தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தவசித்திபுரி கோயில்

Go down

தவசித்திபுரி கோயில் Empty தவசித்திபுரி கோயில்

Post  birundha Sun Mar 24, 2013 5:09 pm

ஸ்தல வரலாறு.....

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகாவில் தொண்டியிலிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ளது உப்பூர் சத்திரம் எனும் கிராமம். கடற்கரை அருகே அமைந்துள்ள இந்த கிராமம் முற்காலத்தில் வடமொழியில் `லவணபுரம்' என வழங்கப்பட்டது. லவனம் என்ற வடசொல்லிற்கு தமிழில் `உப்பு' என்று பொருள். இதிலிருந்து உப்பூர் என பெயர் வந்தது.

இங்கு சூரியன் தவம் புரிந்து, சித்தி பெற்று பாவ விமோசனம் பெற்றதால் சூரியபுரி, தவசித்திபுரி, பாவ விமோசனபுரம் ஆகிய பெயர்களும் இத்தலத்திற்கு உண்டு. வன்னி, மந்தாரம் ஆகிய மரங்கள் வளர்ந்திருந்ததால் `வன்னிமந்தார வனம்' எனவும் அழைக்கப்பட்டது.

ஆஞ்சநேயர் மூலம் சீதையின் இருப்பிடத்தை அறிந்த ஸ்ரீராமர் தனது பத்தினியை மீட்க வானர சேனைகளுடன் புறப்பட்டபோது இங்குள்ள வெயிலுகந்த விநாயகரை வணங்கி தனக்கு வெற்றி கிட்ட நல்லாசி வழங்குமாறு வேண்டினார். இக்கோவிலை கட்டியவர் ராமநாதபுரம் மன்னரான பாஸ்கரசேதுபதி ஆவார்.

ஆரம்ப காலங்களில் மரத்தடியில் இருந்த இங்குள்ள விநாயகர், எப்பொழுதும் தன் மேல் வெயில்படும்படியாக கோவிலை அமைக்க வேண்டும் என்று கூறியதால், இங்குள்ள விநாயகர் பெருமான் மீது தட்சிணாயன காலங்களில் தெற்கு பகுதியில் சூரிய வெளிச்சம் படுமாறு கோவில் அமைக்கப்பட்டுள்ளது.

இதேபோல், உத்தராயண காலங்களில் வடக்கு பக்கமாக சூரிய வெளிச்சம் படுகிறது. திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க வெயிலுகந்த விநாயகரை வழிபடுவது சிறப்பு.

திறக்கும் நேரம்....

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum