நான் ஈ Vs பொம்மை நாய்கள்
Page 1 of 1
நான் ஈ Vs பொம்மை நாய்கள்
சுஜாதாவின் கனவாக இருந்த 'சயின்ஸ் பிக்ஸன்' கதைகள் தமிழ்சினிமாவில் பெருக ஆரம்பித்திருப்பது தமிழ் சினிமாவின் லேட்டஸ்ட் டிரெண்ட்களில் ஒன்று! 'மகாதீரா' பட இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் தயாராகிவரும் 'நான் ஈ' ஹாலிவுட் தரத்தில் தயாராகி வரும் ஒரு அறிவியல் புனைக்கதை. சமந்தாவை ஞானி காதலிக்க, ஞானியை கொன்று விடுகிறார் சமந்தாவை ஒருதலையாக காதலிக்கும் த்ரி விக்ரம். இறந்துப்போன ஞானி, ஒரு 'ஈ'யாகப் பிறந்து வில்லனை பலிவாங்குவதுதான் 'நான் ஈ'யின் கதை. இதில் ஈயின் அட்டகாசங்கள் அறிவியல் மிரட்டலாக இருக்கும். என்பதில் சந்தேகமில்லை. தற்போது இந்த 'நான் ஈ' படத்துக்கு போட்டியாக களத்தில் இறங்கியிருக்கிறது 'பொம்மை நாய்கள்'. "வாழ்க்கையில் நாம் சந்திக்கிற பல விஷயங்கள் கனவில் வந்துபோகும். அதுபோல இந்தப் படத்தைப் பார்க்கிற ஒவ்வொருவர் கனவிலும் இந்த பொம்மை நாய்கள் வந்துபோகும். இந்த நாய்களுக்கு கடிக்கிற நோய் கிடையாது. ஆனால் கடிக்கணும்கிறது விதி! யாரைக்கடிக்கணும்ன்னு இந்த நாய்களின் எந்திர மூளைக்குள் புரோகிராம் செய்யப்படுகிறதோ அவர்களை மட்டும்தான் கடிக்கும். இந்த நாய்கள் கடிச்சா கண்டிப்பா காயம் ஏற்படாது. ஆனால் கண்டிப்பாக மரணம் வரும்! இப்படி பலபேரோட விதியை இந்த பொம்மை நாய்களின் தலையில் எழுதிவச்ச அந்த பிரம்மன் யார்? எதற்காக இந்த அறிவியல் கொலைகள் என்ற கேள்விகளுக்கான விடைதான் இந்த 'பொம்மை நாய்கள்' என்று எதிர்பார்ப்பைக் கூட்டுகிறார், கலைஞரின் கதை வசனத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு முன் 'கண்ணம்மா' என்ற படத்தை இயக்கிய பாபா விக்ரம். இவர்தான் இந்த பொம்மை நாய்களின் இயக்குநர். கிராபிக்ஸ் மற்றும் ஸ்பெஷல் எபெக்டுகளுக்கு மட்டுமே பட்ஜெட்டில் பாதியை செலவழித்து இருக்கிறார்களாம்! கருணாஸ்- கோவை சரளா இருவரும் குறவன் - குறத்தியாக ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டிருக்கிறார்களாம். அதேபோல கவர்ச்சி நடிகை பாபிலோனாவை, சீனியர் நடிகரான வி.எஸ்.ராகவனுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைத்திருக்கிறாராம். நேற்று இப்படத்தின் பாடல்கள் வெளியானது. நம்மள கடிக்காம இருந்தா சரி!
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மறுபடியும் நீயும் பொம்மை… நானும் பொம்மை!
» நன்றி உள்ள நாய்கள்
» முடிவுக்கு வந்த நடுநிசி நாய்கள்
» சர்ச்சையை கிளப்பும் நடுநிசி நாய்கள்
» முதியவர்கள் வளர்க்கக்கூடிய 7 வகையான நாய்கள்!!!
» நன்றி உள்ள நாய்கள்
» முடிவுக்கு வந்த நடுநிசி நாய்கள்
» சர்ச்சையை கிளப்பும் நடுநிசி நாய்கள்
» முதியவர்கள் வளர்க்கக்கூடிய 7 வகையான நாய்கள்!!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum