தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பிறந்த நாளையொட்டி நிமிடத்திற்கு 126 முத்தங்கள் பெற்று கின்னஸ் சாதனை படைக்க விரும்பும் பாகிஸ்தான் நடிகை வீணா மாலிக்

Go down

பிறந்த நாளையொட்டி நிமிடத்திற்கு 126 முத்தங்கள் பெற்று கின்னஸ் சாதனை படைக்க விரும்பும் பாகிஸ்தான் நடிகை வீணா மாலிக் Empty பிறந்த நாளையொட்டி நிமிடத்திற்கு 126 முத்தங்கள் பெற்று கின்னஸ் சாதனை படைக்க விரும்பும் பாகிஸ்தான் நடிகை வீணா மாலிக்

Post  ishwarya Sat Mar 16, 2013 1:25 pm

பாகிஸ்தானை சேர்ந்த பிரபல உருது நடிகை வீணா மாலிக்.

உருது மட்டுமின்றி இந்தி, தெலுங்கு, பஞ்சாபி, கன்னட மொழி சினிமாக்களிலும் தற்போது இவர் நடித்து வருகிறார்.

இந்த வரிசையில் ‘த சிட்டி தட் நெவர் ஸ்லீப்ஸ்’ என்ற இந்தி படத்தில் நடிக்க வீணா மாலிக் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இப்படத்தின் கதாநாயகன் மற்றும் துணை நடிகர்-நடிகைகளுக்கான தேர்வு கடந்த 15-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

இன்று (பிப்ரவரி 26) வீணா மாலிக்கின் பிறந்த நாள். இதனையொட்டி, முந்தைய கின்னஸ் சாதனையை முறியடிக்கும் முயற்சியில் அவர் களமிறங்கி உள்ளார்.

அந்த முயற்சி என்ன தெரியுமா?

ஒரு நிமிடத்திற்குள் 126 பேரிடம் இருந்து முத்தம் பெற வேண்டும். இந்த முயற்சியில் அவர் வெற்றி பெற்று விட்டால், ‘அரபிகிடன்’ படப்பிடிப்பு தளத்தில் ஜப்பானை சேர்ந்த டனோ ஷிங்கோவின் முந்தைய ஒரு நிமிட கின்னஸ் சாதனையான 125 முத்தம் என்ற பழைய சாதனையை வீணா மாலிக் முறியடித்து விடுவார்.

இதுகுறித்து வீணா மாலிக் கூறுகையில்,

‘இந்த முத்தமிடும் நிகழ்ச்சியின் மூலம் முந்தைய கின்னஸ் சாதனையை முறியடித்து விட்டால், இதை எனது பிறந்த நாளையொட்டி கிடைத்த மிகப்பெரிய பரிசாக கருதுவேன்.

த சிட்டி தட் நெவர் ஸ்லீப்ஸ் படத்தில் நடிப்பதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர்கள் என்னை முத்தமிட உள்ளனர். இது எனக்கு பேரானந்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிகழ்ச்சியின் மூலம் கின்னஸ் புத்தகத்தில் எனது பெயரும் இடம்பெற செய்யும் அரிய வாய்ப்பை வழங்கிய படத்தின் தயாரிப்பாளர் சதீஷ் ரெட்டி, இயக்குனர் ஹாரூண் ரஷீத் ஆகியோருக்கு நன்றி கூறுகிறேன்’ என்றார்.

கின்னஸ் புத்தகத்தில் வீணா மாலிக் இடம் பிடிப்பாரா? என்பது நாளை தெரிந்து விடும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» பிறந்த நாளையொட்டி நிமிடத்திற்கு 126 முத்தங்கள் பெற்று கின்னஸ் சாதனை படைக்க விரும்பும் பாகிஸ்தான் நடிகை வீணா மாலிக்.
» முத்தம் வாங்கி வீணா மாலிக் சாதனை
» 20 ஆயிரம் ரசிகர்களுக்கு மத்தியில் சிக்கி கொண்ட வீணா மாலிக்!
» கன்னடத்தில் ரீமேக்காகும் டர்ட்டி பிக்சர்: சில்க் வேடத்தில் வீணா மாலிக்
» ‘மசாஜ்’ செய்வதில் கிரிக்கெட் வீரர் ஆசிப் ‘சூப்பர்’… புளகாங்கிதமடையும் வீணா மாலிக்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum