தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கோவைக்காய் துவையல்

Go down

கோவைக்காய் துவையல் Empty கோவைக்காய் துவையல்

Post  ishwarya Fri Mar 15, 2013 12:37 pm

தேவையானவை:

கோவைக்காய் - 100 கிராம்
உளுத்தம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 6
தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன்
புளி - நெல்லிக்காய் அளவு
கடுகு, பெருங்காயத்தூள், சீரகம், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

• கோவைக்காயை சுத்தம் செய்து, மெல்லிய சிறுசிறு துண்டுகளாக நறுக்கவும்.

• வாணலியில் எண்ணெயை காயவிட்டு உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாயை வறுத்து எடுக்கவும். பின்பு அதே எண்ணெயில் கோவைக்காயை சேர்த்து, அடுப்பை 'சிம்’மில் வைத்து வேகும் வரை வதக்கவும்.

• இதனுடன் புளியை சேர்த்து ஒரு முறை புரட்டி எடுக்கவும்.

• இதனுடன் தேங்காய் துருவல், வறுத்து வைத்த உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து அரைக்கவும்.

• கடைசியாக கடுகு, சீரகம், பெருங்காயத்தூள் தாளித்து இதில் சேர்த்தால் சுவையான கோவைக்காய் துவையல் ரெடி!

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum