி பெற்று புதிய சரித்திரம் படைத்தது, இந்தியா 3–வது நாளிலேயே பணிந்தது ஆஸ்திரேலியா

Go down

கடைசி டெஸ்டிலும் வெற்றி பெற்று புதிய சரித்திரம் படைத்தது, இந்தியா 3–வது நாளிலேயே பணிந்தது ஆஸ்திரேலியா  Empty கடைசி டெஸ்டிலும் வெற்றி பெற்று புதிய சரித்திரம் படைத்தது, இந்தியா 3–வது நாளிலேயே பணிந்தது ஆஸ்திரேலியா

Post  meenu Tue Mar 26, 2013 4:54 pm

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெல்லியில் நடந்த கடைசி டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி 3–வது நாளிலேயே மகத்தான வெற்றியை ருசித்ததுடன், தொடரையும் 4–0 என்ற கணக்கில் சொந்தமாக்கி புதிய சரித்திரம் படைத்தது.

டெல்லி டெஸ்ட்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி ஒன்றரை மாத கால சுற்றுப்பயணமாக இந்தியா வந்து, ‘பார்டர்–கவாஸ்கர்’ கோப்பைக்கான 4 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. இதில் சென்னை, ஐதராபாத், மொகாலி ஆகிய இடங்களில் நடந்த முதல் 3 டெஸ்டுகளிலும் இந்திய அணி, ஆஸ்திரேலியாவை துவம்சம் செய்து ஏற்கனவே தொடரை தனதாக்கி விட்டது.

இந்த நிலையில் இந்தியா –ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4–வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டெல்லி பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் கடந்த 22–ந்தேதி தொடங்கியது.

சுழல் தாக்கம்

ஆடுகளம் (பிட்ச்) முழுவதும் காணப்பட்ட வெடிப்புகள், சுழற்பந்துவீச்சுக்கு சொர்க்கபுரியாக அமைந்தது. ஆடுகளத்தில் பந்து பயங்கரமாக சுழன்று திரும்பியதுடன், பெரும்பாலான ‘சுழல் பந்துகள்’ முட்டிக்கும் கீழாக தாழ்ந்து சென்றதால் பேட்ஸ்மேன்கள் அதை சமாளிக்க முடியாமல் விழிபிதுங்கி போனார்கள்.

முதல் நாளில் இருந்தே ஆடுகளத்தின் தன்மை இப்படி இருந்ததால் பந்து வீச்சாளர்களின் ஆதிக்கமே கொடிகட்டி பறந்தது. டாஸ் ஜெயித்து முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 262 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய இந்தியா 2–வது நாள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 266 ரன்கள் எடுத்திருந்தது.

லயனுக்கு 7 விக்கெட்

இதைத் தொடர்ந்து 3–வது நாள் ஆட்டம் நேற்று நடந்தது. தொடர்ந்து ஆடிய இந்திய அணி மேற்கொண்டு 6 ரன் மட்டுமே சேர்த்த நிலையில், எஞ்சிய இரு விக்கெட்டுகளையும் சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயனிடம் இழந்தது.

இஷாந்த் ஷர்மா, பிரக்யான் ஓஜா இருவரும் டக்–அவுட் ஆனார்கள். புவனேஷ்வர்குமார் 14 ரன்களுடன் (23 பந்து) களத்தில் இருந்தார். முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 70.2 ஓவர்களில் 272 ரன்களுக்கு ஆல்–அவுட் ஆனது. ஆஸ்திரேலிய தரப்பில் நாதன் லயன் 94 ரன்கள் விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இது அவரது சிறந்த பந்து வீச்சாகும்.

ஜடேஜாவின் ஜாலம்

அடுத்து 10 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2–வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா மறுபடியும் சுழற்பந்து வீச்சில் நிலைகுலைந்தது. இந்த தடவை ஆல்–ரவுண்டர் சுழற்பந்து வீச்சாளரான ரவீந்திர ஜடேஜா சக்கை போடு போட்டார். அவரது பந்து வீச்சில் தொடக்க ஆட்டக்காரர்கள் டேவிட் வார்னர் (8 ரன்), கிளைன் மேக்ஸ்வெல் (8 ரன்) இருவரும் காலியானார்கள்.

அவருக்கு, மற்ற இரு சுழற்பந்து வீச்சாளர்களான அஸ்வின், பிரக்யான் ஓஜா ஆகியோர் பக்கபலமாக இருக்க முதுகெலும்பு உடைந்த ஆஸ்திரேலியாவினால் நிமிரவே முடியவில்லை.

தந்திரமாக வீழ்த்தப்பட்ட சிடில்

முன்னணி பேட்ஸ்மேன்கள் எல்லாம் ‘விக்கெட் அணிவகுப்பு’ நடத்திக் கொண்டிருந்த போது, 9–வது வரிசை பேட்ஸ்மேன் பீட்டர்சிடில் மட்டுமே தாக்குப்பிடித்து ஆடினார். முதல் இன்னிங்சை போலவே இந்த முறையும் இந்திய பவுலர்களுக்கு தண்ணி காட்டினார். மளமளவென அவர் ரன்களை திரட்டிய விதம் இந்திய வீரர்களுக்கு கொஞ்சம் பதற்றத்தை ஏற்படுத்தியது.

பிறகு அவரை, கேப்டன் டோனி சரியாக திட்டமிட்டு, சுழல் வலையில் சிக்க வைத்தார். அரைசதத்தை கடந்ததும் சுழற்பந்து வீச்சாளரின் பந்து வீச்சில் கிரீசை விட்டு இறங்கி வந்து சிக்சர் அடிக்க முயற்சிப்பார் என்ற அவரது எண்ணத்தை முன்கூட்டியே அறிந்த டோனி, அஸ்வினை வைடு வீச வைத்தார். அவரும் ஆப்–சைடுக்கு வெளியே பந்தை வீச, இறங்கி வந்து அடிக்க முயற்சித்த சிடில் (50 ரன், 45 பந்து, 7 பவுண்டரி) கடைசி விக்கெட்டாக ஸ்டம்பிங் செய்யப்பட்டார். இறுதியில் ஆஸ்திரேலியா 2–வது இன்னிங்சில் 164 ரன்களுக்கு சுருண்டது. ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்டுகளை அள்ளினார். இன்னிங்சில் அவர் 5 விக்கெட் எடுப்பது இதுவே முதல் முறையாகும்.

155 ரன்கள் இலக்கு

இதன் மூலம் இந்தியாவுக்கு 155 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இலக்கை நோக்கி முரளிவிஜயும், புஜாராவும் இந்தியாவின் 2–வது இன்னிங்சை தொடங்கினர். விஜய் (11 ரன், 12 பந்து), அவசியம் இல்லாமல் ‘ரிவர்ஸ் ஸ்வீப்’ ஷாட் அடிக்க முயற்சித்து கிளீன் போல்டு ஆனார்.

அடுத்து விராட் கோலி களம் புகுந்தார். புஜாரா–கோலி ஜோடி வெற்றிப்பாதையை சுலபமாக்கியது. குறிப்பாக புஜாரா, கையில் ஏற்பட்ட காயத்தையும் பொறுத்துக் கொண்டு, நெருக்கடியான நேரத்தில் மிக சூப்பராக பேட் செய்தார். ஒரு நாள் போட்டி போன்று ஆக்ரோஷம் காட்டிய அவர் ஜான்சனின் ஒரே ஓவரில் 3 பவுண்டரிகளை ஓட விட்டார்.

அணியின் ஸ்கோர் 123 ரன்களை எட்டிய போது கோலி (41 ரன், 60 பந்து, 4 பவுண்டரி) எல்.பி.டபிள்யூ. ஆனார். அவருக்கு பிறகு வந்த சச்சின் தெண்டுல்கர் (1 ரன்) ஏமாற்றம் அளித்தார். இருப்பினும் சொந்த மண்ணில் அவரது கடைசி டெஸ்டாக இது இருக்கலாம் என்பதால் அவர் ஆட்டம் இழந்து வெளியேறிய போதும் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் எழுந்து நின்று கைதட்டி உற்சாகப்படுத்தினர். அறிமுக வீரர் ரஹானேவுக்கு (1 ரன்) இந்த இன்னிங்சிலும் அதிர்ஷ்டம் இல்லை.

இந்தியா வெற்றி

இவர்களுக்கு பிறகு கேப்டன் டோனி, புஜாராவுடன் ஜோடி சேர்ந்து ஆட்டத்தை தித்திப்புடன் நிறைவு செய்தார். மேக்ஸ்வெல்லின் பந்து வீச்சில் புஜாரா ‘ஹாட்ரிக்’ பவுண்டரி விரட்டி ரசிகர்களுக்கு விருந்து படைத்ததுடன், ஸ்கோரை சமநிலைக்கு கொண்டு வர, கேப்டன் டோனி லயனின் ஓவரில் பவுண்டரி அடித்து வெற்றிக்கான ரன்னை எடுத்தார்.

இந்திய அணி 31.2 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 158 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. புஜாரா 82 ரன்களுடனும் (92 பந்து, 11 பவுண்டரி), டோனி 12 ரன்களுடனும் (14 பந்து, 2 பவுண்டரி) ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

ஒயிட்வாஷ் செய்து சாதனை

இந்த வெற்றியின் மூலம் டெஸ்ட் தொடரை இந்திய அணி 4–0 என்ற கணக்கில் முழுமையாக வசப்படுத்தி புதிய வரலாறு படைத்தது. டெஸ்ட் தொடரில் எதிரணியை ‘டிரா’ கூட செய்ய விடாமல் அனைத்து போட்டிகளிலும் தோற்கடித்து தொடரை வென்றால் அதற்கு ‘ஒயிட்வாஷ்’ என்று பெயர். 81 ஆண்டு காலமாக சர்வதேச டெஸ்ட் விளையாடி வரும் இந்திய அணி 4 போட்டி கொண்ட தொடரில் ஒரு அணியை ஒயிட்வாஷ் ஆக்கி இருப்பது இதுவே முதல் முறையாகும்.

மேலும், கடந்த ஆண்டு தொடக்கத்தில் ஆஸ்திரேலிய மண்ணில் நடந்த 4 டெஸ்டுகளில் இந்திய அணி படுதோல்வி அடைந்திருந்தது. அந்த தோல்விகளுக்கு இந்திய அணி சொந்த மண்ணில் இனிமையாக பழிதீர்த்துக் கொண்டது.

ஆட்டநாயகன் யார்?

முதல் இன்னிங்சில் 43 ரன்கள் எடுத்ததுடன், மொத்தம் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆல்–ரவுண்டராக ஜொலித்த ரவீந்திர ஜடேஜா ஆட்டநாயகன் விருதையும், இந்த தொடரில் மொத்தம் 29 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடம் பிடித்த தமிழகத்தின் அஸ்வின் தொடர் நாயகன் விருதையும் பெற்றனர்.

4 டெஸ்ட் கொண்ட தொடரில் 43 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக ‘ஒயிட் வாஷ்’ ஆன ஆஸ்திரேலிய அணி, இந்தியாவுக்கு வந்து இதுவரை விளையாடிய அணிகளில் மிகவும் மோசமான அணி என்ற அவப்பெயருடன், நாடு திரும்புகிறது.

ஸ்கோர் போர்டு

முதல் இன்னிங்ஸ்

ஆஸ்திரேலியா 262

இந்தியா 272

2–வது இன்னிங்ஸ்

ஆஸ்திரேலியா

வார்னர் எல்.பி.டபிள்யூ. (பி) ஜடேஜா 8

மேக்ஸ்வெல் (பி) ஜடேஜா 8

எட்கோவன் எல்.பி.டபிள்யூ. (பி) ஜடேஜா 24

ஹூக்ஸ் எல்.பி.டபிள்யூ. (பி) அஸ்வின் 6

வாட்சன் (பி) ஓஜா 5

ஸ்டீவன் சுமித்(பி)ஜடேஜா 18

மேத்யூ வேட் (சி) டோனி (பி) ஓஜா 19

ஜான்சன் (பி) ஜடேஜா 0

சிடில் (ஸ்டம்பிங்) டோனி (பி) அஸ்வின் 50

பேட்டின்சன் (பி) இஷாந்த் 11

நாதன் லயன் (நாட்–அவுட்) 5

எக்ஸ்டிரா 10

மொத்தம் (46.3 ஓவர்களில் ஆல்–அவுட்) 164

விக்கெட் வீழ்ச்சி: 1–15, 2–20, 3–41, 4–51, 5–53, 6–94, 7–94, 8–122, 9–157

பந்து வீச்சு விவரம்

புவனேஷ்வர்குமார் 2–0–9–0

அஸ்வின் 15.3–2–55–2

ஜடேஜா 16–2–58–5

பிரக்யான் ஓஜா 11–2–19–2

இஷாந்த் ஷர்மா 2–0–13–1

இந்தியா

விஜய் (பி) மேக்ஸ்வெல் 11

புஜாரா (நாட்–அவுட்) 82

கோலி எல்.பி.டபிள்யூ. (பி) லயன் 41

தெண்டுல்கர் எல்.பி.டபிள்யூ. (பி) லயன் 1

ரஹானே (சி) லயன் (பி) மேக்ஸ்வெல் 1

டோனி (நாட்–அவுட்) 12

எக்ஸ்டிரா 10

மொத்தம் (31.2 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு) 158

விக்கெட் வீழ்ச்சி: 1–19, 2–123, 3–127, 4–128

பந்து வீச்சு விவரம்

நாதன் லயன் 15.2–0–71–2

மேக்ஸ்வெல் 11–0–54–2

ஜான்சன் 2–0–16–0

பேட்டின்சன் 3–0–7–0



‘கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி’ – டோனி

வெற்றிக்கு பிறகு இந்திய கேப்டன் டோனி கூறுகையில், ‘4–0 கணக்கில் தொடரை வென்றது இந்திய அணிக்கு ஊக்கமும், புத்துணர்ச்சியையும் தந்துள்ளது. அணியில் உள்ள ஒவ்வொருவருக்கும் இந்த பெருமையில் (கூட்டு முயற்சி) பங்கு உண்டு. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக டெஸ்ட் போட்டி நமக்கு சிறப்பாக அமையவில்லை. ஆனால் இந்த தொடரில் நமது வீரர்கள் தங்களது முழு திறமையையும் வெளிப்படுத்தி போராடினர். இந்த முடிவு, எனக்கு மிகவும் திருப்தி அளிக்கிறது’ என்றார்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» கடைசி டெஸ்டிலும் வெற்றி பெற்று புதிய சரித்திரம் படைத்தது, இந்தியா 3–வது நாளிலேயே பணிந்தது ஆஸ்திரேலியா
» கண்ணம் ஸ்டைல் படைத்தது யூடியூப் சரித்திரம்
»  ஆஸ்திரேலியா - இந்தியா இடையே 4000-வருட மரபணுத் தொடர்பு
» ஆஸ்திரேலியா - இந்தியா இடையே 4000-வருட மரபணுத் தொடர்பு
» 110 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அபார வெற்றி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum