தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஜனவரி 25-ல் "விஸ்வரூபம்' வெளியீடு - டீ.டி.எச். மூலம் எப்போது?

Go down

 ஜனவரி 25-ல் "விஸ்வரூபம்' வெளியீடு - டீ.டி.எச். மூலம் எப்போது? Empty ஜனவரி 25-ல் "விஸ்வரூபம்' வெளியீடு - டீ.டி.எச். மூலம் எப்போது?

Post  ishwarya Sat Mar 23, 2013 1:00 pm

விஸ்வரூபம்' திரைப்படம் ஜனவரி 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டீ.டி.எச். சேவையின் மூலம் படம் ஒளிபரப்பாகுமா என்பதற்கு கமல் தரப்பில் இருந்து அறிவிப்பு இல்லை.

டீ.டி.எச். சேவை மூலம் திரைப்படத்தை ஒளிபரப்பும் நடிகர் கமல்ஹாசனின் முடிவுக்கு தமிழக திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்து வந்தது.

இதையடுத்து இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடந்தது. முதலில் திரையரங்குகளில்தான் படம் வெளியாகிறது என திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

"விஸ்வரூபம்' பட ரிலீஸ் குறித்து நான்தான் முடிவு செய்வேன் என கமல்ஹாசன் தெரிவித்தார்.

இதனால் இரு தரப்பிலும் குழப்பங்கள் நிலவி வந்தன. இந்நிலையில், நடிகர் கமல்ஹாசனின் தரப்பிலிருந்து வியாழக்கிழமை வெளியான செய்தி அறிக்கை:

"விஸ்வரூபம்' திரைப்படம், திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களின் ஏகோபித்த ஆதரவுடன் ஜனவரி 25-ம் தேதி 500 திரையரங்குகளுக்கு குறையாமல் தமிழகமெங்கும் திரையிடப்படுகிறது. என் தொலைநோக்கைப் புரிந்துக் கொண்டு டீ.டி.எச். எனும் புதிய முயற்சிக்கு துணை நிற்க தயாரான திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்.

தனி மனிதனை மதித்து ஒருங்கிணைத்த அனைவருக்கும் நன்றி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திரையரங்க உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் கமல்ஹாசன் தரப்புகளுக்கிடையே நடந்த பேச்சுவார்த்தையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum